சத்துக்களை வாரி வழங்கும் அட்சய பாத்திரம் பப்பாளிப்பழம்!

Papaya fruit
Papaya fruit

ப்பாளி பழத்தின் பூர்வீகப் பெயர் பறங்கிப்பழம். இது சுமார் 50 வகையான நோய்களை குணப்படுத்தும் மருத்துவ குணங்களைக் கொண்டது. அதிக இரத்த அழுத்தம் உள்ளவர்கள், சர்க்கரை நோய் உள்ளவர்கள், உடல் கொழுப்பு மிகுதியால் அவதிப்படுகிறவர்கள் என அனைத்துத் தரப்பினரும் சாப்பிட உகந்த பழம் பப்பாளி. நுரையீரல் பிரச்னைகளை சரி செய்ய 200 கிராம் பப்பாளி தினமும் சாப்பிட சரியாகும்.

இதில் நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட்டுகள், வைட்டமின் சி போன்ற பல்வேறு ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. குறிப்பாக, பப்பாளி உட்கொள்வது இரத்த அழுத்த நோயாளிகளுக்கு நன்மை தருகிறது. கோடைக்காலத்தில் பப்பாளியை சரியான நேரத்தில் உட்கொள்வதன் மூலம் ஏராளமான ஆரோக்கிய நன்மைகளைப் பெறலாம்.

பப்பாளியில் உள்ள சர்க்கரை இரத்தத்தில் கலக்காமல் வைட்டமின் ‘ஏ’ யை உற்பத்தி செய்து இரத்தத்தில் கலக்கிறது என்கிறது மருத்துவ ஆராய்ச்சி. மேலும், நோய் கிருமிகளை அண்ட விடாமல் இரத்தத்தை சுத்தமாக வைத்துக்கொள்ள உதவுகிறது. பப்பாளி பழத்தில் அதிகளவு நார்ச்சத்துக்கள் மற்றும் குறைந்த அளவிலான கிளைசெமிக் இன்டெக்ஸ் நிறைந்துள்ளது. எனவே, பப்பாளியை உட்கொள்வது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்தி, இன்சுலின் உணர்திறனை மேம்படுத்த உதவுகிறது. மேலும், பப்பாளியில் உள்ள பீட்டா கரோட்டீன் போன்ற ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நீரிழிவு நோய் தொடர்பான சிக்கல்களின் அபாயத்தைக் குறைக்க உதவுகிறது.

தினமும் பப்பாளி சாப்பிட பித்தத்தை தெளிய வைக்கும். கல்லீரல், கணையம், சிறுநீரகம், பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு பிரச்னை, இரத்த சோகை என பல்வேறு நோய்களை எதிர்க்கும் சக்திகளையும் உற்பத்தி செய்யும். பப்பாளி பழத்தை தினமும் 250 கிராம் சாப்பிட்டு வர சிறுநீரில் உள்ள சர்க்கரை அளவு வெகுவாகக் குறையும்.

குழந்தை பெற்ற பெண்கள் பப்பாளி காயை சமைத்து சாப்பிட்டால் தாய்ப்பால் அதிகம் சுரக்கும். ஆன்டிபயாடிக் மருந்துகளை அதிகமாக எடுத்துக் கொள்கிறவர்களுக்கு குடல் தசைகளில் அரிக்கப்பட்டிருக்கும் பாக்டீரியாக்கள் பப்பாளி சாப்பிட சுத்தமாகிவிடும். எனவே, மருத்துவ சிகிச்சை பெற்று வருகிறவர்கள் அவசியம் பப்பாளி சாப்பிட வேண்டும். குழந்தைகளை அதிகம் பாதிக்கும் குடல் நாடா புழுக்களை முற்றிலும் அழிக்கும் ஆற்றல் மிக்கது பப்பாளி பழம்.

கோடைக்காலத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியமாகும். எனவே உடலை நீரேற்றமாக வைத்திருக்க பப்பாளியை பகலில் சாப்பிடலாம். மேலும், பப்பாளியில் அதிகளவு நீராதாரம் நிறைந்துள்ளதால், இவை உடலில் நீரிழப்பு ஏற்படாமல் பாதுகாக்க உதவுகிறது. கூடுதலாக, உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களையும் பப்பாளி தருகிறது.

இதையும் படியுங்கள்:
மைதா உணவுகளை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது தெரியுமா? மீறி சாப்பிட்டா? 
Papaya fruit

பப்பாளியில் பாக்டீரியா எதிர்ப்புப் பண்புகள் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகள் நிறைந்துள்ளன. இவை சருமப் பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது. மேலும், சருமத்தில் ஏற்படும் வீக்கத்தைக் கட்டுப்படுத்தவும் பப்பாளி உதவுகிறது. பப்பாளி பழ கூழ், மஞ்சள் தூள், விளக்கெண்ணெய் கலந்து கால் பாதங்களில் தடவி வர கால் பாத வெடிப்புகள் நீங்கி பாதங்கள் அழகாகும். பேரீச்சம் பழம், கிஸ்மிஸ் பழத்தை வென்னீரில் ஊற வைத்து அதனுடன் பப்பாளி பழக்கூழை கலந்து முகத்தில் தேய்த்து வர, முகம் புதுப்பொலிவு பெறும். கரும்புள்ளிகள் மறையும். பல்வேறு சரும பிரச்னைகளைத் தடுக்க உதவுகிறது.

பப்பாளியில் ஃபோலிக் அமிலம் மற்றும் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை வழுக்கையைத் தடுக்க உதவுகிறது. இது மயிர்க்கால்களுக்கு இரத்த ஓட்டம், ஆக்ஸிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை அளிக்கிறது. மேலும் இது ஆரோக்கியமான முடி வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதன் மூலம் கோடைக்காலத்தில் ஏற்படும் முடி சார்ந்த பிரச்னைகளிலிருந்து விடுபடலாம்.

பப்பாளி இலை சாறு அருந்துவது உடலில் நோயெதிர்ப்புச் சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இதன் பண்புகள் பல்வேறு நோய்த்தொற்றுக்களிலிருந்து உடலைப் பாதுகாக்க உதவுகிறது.பப்பாளிஇலை சாறு 30 மில்லி 3 நாட்கள் சாப்பிட வைரஸ் காய்ச்சல் கட்டுப்படும்.

பப்பாளி பழத்தில் நன்மை தரும் சேர்மங்கள் நிறைந்துள்ளதுடன், புரதங்களை உடைக்க உதவும் செரிமான நொதியான பாப்பைன் நிறைந்து காணப்படுகின்றது. இவை செரிமான அமைப்பிற்கு உணவை திறம்பட பதப்படுத்த உதவுகின்றது. பப்பாளி கரோட்டினாய்டுகள், ஆல்கலாய்டுகள், மோனோடெர்பெனாய்டுகள், ஃபிளாவனாய்டுகள் மற்றும் வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் ஆகியவை நிறைந்துள்ளது. பப்பாளியின் பால் எய்ட்ஸ்யையும், புற்றுநோய்யையும். கட்டுப்படுத்தும்.

பப்பாளி அதிகம் சாப்பிட கர்ப்பிணிகளுக்கு கருச்சிதைவு ஏற்படும், உணவுக் குழாய் தடை பட வாய்ப்பு உள்ளது. சர்க்கரை அளவு குறையும் அபாயம் உள்ளது. பப்பாளி விதை ஆண்மையை பாதிக்கும், வயிற்று பிரச்னை ஏற்படும், அறுவை சிகிச்சை செய்வோர் பப்பாளி சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும், பப்பாளியிலுள்ள சில சேர்மங்கள் இதயத் துடிப்பை அதிகரிக்கும். பப்பாளியை தோல் நீக்கி சாப்பிட வேண்டும். இல்லையெனில் உடலில் நச்சுத்தன்மை அதிகரிக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com