உருளைக்கிழங்கு வெந்ததும், முதல் வேலையாக நாம் உரித்து, குப்பையில் வீசி எறியும் உருளைக்கிழங்கு தோலில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, பொட்டாசியம், பாஸ்பரஸ், தாமிரம், வைட்டமின் சி, வைட்டமின் பி உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. இவை அனைத்தும் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தி, தொற்று நோய்கள் ஏற்படாமல் தடுக்கின்றன.
உருளைக்கிழங்கு தோலின் ஆரோக்கிய நன்மைகள்:
உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் இருக்கும் கொழுப்பின் அளவை குறைத்து இதய நோய் அபாயம் ஏற்படுவதை தடுக்கும்.
மேலும் இதில் இருக்கும் பொட்டாசியம் இதயத்திற்கு நல்லது இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான அபாயத்தை கணிசமாக குறைக்கும்.
உருளைக்கிழங்கு தோலில் அதிக அளவு இரும்பு சத்து உள்ளதால், ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து, ரத்த சோகை ஆபத்தையும் குறைக்கும்.
உருளைக்கிழங்கினால் ஏற்படும் வாய்வுத் தொல்லைக்கு அதன் தோலே சரியான மருந்து ஆகும். தோலுடன் உருளைக்கிழங்கை சமைத்து சாப்பிட்டால், வாய்வு தொல்லை வராது.
உருளைக்கிழங்கு தோலில் இருக்கும் பைட்டோ கெமிக்கல் சக்தி வாய்ந்த ஆன்ட்டி ஆக்ஸிடன்டாகச் செயல்படுகின்றது. மேலும் அவற்றில் குளோரோஜெனிக் அமிலங்களும் உள்ளன. இவை அனைத்தும் உடலை புற்றுநோயுலிருந்து பாதுக்காகும்.
உருளைக்கிழங்கில் சிக்கலான கார்போஹைட்ரேட்டுகள் நிறைந்துள்ளதால் அவற்றை மாவுச்சத்து நிறைந்த காய்கறியாக மாற்றுகிறது. உருளைக்கிழங்கு தோலை சாப்பிடுவதால் நம் உடலுக்கு நார்ச்சத்து கிடைக்கிறது. இந்த சத்துக்கள் இரத்த குளுக்கோஸ் அளவையும் கட்டுக்குள் வைத்திருக்க உதவுகின்றன.
உருளைக்கிழங்கு தோலில் கால்சியம் மிகுந்து காணப்படுவதால், சமைக்கும்போது தோலுடன் சேர்த்து சமைத்து சாப்பிட்டால் எலும்புகள் மற்றும் பற்கள் உறுதியாகும்.
உருளைக்கிழங்கு தோலில் உள்ள பொட்டாசியம், உடலின் சிறந்த வளர்சிதை மாற்றத்திற்கும், உடலில் புதிய செல் உருவாக்கத்திற்கு ஆற்றலையும் அளிக்கிறது.
இனிமேல் உருளைக்கிழங்கு சமைக்கும் போது, தோலை உரித்து வீசி எறியாமல், தோலுடன் சமைத்து, உருளைக்கிழங்கின் முழுமையான பலன்களையும் பெறலாமே..