அரிசி பொரியிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகள்!

அரிசி பொரி
அரிசி பொரிhttps://smithakalluraya.com
Published on

பொதுவாக, அரிசி பொரி (Puffed Rice) என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஓர் உணவு. இதை வெல்லப் பாகில் கலந்து உருண்டைகளாகப் பிடித்து குழைந்தைகளுக்கு கொடுக்க, அது ஒரு சத்தான ஸ்நாக்ஸ் ஆகும். சரஸ்வதி பூஜை, திருக்கார்த்திகை, கணேஷ் சதுர்த்தி போன்ற பண்டிகை காலங்களில் சாமிக்குப் படைக்கப்படும் பொருட்களில் அரிசி பொரி முக்கிய இடம் பிடிக்கும். இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகள் என்னென்ன என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

அரிசி பொரி ஒரு கனமில்லாத உணவுப் பொருள். குறைந்த கலோரி அளவு கொண்டது. எடைப் பராமரிப்பில் கவனம் செலுத்துவோருக்கு ஏற்ற ஸ்நாக்ஸ். இதன் மிருதுத்தன்மை வயிற்றினுள் எவ்வித சலசலப்பும் உண்டுபண்ணாமல் சுலபமான  செரிமானத்துக்கு உதவும்.

அரிசி பொரியில் கார்போஹைட்ரேட்ஸ் சத்து அதிகம் உள்ளது. எனவே, இதை உண்ணும்போது உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கிறது.அரிசி பொரி ஒரு க்ளூட்டன் ஃபிரீ (Gluten Free)யான உணவு.  க்ளூட்டன் சகிப்புத்தன்மை இல்லாதவர்கள் மற்றும் செலியாக் (Celiac) நோய் உள்ளவர்களும் உண்பதற்கு உகந்த ஸ்நாக்ஸ் அரிசி பொரி. இதனுடன் உடைத்த கடலை (Fried gram) மற்றும் சிறிது நாட்டுச் சர்க்கரை கலந்து உண்ணும்போது புரோட்டீன் மற்றும் இரும்புச் சத்து போன்ற மேலும் பல நன்மைகள் கிடைக்கும்.

இதில் கொழுப்புச் சத்து மிகக் குறைவான அளவில் உள்ளது. எனவே, கொலஸ்ட்ரால் உள்ளவர்களும் உண்பதற்கு பாதுகாப்பானது. இது சாதாரணமாக எல்லா இடங்களிலும் கிடைக்கக் கூடியது. விலையும் குறைவானது.

இதையும் படியுங்கள்:
நாளை நடைபெறும் பிரசித்தி பெற்ற காரைக்கால் மாங்கனி திருவிழா!
அரிசி பொரி

அனைத்துத் தரப்பினரும் வாங்கி உண்ணத் தகுந்த பாக்கெட் ஃபிரன்ட்லியான உணவு. இதை மிக்ஸ்சர் போன்ற கார வகை ஸ்நாக்ஸில் கலந்தும் பஃப்ட் ரைஸ் பார் போன்ற இனிப்பு வகையாக செய்தும் உண்ணலாம்.

இதிலுள்ள ஆரோக்கிய நன்மைகளை கவனத்தில் கொண்டு குழந்தைகளும் வயதானவர்களும் அடிக்கடி இதனை உட்கொண்டு பயன் பெறலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com