
சிவப்பு தண்டுக்கீரையில் கால்சியம் சத்து அதிகம் இருப்பதால் எலும்பு, பல், தலைமுடிக்கு வலுவூட்டுகிறது. சிவப்பு தண்டுக்கீரையில் இரும்புச் சத்தும், கால்சியம் சத்தும் அதிகமாக இருப்பதால் ரத்த சோகை, மூட்டு வலி, முதுகு வலி போன்ற தொந்தரவுகள் இருப்பவர்கள் எடுத்துக் கொள்வது மிகவும் சிறந்தது.
அதிக உடல் பருமன் கொண்டவர்கள் மற்றும் எடையை குறைக்க விரும்புபவர்களுக்கு சிவப்பு தண்டுக்கீரை ஒரு அருமருந்தாகும். இந்த கீரையை தொடர்ந்து சாப்பிட்டு வரும் பொழுது முதுமை தோற்றத்தை தடுத்து உடலை என்றும் இளமையாக வைத்துக் கொள்ள உதவும்.
கருவுற்ற பெண்கள், தினமும் அரை கப் சிவப்பு தண்டுக்கீரைச் சாற்றுடன், ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து அருந்தி வந்தால், மகப்பேறு எளிதாக நடக்கும். குழந்தையும் நல்ல வளர்ச்சியுடன் காணப்படும்.
சிவப்பு கீரையில் உள்ள அதிகப்படியான நார்ச்சத்து, பெருங்குடலை சுத்தம் செய்து, குடல் இயக்கத்தை சீராக்க உதவுகிறது. சிவப்பு தண்டுகீரையில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் மலச்சிக்கல் மூல நோய் போன்ற பிரச்சனை உள்ளவர்களுக்கு இது ஒரு அருமருந்தாகும்.
இக்கீரையை அடிக்கடி உணவில் தொடர்ந்து எடுத்துக் கொண்டால் இப்பாதிப்புகள் குறைய தொடங்கும். வாய் துர்நாற்றம் நீக்குவதில், சிவப்பு தண்டுக்கீரைக்கு பெரும்பங்கு உண்டு. சிவப்பு தண்டுக்கீரை வயிற்றுப் புண்ணை நீக்குவதன் மூலம், வாய் துர்நாற்றத்தையும் நீக்க வல்லது. சிவப்பு தண்டுக்கீரையை உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் எடுத்துக் கொண்டு வந்தால், ரத்த அழுத்தம் குறையத் தொடங்கும்.
சிவப்பு தண்டுக்கீரை ரத்தத்தில் உள்ள வெள்ளை அணுக்களின் உற்பத்தியை அதிகரித்து நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக்கூடியது. பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகளை குறைக்கும் தன்மை இந்த சிவப்பு தண்டுக்கீரையில் உள்ளது.
பித்தம், மிகுதியாக உள்ளவர்கள், சிவப்பு தண்டுக்கீரையை நன்கு பயன்படுத்தலாம். இதன் தண்டைச் சாப்பிட்டு வந்தால், சிறுநீர் நன்கு போவதால், உடலில் பித்தம் குறைந்து, உடல் நலம் மேம்படும்.
சிவப்பு தண்டுக்கீரை, கருப்பையில் தங்கி இருக்கக்கூடிய நச்சுக்களை முற்றிலும் வெளியேற்றி, கருப்பையை சுத்தமாக்கும். எனவே, நாளடைவில் பெண்கள் கருத்தரிக்கும் நிலை உண்டாகும். பெண்களுக்கு கருப்பை தொடர்பான பிரச்சனைகளை, குறைக்கக்கூடிய தன்மை, சிவப்பு தண்டுக்கீரையில் அதிகம் உள்ளது.
நாள்பட்ட நோய்க்கு சிகிச்சையளிப்பதில் பீட்டா கரோட்டின் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். சிவப்பு கீரையில் பீட்டா கரோட்டின் மிகுந்து உள்ளது மற்றும் ஆஸ்துமா வராமல் தடுக்கும் ஊட்டச்சத்துக்களும் உள்ளன. இது மூச்சுக்குழாய் குழாய்களில் உள்ள தடைகளை நீக்குகிறது.
(முக்கிய அறிவிப்பு: இக்கட்டுரையில் உள்ள தகவல்கள், பல்வேறு செய்திகளின் தொகுப்பாக மட்டுமே வழங்கப்படுகின்றன. இவை மருத்துவ நிபுணர்களின் ஆலோசனைகள் அல்ல. உடல்நலம் தொடர்பான எந்தவொரு சந்தேகத்துக்கும் பிரச்னைக்கும், அவசியம் மருத்துவரை அணுகவும்.)