
1. கோரைக்கிழங்கை காய வைத்து தூள் செய்துகொண்டு, அரை தேக்கரண்டி வீதம் தினமும் காலை, மாலை என இருவேளைகளில் ஒரு டம்ளர் பாலில் கலந்து குடிக்க மூட்டு வலி, தசைவலி குணமாகும்.
2. இஞ்சி செரிமானத்துக்கு மிகவும் முக்கியம். இஞ்சி கலந்த வெந்நீரை காலை, மாலை இரு வேளை குடிக்கலாம். இதனால் செரிமானம் ஏற்படும்.
3. மலச்சிக்கலுக்கு நல்ல மருந்தான அத்திப்பழம். இருமல், தொண்டை எரிச்சலை கட்டுப்படுத்துவதுடன் கல்லீரல் வீக்கத்தையும் குணப்படுத்தும்.
4. சாப்பிட்ட பின்பு உப்பு கலந்த நீரால் வாய் கொப்பளித்தால் பல் சம்பந்தமான எந்த நோயும் வராது.
5. ரத்தசோகை ஏற்படாமல் இருக்க முளைக்கீரை, அரைக்கீரை, மணத்தக்காளிக் கீரை, குப்பைக்கீரை, பசலக்கீரை போன்றவற்றில் தினமும் எதாவது ஒரு கீரையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
6. வயிற்றில் சிலருக்கு அடிக்கடி வாயு சேர்ந்து விடும். அதனால் வயிற்று வலி ஏற்படலாம். அதைத் தவிர்க்க, மிதமான சுடுநீரில் ஒரு சிட்டிகை பெருங்காயப்பொடி சேர்த்து குடிக்க வாயு நீங்கும், வயிற்று வலியும் நீங்கி விடும்.
7. வறட்டு இருமலுக்கு கைகண்ட மருந்து கடுகு. கடுகை வறுத்துப் பொடித்து தண்ணீரில் கலந்து அரைமணி நேரம் அப்படியே வைத்து விடுங்கள். பிறகு தெளிந்த நீரை மட்டும் எடுத்துக் குடித்தால் வறட்டு இருமல் விலகி விடும்.
8. தக்காளிப் பழத்துடன், அன்னாசிப் பழச்சாறு, சீரகப்பொடி சேர்த்துக் குடித்து வந்தால் ரத்தக்குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க முடியும்.
9. வல்லாரக்கீரை மூளைக்கு மட்டுமல்ல, பற்களுக்கும் சிறந்தது. வல்லாரைப் பொடியை பயன்படுத்தி பல் துலக்கினால், பற்களில் உள்ள கறைகள் நீங்கும்.
10. உடம்பில் வியர்க்குரு, அரிப்பு இருந்தால், வடித்த கஞ்சியை ஆற வைத்து, உடம்பில் தடவி, சிறிது நேரம் ஊற வைத்துக் குளிக்கவும். நாளைடைவில் குணமாகும்.
11. செம்பரத்திப்பூ இதழ்கள் ஒரு கைப்பிடி எடுத்துக் கொள்ளுங்கள். அதை இரண்டு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து ஒரு டம்ளர் அளவுக்கு சுண்ட விடவும். பிறகு செம்பரத்திப் பூக்களை நீக்கி விட்டு, பனைவெல்லம், நாட்டுச் சர்க்கரை அல்லது தேன் கலந்து பருகவும். ரத்தவிருத்திக்கு மிகச் சிறந்த தேநீர் இது. கருப்பைக்கும் பலம் சேர்க்கும்.
12. இரவு படுக்கப் போகும் முன் பாலில் ஒரு ஸ்பூன் தேன் கலந்து குடித்தால் நல்ல தூக்கம் கிடைக்கும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)