தொட்டால் சிணுங்கி இலையை அரைத்து, எலுமிச்சையளவு மோரில் கலந்து மூன்று நாள் சாப்பிட வயிற்றுக் கடுப்பு குணமாகும். உடல் குளிர்ச்சியாகும். வயிற்றுப்புண்ணும் ஆறும்.
தொட்டால் சிணுங்கி இலையை சாறு எடுத்து அதை மேனியில் ஏற்படும் படை, தேமல் ஆகியவற்றின் மீது தடவ, அவை விரைவில் குணமாகும்.
தொட்டால் சிணுங்கி வேரையும், இலையையும் சம அளவில் எடுத்து உலர்த்தி துணியில் சலித்து பசும்பாலில் கலந்து குடிக்க மூலச்சூடு குறையும்.
தொட்டால் சிணுங்கி இலையைக் களிமண்ணுடன் அரைத்து பற்றாக இட்டால் வாத வீக்கம் குறையும்.
தொட்டால் சிணுங்கி இலையை தண்ணீர் விட்டு வேக வைத்து அந்த தண்ணீரை இடுப்பிற்குத் தாங்கும் படியான சூட்டில் தாரையாக விட, இடுப்பு வலி குறையும்.
தொட்டால் சுருங்கி இலையைப் பறித்து சுத்தம் செய்து, அதனுடன் தேவையான அளவில் சிறுவெங்காயத்தையும், சீரகத்தையும் சேர்த்து அரைத்து, பசு மோரில் கலந்து, பெண்கள் அருந்த, மாதவிடாய் காலத்தில் ஏற்படும் உதிர போக்கு குறையும்,.
தொட்டாற்சுருங்கி இலைச்சாறை தேமல் மேல் பூசிவர தேமல் குறையும்.
தொட்டாற் சுருங்கி இலை, வேர் இரண்டையும் காய வைத்து பொடி செய்து பாலில் கலந்து தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க சர்க்கரை நோய் குறையும்.