
முகம்மது நபி உடல் நோய்களுக்கு சில மருத்துவக் குறிப்புகளை வழங்கியுள்ளார். அதை 'திப்ப நபவீ' - நபிகள் மருந்து என்கிறார்கள். அவர் தனது குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் மருந்துவ குறிப்புகளை கொடுத்தார்.
நபிகள் நாயகம் அவர்கள் பயன்படுத்திய மருந்து வகைகளில் இரசாயன சேர்க்கைகள் போன்றவை இல்லை. மாறாக, அவர்களின் மருந்துகளில் பெரும்பாலானவை ஒரே ஒரு மூலப்பொருளை மட்டுமே கொண்டிருந்தன. சில சமயங்களில், மருந்துக்கு உதவுவதற்காக அல்லது அதை நன்றாக சுவைக்க வேறு ஒரு பொருளை சேர்த்துக்கொள்வார்.
ஆரோக்கியம் காக்க நபிகள் கூறிய 5 விதிகள்:
* மிதமாக சாப்பிடுங்கள்,
* மெதுவாக சாப்பிடுங்கள்,
* மெதுவாக சுவாசியுங்கள்,
* உடற்பயிற்சி மற்றும் தூக்கத்திற்கு முக்கியத்துவம் கொடுங்கள்,
* அவ்வப்போது உண்ணாவிரதம் இருங்கள்
நபிகள் நாயகத்தால் பரிந்துரைக்கப்பட்ட பழங்கள், காய்கறிகள் :
பேரீச்சை, மாதுளை, தர்பூசணி, இலந்தைப் பழம், திராட்சை, அத்திப்பழம், சுரைக்காய், வெள்ளிரிக்காய்.
குரலில் இனிமை ஏற்பட : வெண்ணெயுடன் பேரீச்சம் பழத்தை சேர்த்து சாப்பிட வேண்டும். மாதுளம் பழம், முள்ளங்கி, எள், பூண்டு உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
உடலில் சதை பிடிக்க: பாலில் 'அக்ரூட்' பருப்பை அரைத்துக் கலந்து சாப்பிட வேண்டும். திராட்சை, ஆலிவ் எண்ணெய், வெண்ணெயுடன் பேரீச்சம் பழத்தை சேர்த்து சாப்பிட வேண்டும்.
நல்ல நினைவாற்றலை பெற: உணவில் நெய் சேர்த்துக் கொள்ள வேண்டும், தேன், சுரைக்காய், பூண்டு உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
நரம்பு தளர்ச்சி நீங்க: உணவில் தேன் அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
வயிற்றுப்போக்கு நீங்க: வெந்நீரில் தேன் கலந்து சாப்பிட வேண்டும். மாதுளை பழம் சாறு சாப்பிட வேண்டும்.
உண்ட உணவு எளிதில் செரிக்க: மாதுளை பழம், அத்திப்பழம், வெள்ளரிக்காயை பேரீச்சம் பழத்துடன் சாப்பிட வேண்டும், முள்ளங்கி, தர்பூசணி பழம், இஞ்சி உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தொண்டை கரகரப்பு நீங்க: முள்ளங்கி, இறைச்சி.
தலையில் முடி வளர: அத்திப்பழம், ஆலிவ் ஆயில் சேர்த்து கொள்ள வேண்டும்.
முடி உதிர்தல் தவிர்க்க: உணவில் முள்ளங்கி அடிக்கடி சேர்த்துக் கொள்ள வேண்டும். மருதோன்றி, கருஞ்சீரகம் அரைத்து தலையில் தடவி தேய்த்துக் கொள்ள வேண்டும்.
தாய்மார்களுக்கு தாய் பால் சுரக்க: வில்வம் பழம், புதிய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தலைவலி நீங்க: மருதோன்றி பற்று போடலாம், ஆலிவ் ஆயிலை நெற்றியில் தேய்க்க தலைவலி போகும்.
காய்ச்சலைக் குறைக்க: சிறுநீரைப் பெருக்கி சுத்தப்படுத்த: வெந்தயத்தின் சாறு.
உடல் நிறம் சிவக்க: ஆலிவ் ஆயிலுடன் கருஞ்சீரகம் பொடி கலந்து சாப்பிட வேண்டும்.
சிரங்கு, கட்டிகள் மறைய: மருதோன்றி இலையை அரைத்து பயன்படுத்த வேண்டும்.