பாரம்பரிய அரிசி வகையான காட்டுயானத்தில் உள்ள ஆரோக்கிய நன்மைகள்!

Health benefits of traditional rice Kaatuyanam
Health benefits of traditional rice Kaatuyanamhttps://www.youtube.com

ரசாயனக் கலப்பின்றி விளைவிக்கப்படும் பாரம்பரிய அரிசிகள் மீதான கவனம் தற்போது மக்கள் பலரிடம் திரும்பி இருக்கிறது. பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றுதான் காட்டுயானம் எனப்படும் அரிசி வகை. இந்த அரிசியை உணவாக்கிப் சாப்பிட்டால் சர்க்கரை வியாதியே வராது என்ற ஒரு கருத்து நிலவுகிறது. காட்டுயானம்  அரிசியில் உள்ள அரோக்கிய நன்மைகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

தமிழகத்தின் பாரம்பரிய அரிசி வகைகளில் ஒன்றான காட்டுயானம்  தற்போது பலராலும் விரும்பப்படுகிறது. சிவப்பு நிற அரிசிகளில் சற்று தடிமனான அரிசி வகையான இது, மற்ற அரிசி வகைகளை விட மருத்துவ குணம் அதிகம் கொண்டதாகக் கருதப்படுகிறது.  ஏழு அடி உயரம் வரை வளரக்கூடிய நெல் ரகமாக இது உள்ளது. ஒரு யானை இந்த நெற்பயிர்கள் ஊடாக வந்தால் அதையே மறைக்கக்கூடிய அளவிற்கு வளரும் தன்மை கொண்டதால் இதற்கு, ‘காட்டுயானம்’ என்ற பெயர் வந்ததாகக் கூறப்படுகிறது.

இந்த அரிசி முழுமையாக உரிக்கப்படாமல் அல்லது பகுதியளவு உமியுடன் சிவப்பு நிறத்தில் இருக்கும். ஆகவே, இது ஆழமான நிறமியுடன் ஊட்டச்சத்துக்களுடன் புரதம், நார்ச்சத்து மற்றும் ஆக்ஸிஜனேற்றத்தின் நன்மைகளைக் கொண்டுள்ளது. மாங்கனீசு, துத்தநாகம் மற்றும் இரும்பு ஆகியவற்றின் சிறந்த ஆதாரம் இதுவென்று சொல்லலாம். இதிலுள்ள அமினோ அமிலம், செரிமானம் மற்றும் பயன்பாட்டுக்கு உதவுகிறது. மேலும் குளுக்கோஸ் , கொலஸ்ட்ரால் மற்றும் கார்போஹைட்ரேட் ஆகியவை அடங்கியது. இரும்புச்சத்து ஹீமோகுளோபின் இதில் அடங்கிய ஒரு முக்கிய அங்கமாகும்.

இந்த அரிசி உணவு, செல்கள் மற்றும் நரம்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்தது என்பதால் இது மலச்சிக்கலுக்கு நல்ல நிவாரணம் அளிக்கவல்லதாகும். மேலும், குடல் ஆரோக்கியத்தைப் பராமரிக்கிறது, இரத்த சோகை யைத் தடுக்கிறது,  ஊட்டச்சத்து குறைபாட்டைப் போக்குகிறது. எலும்பு உருவாக்கம் மற்றும் எலும்பு உடைதல் போன்ற அபாயத்தைக் குறைக்கிறது. இதிலுள்ள துத்தநாகம் உடலில் ஊடுருவும் வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களினால் பாதிப்பு ஏற்படாமல் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

இதையும் படியுங்கள்:
அனைத்து சத்துக்களும் கொண்ட ஒரே பழம் எது தெரியுமா?
Health benefits of traditional rice Kaatuyanam

காட்டுயானம் அரிசி சர்க்கரை நோய்க்கு எதிரி என்று கூடச் சொல்லலாம். ஏனெனில், சர்க்கரை நோயாளிகளுக்கு உகந்த குறைந்த கிளைசெமிக் குறியீட்டு உணவு இதுவாகும். உடலில் குளுக்கோஸ் அளவைக் குறைக்கிறது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. சிறு வயது முதல் இந்த அரிசி உணவை எடுத்துக் கொள்பவர்களுக்கு நீரிழிவு நோய் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும், நீரிழிவின் பாதிப்பைக் கட்டுக்குள் வைக்கவும் உதவுகிறது. இந்த அரிசியை மண் பானையில் சமைத்து, தேவையான  தண்ணீரை ஊற்றிவைத்து மறுநாள் காலையில் சாதம், நீராகாரத்தைத் தொடர்ந்து ஒரு மண்டலம் (48 நாட்கள் ) சாப்பிட்டு வந்தால் பல்வேறு உடல் பிரச்னைகள் மற்றும் நீரிழிவு நோய்க்கும் நிவாரணம் காணலாம் என்கிறார்கள்.

மிகவும் சுவையாக இருக்கும் காட்டுயானம் அரிசியில் இட்லி, தோசை, இடியாப்பம், புட்டு, அடை, பொங்கல், கஞ்சி, பாயசம், பணியாரம் மற்றும் சாதம் வடித்தும் உண்ணலாம். எந்த வகை உணவு என்றாலும், நமது உடல் நலத்தை கருத்தில் கொண்டு அதை மருத்துவரின் பரிந்துரையின்படி உணவில் சேர்த்துக் கொள்வதே நன்மை தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com