சிறுதானிய உணவுகள் உடலில் ஏற்படுத்தும் ஆரோக்கிய மாற்றங்கள்!

Healthy small grain foods
Healthy small grain foods
Published on

சுமார் 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே சிறுதானிய உணவுகள் இந்தியாவில் இருந்துள்ளன. அதில் பல நன்மைகள் இருக்கின்றன என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. சிறுதானியங்களில் ‘குளூட்டன்’ சத்து கிடையாது. அமிலத் தன்மையும் கிடையாது. உடல் ஆரோக்கியத்திற்கான முக்கிய சத்துக்களான செம்பு, பாஸ்பரஸ், மாங்கனீசு உள்ளது. இது உடல் ஆரோக்கியத்தை சமநிலைப்படுத்தச் செய்கிறது. சிறுதானியங்களில் உடலுக்கு மிகவும் அவசியமான புரதச்சத்து, வைட்டமின்கள், தாதுக்கள், துத்தநாகம், அமினோ அமிலங்கள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை நிறைந்துள்ளன.

உலகில் 28 மில்லியன் டன்கள் சிறுதானியம் விளைகிறது. அதில் 41 சதவிகிதம் இந்தியாவில் விளைகிறது. சிறு தானியங்கள் நிலத்தடி நீரை பாதுகாக்கும் ஆற்றல் உடையது. சிறு தானிய உணவுகள் அதிக நார்ச்சத்து உள்ளது. இது இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது, கொழுப்பைக் கட்டுப்பாட்டில் வைக்கும். சர்க்கரை நோய், தூக்கமின்மை, உடல் பருமன், பெண்களின் மாதவிடாய் கோளாறுகளை சரி செய்யும் ஆற்றல் உடையது.

சிறு தானியங்களில் 8 சதவிகிதம் நீர், 73 சதவிகிதம் கார்போஹைடிரேட், 4 சதவிகிதம் கொழுப்பு,11 சதவிகிதம புரோட்டீனும் இருக்கும். 100 கிராம் சிறுதானியத்தில் 378 கலோரி கிடைக்கிறது. இது தினசரி தேவையில் 28 சதவிகிதம் எளிதில் கரையும் நார்ச்சத்து. வைட்டமின் பி, புரதம், மாங்கனீசு 78 சதவிகிதம் இது தினசரி தேவையை பூர்த்தி செய்யும்.

கம்பு, ராகி என்னும் கேழ்வரகு, தினை, குயினோவா ஆகியவை சிறு தானியங்களில் அடங்கும். அவற்றில் உள்ள ஏராளமான ஊட்டச்சத்துக்கள் இந்த தானியங்களை சூப்பர்ஃபுட் ஆக்குகின்றன. கோதுமை மற்றும் அரிசி போன்ற பொதுவான தானியங்களுடன் ஒப்பிடும்போது, சிறு தானியங்களில் அதிக நார்ச்சத்து, தாதுக்கள் மற்றும் வைட்டமின்கள் உள்ளன. கொழுப்பை எரித்து, வளர்சிதை மாற்றத்தை தூண்டு ஆற்றல் இவற்றுக்கு உண்டு. ஏனெனில், இவற்றில் மாவுச்சத்து குறைவாக உள்ளது.

சிறுதானியங்களில் அதிக அளவுள்ள நார்ச்சத்து வயிற்றை சுத்தப்படுத்தவும், குடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், செரிமானத்தை மேம்படுத்தவும் உதவுகிறது. கால்சியம் குறைபாடு உள்ளவர்களுக்கு, சிறுதானியங்களை உட்கொள்வது நல்ல பலன் கொடுக்கும். ஏனெனில், இவற்றில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிக அளவில் உள்ளன.

இதையும் படியுங்கள்:
கேட்ட வரத்தைக் கொடுக்கும் கார்த்திகை சோமவார விரதம்!
Healthy small grain foods

சிறுதானியங்களில் வைட்டமின் பி, குறிப்பாக பி 3 என்னும் நியாசின் நிறைந்துள்ளது. இது ட்ரைகிளிசரைடுகளின் அளவைக் குறைக்க உதவுகிறது. இதுதான் இதய நோய் மற்றும் மாரடைப்பு அபாயத்தை அதிகரிக்கின்றன. எனவே, சிறுதானியங்களை உட்கொள்வது கொலஸ்ட்ரால் அளவைக் கட்டுப்படுத்த உதவுகிறது. சிறுதானியங்களை உட்கொள்வது எடை இழப்புக்கு உதவுவதோடு

மட்டுமல்லாமல், எலும்புகளை வலுப்படுத்துகிறது, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது மற்றும் நீரிழிவு போன்ற கடுமையான நோய்களின் அபாயத்தை குறைக்கிறது.

சிறுதானிய உணவுகளில் அதிகம் கால்சியம் உள்ளது கேழ்வரகில்தான். இதில் 100 கிராமில் 34.4 மி.கிராம் கால்சியம் உள்ளது. இது ஒரு நாள் தேவையை விட 28 சதவிகிதம் அதிகம். 100 கிராம் கம்பில் 16.9 மி.கி. கால்சியம் உள்ளது. நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சிறுதானியங்கள், குறிப்பாக ராகியின் கிளைசெமிக் இண்டெக்ஸ் அளவு அரிசி, கோதுமையை விட மிகக் குறைவாக உள்ளது. மேலும், கலோரிகளும் குறைவு. இதுமட்டுமின்றி, நார்ச்சத்து மற்றும் புரதம் நிறைந்துள்ளதால், இதனால் நீண்ட நேரம் வயிறு நிறைந்த உணர்வைக் கொடுக்கும்.

நாம் உணவில் தினமும் அரிசி அல்லது கோதுமை உணவுகளைத்தான் அதிகம் சேரிக்கிறோம். ஆனால், அதற்கு பதிலாக, முடிந்த வரை சிறு தானியங்களை பயன்படுத்துவது சிறந்த பலனைக் கொடுக்கும். வாரத்தில் மூன்று முறையாவது சிறு தானியங்கள் உணவில் இருப்பது மிகுந்த பலனைத் தரும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com