
சிலர் கழிவறையில் பேப்பர் படிப்பது, செல்போன் உபயோகிப்பது போன்றவற்றை செய்கிறார்கள். ஆராயாச்சியின் படி, கழிவறையில் போன் பயன்படுத்துபவர்களுக்கு ஹெமராய்ட் மற்றும் பல ஆபத்துக்கள் ஏற்படுவதாக அறியப்படுகிறது.
போன் வைத்திருப்பதால் அதிக நேரம் கழிவறையில் செலவழிக்கும் போது ரெக்டர் வெயின்களில் அழுத்தம் ஏற்படுகிறது. அதிக நேரம் கழிவறையில் செலவழிக்கும் போது மலம் கழிக்கும் இடம் அழுத்தத்திற்கு உண்டாவதால் கஷ்டப்பட்டு மலம் கழிக்க வேண்டியிருக்கும். நம் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும். கழிவறையில் நாம் உட்காரும் நிலை, பாக்டீரியா பாதிப்பு இவற்றால் உடல் பாதிப்பு ஏற்படும்.
பாதிப்புகள்:
ஹெமராய்ட்ஸ் (பைல்ஸ்):
அதிக நேரம் போனுடன் கழிவறையில் இருப்பதால் ஹெமராய்டு பாதிப்பு ஏற்படும். ஆரம்ப அறிகுறிகளை கவனிக்காமல் அலட்சியம் செய்வதால் பாதிப்பு அதிகமாகும்.
மலச்சிக்கல்:
கழிவறையில் போன் உபயோகிக்கும் போது உங்கள் கவனம் அதில்தான் இருக்கும். அதனால் மலம் கழிப்பதில் கவனமாக இருக்க மாட்டீர்கள். இதனால் மலச்சிக்கல் ஏற்படும். உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
மலச்சிக்கலால் அதிக அழுத்தம் கொடுக்கும்போது மலம் கழிக்கும் இடத்தில் காயங்கள் ஏற்படலாம். இரத்தம் வெளியேறும் வெடிப்பு மாதிரி ஏற்படும் ஆபத்தும் உண்டு.
* கழிவறையில் அதிக நேரம் கழிக்கும் போது தசைகள் பலவீனமடயும். இதனால் மலம் சரியாக வெளியேறாமல் கனமாக இருக்கும். மேலும், Urinary incontinence பிரச்சனை ஏற்படும்.
* கழிவறையில் அதிக மைக்ரோப்கள் (Microbes) உள்ளன. ஆராய்ச்சியின் படி, செல்போனில் பாதோஜெனிக் பாக்டீரியா உள்ளதாக அறியப்படுகிறது. போன் தொடுதிரையை முகம் மற்றும் மலம் கழிக்கும் இடத்தில் வைக்கும் போது பாக்டீரியா தொற்று ஏற்படும். மேலும் இதனால் யுரினரி தொற்றும் ஏற்பட வாய்ப்புண்டு.
* அதிக நேரம் போன் பார்த்தபடி கழிவறையில் இருந்தால் உங்கள் கழுத்து, பின்புறம், தோள் மற்றும் இடுப்பு போன்றவற்றிற்கு பாதிப்பு ஏற்படும்.
* ஏதோ ஓய்வெடுப்பது போன்று கையில் போனுடன் செல்பவர்கள் இந்த பழக்கத்தை அடிக்கடி மேற்கொள்வதால் உடல் ஆரோக்கியம் பாதிக்கப்படும்.
* மேற்கூறிய காரணங்களை கவனத்தில் கொண்டு கழிவறையில் மொபைல் போனை தவிர்க்கவும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)