இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களுக்கு தலசோபோபியா இருக்கலாம்! உடனடியாக இதைச் செய்யுங்கள்!

Thalassophobia
Thalassophobia
Published on

தலசோபோபியா (Thalassophobia) என்பது கடல், ஏரிகள் போன்ற ஆழமான நீர்நிலைகளைக் கண்டு பயப்படுவதை குறிக்கிறது. இதன் காரணங்கள் அறியப்படாதவை என்றாலும் கடந்த கால அதிர்ச்சி, மரபியல் அல்லது கற்றறிந்த நடத்தைகள் போன்றவை முக்கிய பங்கு வைக்கலாம். தலசோபோபியா என்பது கிரேக்க வார்த்தைகளான தலஸ்ஸா (கடல்) மற்றும் ஃபோபோஸ் (பயம்) ஆகியவற்றிலிருந்து உருவானது. இது பரந்த கடல் அல்லது பெரிய நீர்நிலைகள் மீது ஏற்படும் ஆழமான பயத்தை குறிக்கிறது.

அறிகுறிகள்:

தீவிரமான பயம், பீதி, இதயத்துடிப்பு அதிகரிப்பு, மூச்சுத் திணறல், வியர்த்தல், தலைச்சுற்றல், நடுக்கம் மற்றும் கடலை பார்க்கும் பொழுது அல்லது அதைப்பற்றி நினைக்கும் போது ஏற்படும் பிற உடலியல் ரீதியான எதிர்வினைகள் ஆகியவை இதில் அடங்கும். கடல் அல்லது ஆழமான நீரின் அருகில் செல்வதை தவிர்ப்பது, பதட்டம் அடைவது போன்றவை நடத்தை ரீதியிலான அறிகுறிகளாகும்.

காரணங்கள்:

  • தலசோபோபியாவின் சரியான காரணங்கள் முழுமையாக புரிந்து கொள்ளப்படவில்லை. ஆனால் கடந்த கால அதிர்ச்சி காரணமாக அதாவது கடல் அல்லது ஆழமான நீரில் ஏற்பட்ட மோசமான அனுபவங்கள் காரணமாக இருக்கலாம்.

  • மரபியல் மற்றும் உயிரியல் காரணிகளாக இருக்கலாம்.

  • பயம் மற்றவர்களிடமிருந்து கற்றுக் கொள்ளப்படலாம் அல்லது எதிர்மறையான தகவல்கள் மூலம் தூண்டப்படலாம்.

தீர்வு மற்றும் சிகிச்சை:

இதற்கான சிகிச்சை என்பது பயத்தை கட்டுப்படுத்தவும் நிர்வகிக்கவும் உதவும்.

  • உளவியல் ஆலோசனை:

    பயங்கள் மற்றும் பீதி தாக்குதல்களை சமாளிக்க ஒரு சிறந்த உளவியல் மருத்துவரை சந்தித்து அவற்றை சமாளிக்கக் கூடிய யுக்திகளை கற்றுக்கொண்டு சிகிச்சை பெறுவது உதவும்.

  • நடத்தையியல் சிகிச்சை (Cognitive Behavioral Therapy-CBT):

    இது பயத்திற்கு வழிவகுக்கும் எதிர்மறை சிந்தனை முறைகளைக் கண்டறிந்து, அதை மாற்ற முயற்சிக்கும் சிகிச்சையாகும்.

இதையும் படியுங்கள்:
மன பாரம் குறைய வேண்டுமா? உங்கள் வாழ்க்கையை மாற்றும் 5 சக்திவாய்ந்த வழிகள் இதோ!
Thalassophobia
  • வெளிப்பாடு சிகிச்சை:

    படிப்படியாக கடலின் பயத்தை எதிர்கொள்ளும் வகையில் தயார்படுத்துதல். ஒரு சிகிச்சையாளரின் வழிகாட்டுதலுடன் மெதுவாக கடலைப் பார்ப்பது, கடலைப் பற்றி படிப்பது மற்றும் கடலில் இருக்கும் போது பாதுகாப்பாக உணர்வது போன்றவை இதில் அடங்கும்.

  • தளர்வு நுட்பங்கள்:

    ஆழமான சுவாசம், தியானம் போன்ற தளர்வு நுட்பங்கள் மன அழுத்தத்தைக் குறைத்து பயத்தை கட்டுப்படுத்த உதவும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com