

1. எந்த சூழலிலும் மறக்கக் கூடாத 6 விஷயங்கள்:
உண்மையாக நேசிக்கும் நண்பர்கள்.
அக்கறை காட்டும் உறவுகள்.
அன்பைப் பொழியும் குடும்பம்.
நேர்மறையான சிந்தனைகள்.
புன்னகையும் மகிழ்ச்சியும்.
உடற்பயிற்சியும் நடைப்பயிற்சியும்.
2. மறக்க வேண்டிய 6 விஷயங்கள்:
வயது.
தவறவிட்ட வாய்ப்புகள்.
கவலைகள்.
துரோகங்கள்.
நண்பர்களின் புறக்கணிப்பு.
உறவுகள் தந்த கசப்பு.
3. 40 வயதை தொட்டதும் கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்:
ரத்த அழுத்தம்.
ரத்த சர்க்கரை அளவு.
உடல் பருமன்.
பேச்சு.
கோபம்.
அவசரம்.
4. உணவில் குறைத்துக் கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்:
உப்பு.
சக்கரை.
சத்தற்ற உணவுகள்.
பதப்படுத்தப்பட்ட உணவுகள்.
பால் பொருட்கள்.
எண்ணையில் வறுத்தது.
5. உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய 6 விஷயங்கள்:
காய்கறிகள்.
பழங்கள்.
சிறு தானியங்கள்.
பருப்புகள்.
உலர் கொட்டைகள்.
போதுமான தண்ணீர்.
6. தட்டிக் கழிக்க கூடாத 6 விஷயங்கள்:
பசி எடுக்கும் வரை காத்திருக்காதீர்கள். சாப்பிடும் நேரம் வந்ததும் அளவாக சாப்பிடுங்கள்.
தாகம் எடுக்கும் வரை காத்திருக்காதீர்கள். அவ்வப்போது தண்ணீர் குடிக்க மறக்காதீர்கள்.
தூக்கம் வரும் வரை காத்திருக்காதீர்கள். தூங்குவதற்கான நேரம் நெருங்கியதும் படுக்கப் போய் விடுங்கள்.
களைப்பு ஏற்படும் வரை உழைக்காதீர்கள். அவ்வப்போது போதுமான ஓய்வெடுங்கள்.
உடல் நலம் கெடும் வரை தள்ளிப் போடாதீர்கள். அவ்வப்போது மருத்துவ பரிசோதனைகள் செய்து ஆரோக்கியம் காத்திடுங்கள்.
பிரச்னைகள் முற்றும் வரை காத்திருக்காதீர்கள். தீர்க்க முயலுங்கள். தெரிந்தவர்களின் உதவி கேளுங்கள். பிரார்த்தனை செய்யுங்கள்.
40 வயதை (40+ Wellness Guide) தொட்டதும் இந்த 6 விஷங்களை செய்ய வேண்டும்.
இவை எங்கள் குடும்ப டாக்டர் விஸ்வநாதன் அவர்கள் கூறியது. அவருக்கு நன்றிகள்.