கிச்சன் கிளினிக்: வீட்டிற்குள் ஒளிந்திருக்கு டாக்டர்கள்!

சமையல் டிப்ஸ்
சமையல் டிப்ஸ்

டலுக்கு ஆரோக்கியம் தந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள நம்மை சுற்றியுள்ள எளிதில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகள், இயற்கை உணவுகள் உதவி புரிகிறது என்றால் வியப்பாக இருக்கும். என நம் ஒவ்வொருவருக்கும் பயன் தரும் பல பொருட்கள் சமையலறையில் உள்ளது. அவற்றில் சில பொருட்களை காணலாம்.

உடல்சூடு குறைய

ரோஜா இதழ்களை நிழலில் காயவைத்து ,அது நன்கு காய்ந்ததும் ஏலக்காய்,சுக்கு சேர்த்து நன்கு பொடித்துக் கொள்ளவும்.தினமும் இதனை வெதுவெதுப்பான தண்ணீரில் தேன் கலந்து பருகி வர உடல்சூடு குறைவதுடன் எடையும் குறையும்.

ரத்தசோகையை தடுக்க

அத்திப்பழம், பேரீச்சம் பழம் சம அளவு எடுத்து அரைக்கவும்.பனை வெல்லத்தை கரைத்து பாகு வைத்து இதனுடன் அரைத்த விழுது சேர்த்து ஜாம் போல செய்து வைத்துக் கொண்டு அடிக்கடி சாப்பிட்டு வர ரத்தசோகை வரவே வராது.

வாதம் நீங்க

பூண்டு, வெங்காயம், தக்காளி, நச்சுக் கொட்டை கீரை சேர்த்து வதக்கவும்.இதனுடன் மிளகு, சீரகம் சேர்த்து அரைத்து சட்னியாகவோ,தொக்காகவோ சாப்பிட வாதம் வராது.

அஜீரணம் சரியாக

புதினா, நசுக்கிய இஞ்சியை கொதிக்கும் நீரில் போட்டு காய்ச்சி பின் வடிகட்டி அருந்த வயிற்று பொருமல், அஜீரணம் சரியாகும்.

நன்றாக தூக்கம் வர

செர்ரிப் பழங்களை பொடியாக நறுக்கி மாதுளைச்சாற்றில் ஊற விடவும்.மாலையில் இதனுடன் ஒரு சிட்டிகை கசகசா பொடிகலந்து சாப்பிட நன்றாக தூக்கம் வரும்.ரத்தவிருத்திக்கு துணை செய்யும்.

பித்தம் குறைக்க

மாதுளம்பழ ஜுஸில் தேன் கலந்து பருகி சருமம் பளபளப்பாவதுடன் பித்தத்தைக் குறைக்கும்.

அல்சர் குணமாக

பயத்தம் பருப்பை வேகவிட்டு ,தேங்காய் பால் வெல்லம் சேர்த்து சாப்பிட அல்சர் குணமாகும்.

வாயு நீங்க

உப்பு,புளி, பெருங்காயம்,மிளகு எல்லாவற்றையும் தனித்தனியாக சூடான வாணலியில் வறுக்கவும். இதனுடன் கறிவேப்பிலை சேர்த்து துவையலாக்கி சாப்பிட வாயு கோளாறுகள் நீங்கும்.இளநரையும் மறையும்.

தொகுப்பு: மகாலெஷ்மி சுப்ரமணியன்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com