வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இருக்கக்கூடிய ஆரோக்கியமான இனிப்புகள்!

Healthy alternatives to white sugar!
Healthy alternatives to white sugar!

சமீபத்திய ஆண்டுகளில் ஆரோக்கியமான உணவுப் பழக்க வழக்கங்களுக்கானத் தேடல் அதிகரித்துளன. குறிப்பாக வெள்ளை சர்க்கரைக்கு மாற்றாக இருக்கும் இனிப்பு வகைகள் மீது மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். எனவே இந்தப் பதிவில் சக்கரைக்கு மாற்றாக இருக்கக்கூடிய இனிப்பு வகைகள் பற்றி தெரிந்து கொள்ளலாம் வாங்க. 

வெள்ளை சர்க்கரைக்கு மாற்று இனிப்புகளை நாம் தேர்ந்தெடுக்கும்போது அவற்றின் சில உண்மைகளையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும். அதாவது வழக்கமான வெள்ளை சர்க்கரையில் கலோரி உள்ளடக்கம் அதிகமாக இருக்கும். இதற்கு மாற்றாக இருக்கும் சில சர்க்கரைகளில் கலோரி உள்ளடக்கங்கள் இல்லாமல், இனிப்பு சுவையை வழங்கும் பொருட்கள் மட்டுமே இருக்கும். 

Stevia: கலோரி இல்லாத சர்க்கரைக்கு மாற்றான இனிப்பில் முதலிடத்தில் இருப்பது Stevia எனப்படும் ஒருவகை இனிப்பு பொருள். இது ‘ஸ்டீவியா ரபாடியானா’ என்ற தாவரத்தின் இலைகளிலிருந்து பெறப்படும் ஒரு பிரபலமான இயற்கை இனிப்பாகும். இதைத்தான் சுகர் ஃப்ரீ போன்ற ப்ராடக்டாக தயாரித்து விற்பனை செய்கின்றனர். இந்த இனிப்பு ரத்த சர்க்கரை அளவுகளில் குறைந்த தாக்கத்தையே ஏற்படுத்துவதால் நீரிழிவு நோயாளிகள் அல்லது அதிக கலோரி உட்கொள்வதைத் தடுக்க விரும்புபவர்களுக்கு ஏற்ற விருப்பமாக இது இருக்கும். 

Monk Fruit: இதுவும் ஒரு வகை இயற்கை சர்க்கரை வகையைச் சேர்ந்ததாகும். Siraitia Grosvenorii என்ற தாவரத்தின் பழத்திலிருந்து சாற்றைப் பிழிந்தெடுத்து சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்துகின்றனர். இதிலும் அதிகப்படியான கலோரி உள்ளடக்கம் இல்லை என்பதால், ரத்த சர்க்கரை அளவை பாதிக்காமல் இனிப்பை வழங்குகிறது. 

Sucralose: சுக்ரலோஸ் என்பது ஒரு செயற்கை இனிப்பாகும். இது சர்க்கரையை விட சுமார் 600 மடங்கு இனிப்பானது. பல பொருட்களில் சர்க்கரைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படும் சுக்ரலோஸ், உடலில் இன்சுலின் அல்லது குளுக்கோஸ் அளவை பாதிக்காததால் நீரிழிவு நோயாளிகளுக்கும் பாதுகாப்பானதாகக் கருதப்படுகிறது. 

Aspartame: அஸ்பார்டேம் பல குறைந்த கலோரி மற்றும் சர்க்கரை இல்லாத பொருட்களில் பயன்படுத்தப்படும் மற்றொரு செயற்கை இனிப்பு வகையாகும். இது சர்க்கரையை விட 200 மடங்கு அதிக இனிப்பு சுவையை வழங்கக்கூடியது. ஆனால் இது எல்லா நபர்களுக்கும் பரிந்துரைக்கப்படுவதில்லை. சில அரிய மரபணு கோளாறால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இது ஏற்றதல்ல. 

இதையும் படியுங்கள்:
Waxing செய்யும் முன் அறிய வேண்டிய 9 விஷயங்கள்.. இது தெரியாம வேக்சிங் செய்யாதீங்க!
Healthy alternatives to white sugar!

பொதுவாகவே மேலே குறிப்பிட்டுள்ள சர்க்கரைக்கு மாற்றான இனிப்பு வகைகளில் கலோரி உள்ளடக்கம் குறைவாகவே இருப்பதால், இதை எடுத்துக்கொள்வது ஆரோக்கியமானதாக பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும் இவற்றின் விலை சர்க்கரையை விட பல்மடங்கு அதிகமாக இருப்பதால், இதைப் பெரும்பாலான மக்கள் பயன்படுத்துவதில்லை.

ஆனால் நமது ஊர்களில் சர்க்கரைக்கு மாற்றாக, கருப்பட்டி, வெல்லம், நாட்டுச் சக்கரை போன்றவை சிறந்தது என சொல்லப்பட்டாலும், அதில் இருக்கும் சர்க்கரையிலும், அதிகப்படியான கலோரி உள்ளடக்கம் இருப்பதால், வெள்ளை சர்க்கரைக்கும் இந்த குறிப்பிட்ட வகை சர்க்கரைகளுக்கும் எந்த மாற்றமும் இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com