உணவுக்கு முன் இதை குடியுங்கள்... கொழுப்பு மாயமாய் மறையும்!

Fat body
Fat body
Published on

நம் உடல் கொழுப்பு கரைய வீட்டில் உள்ள பொருள்களைக் கொண்டே நல்ல தேனீர் தயாரிக்கலாம். அவை என்னென்ன என்று பார்ப்போம்.

வெகு வெதுப்பான எலுமிச்சை பானம்

காலையில் வெறும் வயிற்றில் வெது வெதுப்பான நீரில் அரை எலுமிச்சையைப் பிழிந்து உட்கொள்வதால் உடல் எடை குறையும்.

க்ரீன் டீயுடன் புதினா சேர்த்து தேனீர்

க்ரீன் டீயில் நிறைந்துள்ள catechins என்ற பொருள் ஆன்டி ஆக்கிடண்ட்ஸ் நிறைந்தது. இதோடு புதினா இலையையும் சேர்த்து தேனீர் தயாரித்து உட்கொள்ள செரிமானம் சீராகும். மேலும் இது வயிற்று உப்புசத்தையும் தடுக்கும்.

வெள்ளரி மற்றும் புதினா

வெள்ளரி மற்றும் புதினா இரண்டையும் அரைத்து வடிகட்டி உட்கொள்ள உடலுக்குச் சிறந்த பானமாகும். வெள்ளரியில் நார்சத்து உள்ளது‌. புதினா நல்ல சுவையைத் தருவதுடன் நல்ல செரிமானத்தையும் தருகிறது.

ஆப்பிள் சிடார் வினீகர்

வெது வெதுப்பான நீரில் இரண்டு டீஸ்பூன். ஆப்பிள் சிடார் வினீகர் மற்றும் ஒரு டீஸ்பூன் தேனும் சேர்த்து அருந்த இது இரத்தச் சர்க்கரையை நன்கு கட்டுக்குள் வைக்கும். இது பசியையும் கட்டுப்படுத்தும். உணவு உண்பதற்கு முன் உட்கொள்வது மிகச் சிறந்தது.

இஞ்சி மற்றும் எலுமிச்சை தேனீர்

எலுமிச்சையில் அதிக சத்துக்கள் உள்ளன. இஞ்சி ஆக்சிஜனை அதிகரிக்கச் செய்யும். இதனால் செரிமானம் சீராகும். இந்த தேனீரை எப்போது வேண்டுமானாலும் அருந்தலாம்.

பட்டை மற்றும் தேன்

பட்டை, நம் உடலில் உள்ள கொழுப்புக்களை நீக்கும் பண்பைப் பெற்றது. இயற்கையான முறையில் சர்க்கரையைக் தருகிறது. இதனால் மெடபாலிசம் அதிகரிக்கப்படும். பட்டைப் பொடியும் தேனும் வெதுவெதுப்பான நீரில் கலந்து இரவு படுக்கப் போகுமுன் குடிக்க நல்ல பலனைத்தரும்.

தர்ப்பூசணி மற்றும் துளசி ஸ்மூத்தி

தர்ப்பூசணி குறைந்த கலோரிகளைக் கொண்டது. இதோடு வாசமான துளசியையும் சேர்த்து அருந்த, ஆன்டிஆக்ஸிடன்ட் நிரம்பிய இந்த பானம் வயிற்றுப்பகுதியில் கொழுப்பைக் குறைக்கும். இந்த பானத்தை தர்பூசணியுடன் துளசியையும் சேர்த்து அரைத்து உட்கொள்ளலாம்.

இதையும் படியுங்கள்:
மரணத்தில் இருந்து தப்பிக்கணுமா? - புத்தர் உண்ட அரிசி: நீங்கள் அறியாத அற்புத நன்மைகள்!
Fat body

அன்னாசி பழம், இஞ்சி மற்றும் கிராம்பு

அன்னாசி பழத்துண்டுகளுடன் ஒரு துண்டு இஞ்சியை துருவி சேர்த்து அதில் ஒரு டீஸ்பூன் கிராம்பு சேர்த்து தண்ணீரை விட்டு கொதிக்க வைத்து வடிகட்டி சாப்பிட, உடல் கொழுப்பு நன்றாகக் கரையும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்.)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com