மூட்டுவலியை விரைவில் குணமாக்க உதவும் ஆரோக்கிய உணவுகள்!

Foods that heal joint pain
Foods that heal joint pain
Published on

மூட்டுவலி என்பது முன்பெல்லாம் ஐம்பது வயதைக் கடந்தவர்களுக்குதான் ஏற்படக்கூடிய பிரச்னையாக இருந்தது. தற்போது இளம் வயதினருக்கும் இந்தப் பிரச்னை வந்துவிட்டது. உடல் உழைப்பில்லாத வாழ்க்கை முறை, ஊட்டச்சத்து இல்லாத உணவுகள், உடல் எடை, மூட்டில் ஏற்படும் வறட்சி, ஒரே இடத்தில் தொடர்ந்து அமர்ந்து வேலைப் பார்ப்பது போன்றவை மூட்டு வலிக்குக் காரணமாக இருக்கிறது. இதை குணமாக்க எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

1. Nuts and seeds: சைவ உணவுகள் சாப்பிடுபவர்களுக்கு Omega 3 fatty acids கிடைக்க ஒரு சிறந்த உணவு Nuts and seeds ஆகும். இதில் ALA Omega 3 fatty acids நிறைந்திருக்கிறது. இது மூட்டுகளில் Inflammationஐ ஏற்டுத்தும் C-reactive protein என்னும் மூட்டு வலியை உண்டாக்கக்கூடியதை தடுக்கும். எனவே, மூட்டுவலி பிரச்னை உள்ளவர்கள் வால்நட், நிலக்கடலை, பாதாம், சியா விதைகளை உணவில் சேர்த்துக்கொள்வது மூட்டு வலியை குறைக்கும்.

2. Turmeric: மஞ்சளில் Curcumin என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது உடலில் சிறந்த Anti inflammatory ஆக செயல்படும். இது மூட்டுகளில் ஏற்படக்கூடிய Inflammationஐ தடுக்கிறது. மஞ்சளை உணவில் பவுடராக பயன்படுத்துவதை விட மஞ்சள் கிழங்காகப் பயன்படுத்துவது கூடுதல் பலனைக் கொடுக்கும்.

3. Berries and cherries: பெர்ரி மற்றும் செர்ரி பழங்களில் Anthocyanin மற்றும் Polyphenols போன்ற நிறமி சத்துக்கள் அதிகம் இருக்கிறது. Polyphenols சிறந்த Anti inflammatory ஆக செயல்பட்டு மூட்டுகளில் வீக்கம் ஏற்படுவதை தடுக்கிறது பெர்ரி மற்றும் செர்ரி பழங்கள்.

4. Greeny leaves vegetables: பச்சை இலை காய்கறிகளான கீரைகளில் ஏராளமான ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. குறிப்பாக Kaempferol என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது சிறந்த ஆன்டி Inflammatoryயாக செயல்பட்டு மூட்டில் ஏற்படும் வீக்கத்தை தடுக்கும். மேலும், மூட்டின் ஆரோக்கியத்திற்குத் தேவையான கால்சியம், மெக்னீசியம், பாஸ்பரஸ், வைட்டமின் கே போன்றவை அதிகம் உள்ளது. இது மூட்டின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதோடு, மூட்டின் தேய்மானத்தையும் தடுக்கக்கூடியது கீரைகள் ஆகும்.

5. Ginger: இஞ்சியில் Gingerol என்னும் ஆன்டி ஆக்ஸிடென்ட் உள்ளது. இது மூட்டில் ஏற்படும் வீக்கம், அழற்சி ஆகியவற்றை சரிசெய்ய உதவும். மேலும். மூட்டுக்குத் தேவையான மெக்னீசியம், வைட்டமின் B6, Copper, manganese ஆகியவை அதிகம் உள்ளது. இது மூட்டில் உள்ள கார்ட்டிலேஜ் செல்கள் சேதமடையாமல் தடுப்பதோடு மூட்டின் ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகள் இந்த 5 காய்கறிகளை எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம்!
Foods that heal joint pain

எனவே, Arthritis, joint pain சம்பந்தமான பிரச்னை இருப்பவர்கள் இஞ்சி டீ எடுத்துக்கொள்வது நல்ல பலனைத் தரும். இந்த உணவுகளை தினசரி தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் மூட்டு வலி பிரச்னை குணமாகி ஆரோக்கியமாக வாழலாம். முயற்சித்துதான் பாருங்களேன்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com