உணவே மருந்து: மூளைச் சோர்வுக்கு குட்பை சொல்லுங்கள்!

Brain Fatigue
Brain Fatigue
Published on

இன்றைய வேகமான வாழ்க்கை முறையில், மூளைச் சோர்வு என்பது பலரும் சந்திக்கும் பொதுவான பிரச்னையாகிவிட்டது. அதிக வேலை, தூக்கமின்மை, மன அழுத்தம் போன்ற காரணங்களால் மூளை தனது alert-ஐ இழந்து மந்தமாக செயல்படத் தொடங்குகிறது. இதனால் ஞாபக மறதி, கவனமின்மை, எதிலும் ஆர்வமில்லாத நிலை போன்றவை ஏற்படலாம். ஆனால், சில சத்தான உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதன் மூலம் இந்த மூளைச் சோர்வை விரட்ட முடியும்.

1. ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள்:

மீன் (சால்மன், கானாங்கெளுத்தி), ஆளி விதைகள், சியா விதைகள், வால்நட்ஸ் போன்ற உணவுகளில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இவை மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும், ஞாபக சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன. மேலும், மூளையின் செல்களுக்கு இடையே தகவல் பரிமாற்றம் சீராக நடைபெறவும் இவை உதவுகின்றன. வாரத்திற்கு இரண்டு முறையாவது மீன் உணவுகளை எடுத்துக்கொள்வது நல்லது.

2. ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்த பழங்கள் மற்றும் காய்கறிகள்:

பெர்ரி பழங்கள் (ப்ளூபெர்ரி, ஸ்ட்ராபெர்ரி), கீரை, ப்ரோக்கோலி, தக்காளி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் ஆன்டிஆக்சிடன்ட்கள் நிறைந்துள்ளன. இவை மூளை செல்களை சேதத்திலிருந்து பாதுகாத்து, அவற்றின் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. தினமும் குறைந்தது ஐந்து வகையான பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்த்துக்கொள்வது மூளைச் சோர்வை போக்க உதவும்.

3. முழு தானியங்கள்:

பழுப்பு அரிசி, ஓட்ஸ், கோதுமை போன்ற முழு தானியங்களில் நார்ச்சத்து மற்றும் விட்டமின்கள் அதிக அளவில் உள்ளன. இவை உடலில் சீரான ஆற்றலை வழங்க உதவுவதோடு, மூளைக்குத் தேவையான குளுக்கோஸையும் படிப்படியாக வழங்குகின்றன. இதனால் மூளை நீண்ட நேரம் சுறுசுறுப்பாக செயல்பட முடியும். வெள்ளை அரிசி மற்றும் மைதா போன்ற பதப்படுத்தப்பட்ட உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

4. டார்க் சாக்லேட்:

டார்க் சாக்லேட்டில் ஃப்ளேவனாய்டுகள் என்ற ஆன்டிஆக்சிடன்ட்கள் உள்ளன. இவை மூளைக்கு இரத்த ஓட்டத்தை அதிகரித்து, அதன் செயல்பாட்டை மேம்படுத்துகின்றன. ஆனால், அதிக சர்க்கரை சேர்க்காத டார்க் சாக்லேட்டை மிதமான அளவில் எடுத்துக்கொள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
மரணத்தை முன்பே அறிவிக்கும் மூளை ? அதிர்ச்சியூட்டும் ஆராய்ச்சி முடிவுகள்!
Brain Fatigue

5. நட்ஸ் மற்றும் விதைகள்:

பாதாம், முந்திரி, சூரியகாந்தி விதைகள் போன்ற நட்ஸ் மற்றும் விதைகளில் விட்டமின் ஈ, மெக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்திற்கு மிகவும் முக்கியமானவை. தினமும் ஒரு கைப்பிடி அளவு நட்ஸ் மற்றும் விதைகளை உட்கொள்வது மூளைச் சோர்வை குறைக்க உதவும்.

மேலே குறிப்பிட்டுள்ள உணவுகளை உங்கள் தினசரி உணவில் சேர்த்துக்கொள்வதோடு, போதுமான தூக்கம், உடற்பயிற்சி மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் முறைகளையும் பின்பற்றுவது மூளைச் சோர்வை முழுமையாக போக்க உதவும். ஆரோக்கியமான உணவு முறை மற்றும் வாழ்க்கை முறை மூலம் உங்கள் மூளையை எப்போதும் சுறுசுறுப்பாகவும், alert-ஆகவும் வைத்துக்கொள்ள முடியும்.

இதையும் படியுங்கள்:
மூளையின் முன்மடல் (FRONTAL LOBE) - மூளையின் உள்ளே ஒரு குட்டி மூளை!
Brain Fatigue

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com