கல்லீரல் நோய்களைப் போக்கும் ஆரோக்கியமான உணவுகள்!

Liver health
Liver health
Published on

வறான உணவு மற்றும் வாழ்க்கை முறை காரணமாக தற்போது பலருக்கும் கொழுப்பு கல்லீரல் நோய் பெருகி வருகிறது. அதைத் தடுப்பதற்கு ஆரோக்கியமான வாழ்க்கை முறையை கடைப்பிடிப்பதும், சரியான உணவுகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் செலுத்துவதும் அவசியம். நம் உடலில் கல்லீரல் உயிரணுக்களில் கொழுப்பு சேரும்பொழுது கொழுப்பு கல்லீரல் நோய் உண்டாகிறது. கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும் சில உணவுகளைப் பற்றி இந்தப் பதிவில் காணலாம்.

1. முழு தானியங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகள்: முழு கோதுமை ரொட்டி, ஓட்ஸ், பழுப்பு அரிசி ஆகியவை சிறந்த நார்ச்சத்து உணவாகும். இவை எடையை கட்டுப்படுத்தவும், கல்லீரல் கொழுப்பை குறைக்கவும் உதவும்.

2. பருப்பு வகைகள்: பீன்ஸ், பருப்பு மற்றும் கொண்டைக்கடலை ஆகியவை கல்லீரல் ஆரோக்கியத்திற்கு நன்மை தரும் தாவர அடிப்படையிலான புரதம் மற்றும் நார்ச்சத்துக்களை கொண்டுள்ளது. டோஃபு, கினோவா போன்றவை அதிகப்படியான கொழுப்பு இல்லாத புரதத்திற்கான இறைச்சி உணவுக்கு ஒரு நல்ல மாற்றாக இருந்து கொழுப்பு கல்லீரல் நோயை தடுக்க உதவும்.

3. பூண்டு: பூண்டில் அலிசின் உள்ளது. இது கொலஸ்ட்ரால் அளவை கட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுகிறது.

4. வெந்நீர்: தாகம் எடுக்கும்போது பொதுவாக நாம் ஃப்ரிட்ஜில் வைத்த ஐஸ் வாட்டரை குடிப்போம். நம் உடம்பில் சேரும் கெட்ட கொழுப்பை குறைக்க உதவும் வெந்நீரை தினமும் காலையில் குடிப்பது நம் உடல் எடையை கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள உதவுவதுடன் தேவையற்ற கொழுப்பையும் கரைக்கிறது.

5. ஆலிவ் எண்ணெய்: வெண்ணெய், தாவர எண்ணெய்களுக்கு பதிலாக ஆலிவ் எண்ணெயை பயன்படுத்த கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ஆரோக்கியமான கொழுப்புகள் இதில் நிறைந்துள்ளன.

இதையும் படியுங்கள்:
தமிழுக்குப் பெருமை சேர்க்கும் பரதக்கலை!
Liver health

6. பழங்கள்: ஆரஞ்சு, திராட்சை போன்ற புளிப்பு நிறைந்த பழங்களை எடுத்துக்கொள்வது நம் உடலின் கொலஸ்ட்ரால் லெவலை கட்டுப்படுத்த உதவும்.

7. கீரை மற்றும் பச்சை இலை காய்கறிகள்: கொலஸ்ட்ரால் அளவை கட்டுப்படுத்தி இதய பாதுகாப்பை உறுதி செய்யும் கூறுகள் பச்சை இலை காய்கறிகளிலும், கீரை வகைகளிலும் உள்ளன. முட்டைகோஸ் மற்றும் அருகம்புல் ஆகியவற்றில் ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்துள்ளது. இவை கல்லீரல் கொழுப்பை குறைக்க உதவும்.

8. ஒமேகா 3: சால்மன் மீன், கானாங்கெளுத்தி போன்ற ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்களை உட்கொள்ள வீக்கம் மற்றும் கல்லீரல் கொழுப்பை குறைக்கலாம்.

9. ஆளி விதைகள்: ஆளி விதைகளில் உள்ள ஆல்ஃபா லினோலெக் அமிலம் எல்டிஎல் கொலஸ்ட்ரால் அளவை குறைக்கிறது.

ஆரோக்கியமான கல்லீரலை பராமரிக்க உணவில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com