தினமும் என்ன டிபன் செய்றதுனு கவலையா? இந்த 7 டிபன் செய்வது மூலம் வெயிட் லாஸும் ஆகலாம்!

Healthy Tiffin for weight loss
Healthy Tiffin for weight loss

பெண்கள், பேச்சலர்ஸ் எனப் பலருக்கும் இருக்கும் பெரிய கவலை தினமும் என்ன சமைக்கலாம் என்று தான். சிலருக்கு எதை சாப்பிட்டால் வெயிட் குறையும் என்ற சந்தேகமும் உள்ளது. இந்த 2 பிரச்சனைகளுக்கும் சேர்த்து இந்த பதிவில் ஒரு பதிலைப் பார்க்கலாம். இந்த 7 உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உங்கள் டிபன் கவலையும் போகும், வெயிட் லாஸும் ஆகும்.

  • இட்லி - சாம்பார்:

    தமிழ்நாட்டு உணவில் இட்லிக்கு முக்கிய பங்கு உண்டு என்றே சொல்லலாம். அரிசி, உளுந்து போட்டு அரைத்து நீங்கள் சாப்பிடுவதன் மூலம் உங்கள் உடலில் அதிக கலோரி சேராது. எளிதில் செரிமானம் ஆகக் கூடிய உணவாகும்.

  • ஓட்ஸ்:

    ஓட்ஸில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உங்கள் உடலுக்கு ரொம்பவும் நல்லதாகும். காலையில் டிபனாக எடுத்துக் கொள்வதன் மூலம் உங்கள் வெயிட் லாஸுக்கு அது உதவும்.

  • முளைக்கட்டிய பயறு:

    பயறு வகைகளை முளைக்கட்டி வைத்து, அதை டிபனாக சாப்பிடுவதன் மூலம் உங்களால் எளிதில் வெயிட் லாஸ் செய்ய முடியும்.

  • யோகர்ட்:

    பதப்படுத்தப்பட்ட பாலில் பல மணி நேரத்திற்கு உயிருள்ள பாக்டீரியாக்களைச் சேர்த்து வைப்பதன் மூலம் யோகர்ட் தயாரிக்கப்படுகிறது. இது தயிரை விட அதிக ஊட்டச்சத்து கொண்டுள்ளது என்பதால் இது உங்கள் வெயிட் லாஸுக்கு உதவும்.

இதையும் படியுங்கள்:
உடல் கழிவுகளை அகற்றி ஆரோக்கியம் தரும் ஆன்டி ஆக்ஸிடன்ட் உணவுகள்!
Healthy Tiffin for weight loss
  • ஸ்மூத்தி:

    அதிக காய்கறிகள், பழங்கள், புரோட்டின் பவுடர்கள் மூலம் தயாரிக்கப்படும் இந்த ஸ்மூத்தியைப் பருகுவதன் மூலம் உங்களுக்கு அதிக சத்துக்களும் கிடைக்கும்.

  • சியா விதை புட்டிங்:

    சியா விதைகளில் அதிக நார்ச்சத்தும், ஒமேகா 3 இருப்பதாலும், உங்கள் இதயத்திற்கு மிகவும் நல்லதாகும்.

  • பாசிப் பருப்பு தோசை:

    பாசிப் பருப்பை ஊறவைத்து அரைத்து, அதில் தேவையான காய்கறிகளைப் போட்டு தோசை ஊற்றிச் சாப்பிடுவது உங்கள் வெயிட் லாஸுக்கு உதவியாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com