
உடலுக்கு ஆற்றலைத் தரும் உணவுகளை உண்ண, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை ஆரோக்கியம் மேம்படுவதோடு, அவர்களின் அழகும் கூடுவது கண்கூடு. காய்கறிகள் மற்றும் பழங்களை பெரும்பாலும் அப்படியே சாப்பிடுவது உடலுக்கு நல்லது என்றாலும், காய்கறிகளை அதன் குணம் மாறாத சாறாகக் குடித்து வருவதால் அவற்றின் பலன்கள் இரட்டிப்பாகும்.
உதாரணமாக, மன அழுத்தத்தைப் போக்க கேரட் சாறு அருந்தலாம். தக்காளி சாறு அருந்த உடல் சோர்வை நீக்கி, புத்துணர்வை தருவதோடு சரும எழிலையும் மேம்படுத்தும். உடல் சதாசர்வ காலமும் சோர்வாக இருப்பதாக உணர்ந்தால் ஆப்பிள் சாறு அல்லது கேரட் சாறு அருந்த நல்ல பலன் கிடைக்கும்.
எந்த வகை ஆர்த்ரிட்டைஸாக இருந்தாலும் அன்னாசி பழச்சாறு அருந்த உடல் வலி சரியாகும். மலச்சிக்கல் நீங்க திராட்சை சாறு, ஆஸ்துமா குணமாக புதினா மற்றும் துளசி சாறு, சிறுநீரகக் கல் கரைய வாழைத்தண்டு சாறு, இரத்த அழுத்தத்தைப் போக்க பீட்ரூட் சாறு, அல்சர் குணமாக தேங்காய் பால் சாறு, கேரட் சாறு மற்றும் மணத்தக்காளி கீரை சாறு அருந்தலாம். அகத்திக்கீரை தண்ணி சாறு குடல் நலத்தை மேம்படுத்தும்.
குறைந்த இரத்த அழுத்தத்துக்கு மாதுளை பழச்சாறு நல்ல பலன் தரும். மேலும் இது, மேனி மாசு மருவின்றி பளபளப்பாக ஆரோக்கியமாக இருப்பதற்கும் உதவுகிறது. இதய பலத்துக்கு செம்பருத்தி சாறு, பீட்ரூட் சாறு, தேன் கலந்த அன்னாசி சாறு பருகலாம்.
ஆண்மைக் குறைபாட்டை நிவர்த்தி செய்கிறது செவ்வாழை சாறு. வயதான தோற்றத்தைப் போக்கி, இளமையான தோற்றத்தைப் பெற ஆப்பிள் மற்றும் ஸ்ட்ராபெரி சாறு, செர்ரி பழச்சாறு அருந்த உதடுகள் அதன் நிறம் பொலிவுடன் பளபளப்பாக இருக்க உதவுகிறது.