இரவு நேர நெஞ்செரிச்சல்... ஓ! அப்படியா விஷயம்? 

Heartburn
Heartburn at night
Published on

இரவு நேரத்தில் தூக்கத்தில் இருக்கும்போது ஏற்படும் நெஞ்செரிச்சல் பலருக்கு அசௌகரித்தை ஏற்படுத்தும் ஒரு பாதிப்பாகும். இது உறக்கத்தை பாதித்து, மறுநாள் அன்றாட செயல்களில் ஈடுபட முடியாமல் செய்துவிடும். நெஞ்செரிச்சல் ஏற்படுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். அவை என்னன்ன என்பது பற்றி இந்தப் பதிவில் விரிவாகப் பார்க்கலாம். 

இரவு நேர நெஞ்சரிச்சலுக்கான காரணங்கள்: 

அமிலத்தன்மை அதிகரிப்பு: உணவுக் குழாய் மற்றும் வயிற்றில் உற்பத்தியாகும் அமிலத்தின் அளவு அதிகரிப்பதே நெஞ்செரிச்சலின் முக்கிய காரணமாகும். இது உணவுக் குழாயின் உள்புறத்தை எரிச்சலடையச் செய்து நெஞ்செரிச்சல், இதயத்தில் எரிச்சல் போன்ற உணர்வுகளை ஏற்படுத்தும். 

ஹைட்டஸ் ஹெர்னியா: இது வயிற்றில் ஒரு பகுதி உணவுக் குழாயின் மேல் பகுதியில் நுழைந்து விடுவதால் ஏற்படும் ஒரு நிலை. இதனால், வயிற்றில் உள்ள அமிலம் உணவுக் குழாயில் எளிதாக பின்னோக்கி வந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். 

அதிக கொழுப்புள்ள, மசாலா உணவுகள்: அதிக கொழுப்பு மற்றும் மசாலா உள்ள உணவுகள் செரிமானத்தை மெதுவாக்கி வயிற்றில் அழுத்தத்தை அதிகரிக்கும். இதனால், அமிலம் உணவுக் குழாயில் பின்னோக்கி வந்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தும். மேலும் டீ, காபி, மது போன்ற பானங்கள் வயிற்றில் அமிலத்தை அதிகரித்து நெஞ்செரிச்சலை ஏற்படுத்தலாம். 

மன அழுத்தம்: சில சமயங்களில் அதிகமான மன அழுத்தம் உடலில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தி, செரிமானப் பிரச்சனைகளை உண்டாக்கும். இதில் நெஞ்செரிச்சலும் அடங்கும். 

தீர்வுகள்: இரவில் நெஞ்செரிச்சல் பிரச்சனையை சரி செய்ய முதலில் உங்கள் உணவுப் பழக்கத்தில் மாறுதல்களை ஏற்படுத்த வேண்டும். மொத்தமாக அதிக உணவை உண்ணாமல், சிறிய அளவில் அடிக்கடி உணவு உண்ணும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அதிக கொழுப்பு மற்றும் மசாலா உள்ள உணவுகளை தவிர்ப்பது நல்லது. ஆரோக்கியமான பழங்கள், காய்கறிகள், தானியங்கள் நிறைந்த உணவுகளை உண்ணுங்கள். காபி, டீ, மது போன்றவற்றை குறைவாகவே அருந்துவது நல்லது. உணவு உண்டதும் உடனடியாக படுக்காமல், குறைந்தது 2-3 நேரம் கழித்து படுப்பது நெஞ்செரிச்சல் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். 

இதையும் படியுங்கள்:
அற்ப ஆயுசு கொண்டவை என நாம் நினைக்கும் ஈசலின் அதிசய வாழ்க்கை முறை தெரியுமா?
Heartburn

இரவு நேர நெஞ்செரிச்சல் என்பது வாழ்க்கைமுறை மாற்றங்கள் மற்றும் சில மருத்துவ சிகிச்சைகள் மூலம் சரி செய்யக்கூடிய ஒரு பிரச்சனைதான். ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றினாலே இந்த பாதிப்பில் இருந்து நீங்கள் விடுபட முடியும். இருப்பினும், உங்களுக்கு நெஞ்செரிச்சல் நீண்ட காலம் இருக்கிறது என்றால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெற்று சிகிச்சை மேற்கொள்வது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com