Heat Stroke: வெயிலில் அதிகமா போகாதீங்க, ஹீட் ஸ்ட்ரோக் வரலாம்... ஜாக்கிரதை! 

Heat Stroke
Heat Stroke

கோடைகாலங்களில் வெப்பநிலை அதிகரிக்கும்போது Heat Stroke உள்ளிட்ட வெப்பம் தொடர்பான நோய்கள் ஏற்படலாம். ஹீட் ஸ்ட்ரோக் என்பது உடலின் உட்புற வெப்பநிலை சராசரியை விட அதிகரிக்கும்போது ஏற்படும் ஒரு கடுமையான நிலையாகும். அதாவது 40°C மேல் உடல் வெப்பநிலை அதிகரித்தால், ஹீட் ஸ்ட்ரோக் ஏற்படும் வாய்ப்புள்ளது. இதுபோன்ற தருணங்களில் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டியது அவசியம். 

Heat Stroke என்றால் என்ன? 

வெப்பப் பக்கவாதம் பொதுவாக அதிக வெப்ப நிலையில் நீண்ட நேரம் இருந்தால் ஏற்படுகிறது. இது யாரை வேண்டுமானாலும் பாதிக்கலாம். ஆனால், பெரும்பாலும் வயதானவர்கள், சிறு குழந்தைகள் மற்றும் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நபர்கள் இதனால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். 

ஹீட் ஸ்ட்ரோக் அறிகுறிகள்: 

ஒருவருக்கு ஹீட் ஸ்ட்ரோக் வந்துவிட்டது என்பதற்கான அறிகுறிகள் என்னவென்றால், 

  • அதிக உடல் வெப்பநிலை. 

  • சூடான மற்றும் வறண்ட சருமம். 

  • அதிக இதயத்துடிப்பு மற்றும் சுவாசம். 

  • தலைவலி, மயக்கம் மற்றும் குழப்பம். 

  • குமட்டல் மற்றும் வாந்தி. 

  • வலிப்பு அல்லது சுயநினைவு இழப்பு.

இந்த அறிகுறிகள் ஒருவருக்கு இருந்தால் உடனடியாக மருத்துவரை நாட வேண்டும். ஏனெனில் இது உயிருக்கே ஆபத்தை விளைவிக்கலாம். 

ஹீட் ஸ்ட்ரோக் தடுக்கும் முறைகள்: 

கோடைகாலங்களில் உங்களுக்கு அதிக தாகம் இல்லாவிட்டாலும் அப்போபோது தண்ணீர் குடித்து நீரேற்றத்துடன் இருங்கள். இது தவிர இளநீர், பழச்சாறுகள் போன்ற உடலுக்கு ஊட்டம் கொடுக்கும் பானங்களைக் குடிப்பதும் நல்லது. 

தளர்வான, இலகு ரக, வெளிர் நிற ஆடைகளை அணியுங்கள். இது உங்கள் உடலில் காற்று சுழற்சியை அனுமதித்து வியர்வை ஆவியாக உதவுகிறது. நேரடி சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து பாதுகாத்துக் கொள்ள, தொப்பி மற்றும் சன் கிளாஸ் பயன்படுத்துங்கள். 

வெளியே சென்றாலும் அதிக நேரம் நேரடி சூரிய ஒளியில் இருக்க வேண்டாம். அவ்வப்போது நிழலான இடங்களுக்குச் செல்லுங்கள். முடிந்தால் வீட்டில் ஒரு ஏசி வாங்கி மாட்டிக் கொள்வது நல்லது. 

முடிந்தவரை வெயில் காலங்களில் வெளியே சென்று நேரம் செலவிடுவதைக் கட்டுப்படுத்துங்கள். குறிப்பாக அதிகம் வெப்பம் இருக்கும் வேலையில் வெளியே செல்லாதீர்கள். 

இதையும் படியுங்கள்:
Stay Fit at Home: ஏன் ஜிம்முக்கு போகணும்? இந்த உடற்பயிற்சிகளை வீட்டில் செய்தாலே போதுமே! 
Heat Stroke

உங்கள் வீட்டில் வயதானவர்கள் சிறு குழந்தைகளோ இருந்தால் அவர்களை முறையாக கண்காணிக்கவும். அவர்கள் குளிர்ச்சியான சூழலில் இருப்பது மற்றும் நீரற்றத்துடன் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். 

இந்த வெப்பப் பக்கவாத அறிகுறிகள் பற்றி மற்றவர்களுக்கு கற்பிக்கவும். இத்தகைய அறிகுறிகளுடன் யாராவது இருந்தால் உடனடியாக அவர்களை மருத்துவரிடம் கொண்டு செல்லுங்கள். 

மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் கருத்தில் கொண்டு, இந்தக் கோடை காலத்தில் பாதுகாப்பாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்க முயற்சி செய்யுங்கள். உங்கள் ஆரோக்கியமே உங்கள் குடும்ப ஆரோக்கியம். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com