Stay Fit at Home: ஏன் ஜிம்முக்கு போகணும்? இந்த உடற்பயிற்சிகளை வீட்டில் செய்தாலே போதுமே! 

Stay Fit at Home
Stay Fit at Home

நமது வாழ்வில் உடற்பயிற்சிக்கு முன்னுரிமை அளிப்பதென்பது நம் ஒட்டுமொத்த நல்வாழ்வுக்கும் அவசியமான ஒன்றாகும். இதற்காக நீங்கள் ஜிம்முக்கு தான் செல்ல வேண்டும் என்ற அவசியமில்லை. வீட்டில் இருந்தபடியே சில எளிய உடற்பயிற்சிகள் மூலமாக உங்கள் உடலை பிட்டாக வைத்திருக்க முடியும். சிலருக்கு ஜிம்முக்கு செல்ல நேரம் இருப்பதில்லை. அத்தகையவர்களும் வீட்டில் இருந்தபடியே உங்கள் உடலை கட்டுக்கோப்பாக மாற்ற முடியும். சரி வாருங்கள் அதற்கான வழிமுறைகள் என்னவெனப் பார்க்கலாம். 

இதையும் படியுங்கள்:
கோடைகாலத்தில் நிம்மதியாகத் தூங்குவது எப்படி? வாங்க தெரிஞ்சுக்கலாம்!
Stay Fit at Home

இலக்கு முக்கியம்: நீங்கள் எந்த ஒரு புதிய விஷயத்தைத் தொடங்கப் போகிறீர்கள் என்றாலும், அதற்கான இலக்கை முதலில் நிர்ணயம் செய்வது அவசியம். எனவே நீங்கள் வீட்டிலிருந்து உடற்பயிற்சி செய்யப் போகிறீர்கள் என்றால், அதற்கான இலக்குகளை அமைப்பது முக்கியம். நீங்கள் எந்த நிலையை அடைய விரும்புகிறீர்கள் என்பதை நிர்ணயித்து, அதைப் பூர்த்தி செய்யும் பயிற்சிகளை திறம்பட செய்வது அவசியம். இதன் மூலமாக உங்கள் உடற்பயிற்சி பயணம் உந்துதலுடன் இருக்கும். 

உடற்பயிற்சி இடம்: உடற்பயிற்சி செய்வதற்காக வீட்டில் ஒரு குறிப்பிட்ட இடத்தை நிர்ணயம் செய்யவும். இது உங்களது மனநிலையை உடற்பயிற்சி செய்வதற்கு தயார்படுத்த உதவும். அதற்கான இடம் பெரிதாக இல்லை என்றாலும், கை, கால்களை நீட்டி மடக்கி உடற்பயிற்சி செய்ய போதுமானதாக இருந்தாலே போதும். குறிப்பாக அந்த இடத்திற்கு அருகே எந்த தடைகளும் இல்லாமல் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். 

உடல் எடைப் பயிற்சி: அதாவது உங்கள் உடல் எடையைப் பயன்படுத்தியே செய்யும் பயிற்சிகளுக்கு முன்னுரிமை கொடுங்கள். இத்தகைய பயிற்சிகள் செய்ய உங்களுக்கு எந்த உபகரணங்களும் இருக்க வேண்டிய அவசியமில்லை. தண்டால் எடுப்பது, Push up, Squats, பர்பீஸ் போன்ற உடற்பயிற்சிகள், உங்கள் உடல் தசைகளை வலிமையாக்க பெரிதளவில் உதவும். 

கார்டியோ பயிற்சிகள் செய்யவும்: இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தவும், கலோரிகளை எரிக்கவும் கார்டியோ என சொல்லப்படும் இருதயப் பயிற்சிகள் முக்கியமானவை. இதற்காக உங்களுக்கு மேம்பட்ட உபகரணங்கள் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஸ்கிப்பிங், ஜம்பிங் ஜாக்ஸ் போன்ற பயிற்சிகளே போதுமானதாக இருக்கும். 

வீட்டுப் பொருட்களை பயன்படுத்துங்கள்: உங்கள் வீட்டில் இருக்கும் கனமான பொருட்களை உடற்பயிற்சி செய்ய பயன்படுத்திக் கொள்ளுங்கள். தண்ணீர் கேனை கையில் வைத்துக் கொண்டு, Squats பயிற்சி செய்யலாம். நாற்காலியை கையில் பிடித்துக் கொண்டு, Incline Push up செய்யலாம். கனமான புத்தகங்களைப் பயன்படுத்தி Biceps பயிற்சி செய்யலாம். இப்படி உங்களது படைப்பாற்றலுக்கு ஏற்ப வீட்டில் இருக்கும் பொருட்களை உடற்பயிற்சிக்காகப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். 

தினசரி உடற்பயிற்சி செய்யுங்கள்: உங்களது உடற்பயிற்சி இலக்குகளை அடைவதற்கு, தொடர்ச்சியான உடற்பயிற்சி முக்கியமானது. நீங்கள் நிர்ணயித்துள்ள நேரத்தில் தினசரி உடற்பயிற்சிகளை தவறாமல் மேற்கொள்ளுங்கள். இதற்காகவே பிரத்தியேகமாக அட்டவணையை உருவாக்கி, தினசரி உடற்பயிற்சி செய்வதை உறுதி செய்யவும். குறைந்தது ஒரு மணி நேரமாவது உடற்பயிற்சி செய்தால் மட்டுமே, எதிர்பார்க்கும் பலனை நீங்கள் அடைய முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com