மூட்டுவலிக்குக் கை கொடுக்கும் அவசர வைத்தியக் குறிப்புகள்!

மூட்டு வலி
மூட்டு வலிhttps://tamil.webdunia.com
Published on

ன்றைய நாட்களில் அதிகமானோர் சிரமப்படுவது முட்டிகளில் ஏற்படும் வலியால்தான். அதைக் கடப்பதற்கு சில கைமருந்துகளை பயன்படுத்தினால் ஆரோக்கியத்தை பலப்படுத்திக் கொள்ளலாம். அதற்கான சில குறிப்புகளை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

மூட்டு வலி ஆரம்பிக்கும்பொழுதே எருக்கு இலையை பொடியாக நறுக்கி அதனுடன் செங்கல் பொடி ஒரு கரண்டி, ஒரு ஸ்பூன் உப்பை கலந்து சூடாக வறுத்து துணியில் கட்டி ஒத்தடம் கொடுக்க வலி குறையும்.

கடுகு எண்ணெயை லேசாக சூடுபடுத்தி மூட்டுக்களின் மீது தேய்க்க வலி குறையும்.

மூட்டு வலி உள்ள இடத்தில் துளசி சாற்றுடன் இஞ்சிச் சாறு, பொடித்த மிளகு போன்றவற்றை கலந்து பூச வலி குறையும்.

மூட்டு வலியை கண்டிப்பதில் வெந்நீருக்கு நல்ல பங்கு உண்டு. பொறுக்கும் சூட்டில் வெந்நீர் ஒத்தடம் கொடுக்கலாம். வெறுமனே வெந்நீரை ஊற்றி நன்றாக நீவி விட்டாலும் வலி குறைவது தெரியும். வெந்நீர்தானே என்று அலுப்பு, அலட்சியப்படாமல் இதைச் செய்ய வேண்டும்.

கால் கெண்டைக்கால் சதை பகுதியில் வலி இருந்தால் நல்லெண்ணெயுடன் உப்பு கலந்து தேய்க்க வழி குறைவது தெரியும்.

மூட்டு வலி உள்ள இடத்தில் விளக்கெண்ணெயை சூடு படுத்தித் தடவி சிறிது நேரம் கழித்து வெந்நீரால் ஒத்தடம் தர நல்ல இதமாக இருக்கும்.

முடக்கத்தான் கீரையில் இட்லி, தோசை, அடை, ரசம் வைத்து சாப்பிட மூட்டு வலி குணமாகும். இதை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

மூட்டு வலிக்கு நொச்சி இலை சாற்றை பூசலாம்.

சித்தரத்தை கசாயம் குடித்து வர, மூட்டு வலிக்கு நல்ல நிவாரணம் தெரியும்.

வேப்ப எண்ணெயில் கற்பூரத்தைப் பொடித்து போட்டு சூடு செய்து வலி உள்ள இடத்தில் தேய்க்கலாம்.

மூட்டுகளில் வலி இருக்கும்போது தினசரி ஏதாவது ஒரு எண்ணெய் வேப்பெண்ணெய், விளக்கெண்ணெய், நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் என்று இதில் இரண்டு எண்ணெய்களை கலந்து சூடாக்கி தேய்த்தாலும் நல்ல பலன் தெரியும்.

சுக்கு பொடியை கொதிக்க வைத்து பூசினால் மூட்டு வீக்கம் குறையும்.

இதையும் படியுங்கள்:
இலையுதிர் காலத்தில் ஏற்படும் சரும நோய்களும் தீர்வுகளும்!
மூட்டு வலி

மழை நேரமும் குளிரும் உள்ளபோது மூட்டு வலி சிலருக்கு அதிகமாக வந்துவிடும். இதற்கு சிறிது வினிகரை வலியுள்ள மூட்டுகளின் மீது தேய்த்து விட வலி மறையும்.

மூட்டு வலி, மூட்டு வீக்கம் குணம் பெற பப்பாளி இலை ஒத்தடம் தர நல்ல நிவாரணம் பெறலாம்.

சிவப்பு தண்டு கீரை சிலருக்கு வாயுவை உண்டுபண்ணும். ஏனெனில், அவற்றில் இருக்கிற பச்சையம் செரிக்க நேரம் எடுத்துக்கொள்ளும். ஆதலால் அதுபோன்ற கீரை வகைகளை அளவோடு எடுத்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் தவிர்த்து விடுவது நலம்.

உடம்பு வலி இருந்தால் குளிக்கும் தண்ணீரில் பூங்கற்பூரத் தூள் சிறிதளவு போட்டு குளிக்கலாம்.

இவையெல்லாம் மூட்டு வலிக்கு ஆரம்பகால மருந்துகள்தான். அளவுக்கு மிஞ்சின வலி இருந்தால் நல்ல மருத்துவரை அணுகுவதுதான் நல்லது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com