ஜப்பானியர்கள் 100 வயது வாழ்வதற்கு இதுவும் ஒரு காரணம்!

herbs
herbs
Published on

ஜப்பானியர்கள் 100 வயது வாழ்வதற்கு காரணமான மூலிகைகள்

ஷிசோ:

இந்த இலை மூலிகை நீண்ட ஆயுளைப் கொடுக்கக் கூடியது. இது ஆக்சிஜனேற்றிகள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளை உடையது.. நோயெதிர்ப்பை அதிகரிக்கவும், வயதாவதை மெதுவாக்கவும் ஆற்றலைத் தரக் கூடியது.

ஜின்செங்:

இது நீண்ட ஆயுளை வழங்கும் பழமையான மூலிகையாகும். இது நோயெதிர்ப்பை அதிகரிக்கவும் மூளையின் செயல்பாட்டை மேம்படுத்தவும் பயன்படுகிறது. இதன் வேர்களில் சபோனின்கள் நிறைந்துள்ளன. அவை வயதாவதைத் தடுக்கிறது.

ரெய்ஷி  காளான்:

ஜப்பானிய மருத்துவத்தில் ரெய்ஷி காளான்கள் அழியாத பூஞ்சை என அழைக்கப்படுகிறது. இது மன அழுத்தத்தைக் குறைக்கவும் கல்லீரல் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் இரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தவும் உதவுகின்றன.

க்ரைசான்திமம்:

க்ரைசான்திமம் தேனீர் ஜப்பானில் பிரபலமான பானமாகும். இது இரத்த ஓட்டத்தை சீராக்கி இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். இதன் ஆக்சிஜனேற்றிகள் சரும புத்துணர்ச்சிக்கு உதவுகின்றன‌ சருமத்தை பளபளக்க வைக்கும் சிறந்த மூலிகையாகும்.

பர்டாக் வேர்:

இந்த மூலிகை சக்திவாய்ந்த நச்சு நீக்கி ஆகும். இது உடல் நச்சை நீக்கி சுத்தமாக்குகிறது. இதன் வேரைப் பயன்படுத்தி தேனீர் தயாரிக்கப்படுகிறது.

கொட்டு கோலா:

இது அறிவாற்றலை மேம்படுத்திக் கூடியது. மூளை செயல்பாட்டுக்கும் சிறந்தது. சரும ஆரோக்கியம் மற்றும் காயங்களையும் குணப்படுத்துகிறது.

உமேபோஷி:

இந்த சிறிய பழத்தில் அதிகளவு ஆக்சிஜனேற்றிகள் உள்ளன. புளிப்புச் தன்மை உள்ள இது உடலின் பிஹெச்‌ அளவைக் கட்டுப்படுத்துகிறது. இது செரிமானத்தை சீராக்கி உடல் நச்சுக்களை நீக்குகிறது.

அஷிதாபா:

இந்த பச்சை தாவரத்தில் வைட்டமின்கள், ஆக்சிஜனேற்றிகள் மற்றும் க்ளோரோஃபில் நிரம்பியுள்ளன. உடல் நச்சுக்களை இது நீக்குகிறது.  செல்களின் உருவாக்கத்தை ஊக்குவித்து சருமப் பொலிவை பராமரிக்க உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
உணவு Vs தைராய்டு: இளம் பெண்கள் அவசியம் அறிய வேண்டியவை!
herbs

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com