கோடையில் இதையெல்லாம் சாப்பிட்டால் உடம்பு குளிர்ச்சி ஆகுமாம்! உங்களுக்கு தெரியுமா?

Fruits and vegetables
Fruits and vegetables

கோடைகாலத்தில் கொளுத்தும் வெயிலில் நீரிழப்பு மற்றும் ஆற்றல் குறைவு ஏற்படும் நமது உடல் வெப்பநிலையை கட்டுப்படுத்தவும் கோடை காலத்து வெப்பத்தை குறைக்கவும் சில உணவு வகைகளை கட்டாயம் சாப்பிட வேண்டும்.

1. தேங்காய்:

Coconut
Coconut

சிறந்த கோடை பானம் தேங்காய் தண்ணீர் முக்கியமான வைட்டமின்கள் தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் நிறைந்த இந்த பானம் இது வெப்பத்திற்கு எதிரான போரில் குளிர்ச்சியான குணங்களை கொண்டுள்ளது தேங்காய் நீரை தவறாமல் உட்கொள்ள வேண்டும்.

2. சிட்ரஸ் பழங்கள்:

Citrus fruits
Citrus fruitsImg Credit: Researchgate

எலுமிச்சை, ஆரஞ்சு ,அன்னாச்சி, முலாம்பழம் அனைத்து சிட்ரஸ் பழங்களும் சுவையாகவும் தாகத்தை தணிக்க சிறந்ததாகவும் இருக்கிறது அவை நார்ச்சத்து மற்றும் நல்ல நீர் உள்ளடக்கத்துடன் இருக்கின்றன இந்த பழங்களில் நிறைய வைட்டமின் சி உள்ளது இது நரம்புகளை ஆற்றவும் உடலில் இருந்து நச்சுக்களை அகற்றவும் உதவுகிறது. இவற்றை ஜூஸ் செய்தும் சாப்பிடலாம் துண்டுகளாக்கியும் சாப்பிடலாம்.

3. தர்பூசணி:

Watermelon fruit
WatermelonImg Credit: herzindagi

கோடை காலம் தர்பூசணி பழத்திற்கு மிக மிக சிறந்த பழமாகும் இதில் முழுவதுமே நீர்சத்து தான் உள்ளது  தர்பூசணியில் ஏராளமான ஆன்டி ஆக்சிடென்ட்கள்  இருப்பதால் அருமையான குளிர்ச்சியான பண்புகளை கொண்டுள்ளது.

4. வெங்காயம்:

Onion
Onion

வெங்காயத்தின் குளிர்ச்சி தன்மை ஆச்சரியமாக இருக்கும் சாலட்டுகளை தயாரிக்க அவற்றை உப்பு மற்றும் எலுமிச்சையுடன் சேர்க்க வேண்டும் காய்கறிகள் கறிகள் மற்றும் ரைதாவுடன் வெங்காயத்தைச் சேர்ப்பது மற்றொரு வழி. சிவப்பு வெங்காயத்தில்  காணப்படும் குவெர்செடின் பெரும்பாலும் இயற்கை ஒவ்வாமை எதிர்ப்பு சக்தியாக கருதப்படுகிறது. வெங்காயத்தை தொடர்ந்து உணவில் சேர்த்துக் கொள்வது சூரிய ஒளியிலிருந்து நம்மை பாதுகாக்க பெரிதும் உதவுகிறது.

5. தயிர்:

Curd
Curd

தயிர் சுவையாக இருப்பதுடன் உடலுக்கு குளிர்ச்சியையும் தருகிறது சுவையான லஸ்ஸி அல்லது மோர் செய்து சாப்பிடலாம்.

6. வாழைப்பழங்கள்:

Banana
Banana

வாழைப்பழத்தில் நார்ச்சத்து அதிகம் உள்ளதால் செரிமானத்திற்கு நல்லது கோடையில் அமிலத்தன்மையை தவிர்ப்பதற்கான சிறந்த உத்தி அதிகப்படியான பழுத்த வாழைப்பழங்களை உட்கொள்வது ஆகும் வெப்பத்தில் நீர் ஏற்றத்தை பராமரிக்க இது ஒரு அருமையான வழியாகும்.

7. கிர்ணிப்பழம்:

Kirni fruit
Kirni fruit

 கிர்ணிப்பழத்திலும் தர்பூசணிக்கு நிகரான நீர்ச்சத்து உள்ளது. கோடைகாலத்தில் சாப்பிட்டால் எண்ணற்ற பலன்களை தரும். இந்த பழத்தில் சுமார் 90% தண்ணீர் உள்ளதால் வெப்பத்தால் நம் உடலில் ஏற்படும் நீர் இழப்பினை ஈடு செய்கிறது . நீரிழிப்பை சமாளிக்கபெரிதும் உதவுகிறது வைட்டமின் ஏ மற்றும் சி நிறைந்துள்ள கிர்னிப்பழம் தர்பூசணி போன்றே சருமா ஆரோக்கியத்திற்கும் நோய் எதிர்ப்பு ஆற்றலுக்கும் உதவுகிறது பீட்டா கரோட்டின் போன்ற ஆன்ட்டி ஆக்சிடெண்ட் நிறைந்த இந்த பழம் கண்களின் ஆரோக்கியத்திற்கும பங்களிக்கிறது.

8. வெள்ளரிப்பழம்:

Vellari pazham
Vellari pazhamImg Credit: IBC

வெள்ளரிக்காய் போலவே வெள்ளரி பழத்திலும் வைட்டமின் சி யுடன் பொட்டாசியம் நிறைந்துள்ளதால் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துகிறது கோடை காலத்தில் செரிமானத்திற்கும் குடல் ஆரோக்கியத்திற்கும் மிகவும் உதவுகிறது கோடையில் இரவில் புழுக்கம் காரணமாக சரியாக தூங்க முடியாமல் கஷ்டப்படும் நபர்களுக்கு வெள்ளிரிப்பழம் சாப்பிட்டால் நல்ல தூக்கம் வரும்.

இதையும் படியுங்கள்:
காய்கறிகள் வேக வைத்த நீரில் இவ்வளவு நன்மைகளா!
Fruits and vegetables

9. வாட்டர் ஆப்பிள்:

Water Apple
Water Apple

ஜம்பு காய் என்று அழைக்கப்படும் வாட்டர் ஆப்பிள் அல்லது ரோஸ்ஆப்பிள் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது வாட்டர் ஆப்பிளில் சுமார் 90% நீச்சத்துள்ளது கோடையில் சரும வறட்சியை தடுக்கும் பண்பு உள்ளது வைட்டமின் சி பொட்டாசியம் கால்சியம் போன்ற ஊட்டச்சத்துக்களின் மிகுதியாக உள்ளன கோடை காலத்தில் இது நீரழிவு நோயாளிகளுக்கு மிகுந்த பலனை தரும் பழமாகும்.

கோடையில் தவிர்க்க வேண்டிய சில பழங்களும் உள்ளன அவை  என்னவென்றால் பேரிச்சம்பழம், அத்திப்பழம், பலாப்பழம் போன்றவற்றை கோடையில் சாப்பிடக்கூடாது.

10. ஐஸ் ஆப்பிள் (நுங்கு):

Nungu
Nungu

நுங்கில் கால்சியம் மற்றும் பைட்டோ நியூட்ரியன்ஸ் நிறைந்துள்ளது இதிலுள்ள இரும்புச்சத்து பொட்டாசியம் மற்றும் ஜிங்க் போன்ற தாதுக்கள் உடலில் கழிவுகளை நிக்க பெரிதும் உதவுகின்றன உடலை உஷ்ணமாக்கம் செயற்கையான ஐஸ்கிரீம் உடலுக்கு கேடு விளைவிக்கும் மாற்றாக கோடை காலத்தில் நுங்கினை வாங்கி சாப்பிடலாம் எந்தவித கேடும் இல்லாமல் உடலை குளிர்ச்சியாகவும் மனதை உற்சாகமாக வைத்திருக்கும் நுங்கு ஒரு அருமையான கோடைக்கு வரப்பிரசாதமான பொருளாகும் நீங்கள் இயற்கை முறையில் செய்யப்பட்ட நன்னாரி சர்பத் மற்றும் எலுமிச்சை சர்ப்பத்துடன் கலந்து சாப்பிடலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com