நவீன காலக்கட்டத்தில் அனைவருக்கும் 9 - 5 வாழ்க்கையை தான் வாழ்ந்து கொண்டிருக்கோம். 9 மணிக்கு அடித்து பிடித்து வேலைக்கு சென்றால் ஸ்ட்ரெஸ், டிப்ரஸன் என அடுத்தடுத்து கவலைகள் குவிந்து கொண்டே தான் வரும். இதனால் நாள் முழுவதும் நீங்கள் சோர்வாகவே உணர்வீர்கள். இந்த பிரச்சனையை போக்க தினசரி நீங்க இந்த 5 சத்தான சிற்றுண்டிகளை எடுத்து கொண்டால் போதும். உங்கள் சோர்வை நீக்கி புத்துணர்வாக வைக்கும்.
மோர்:
பழங்காலம் முதலே மோர் முக்கியமான உணவாக கருதப்படுகிறது. வயல் வெளியில் கஷ்டப்பட்டு வேலை பார்ப்பவர்கள், வெயிலில் களைத்து போய் வருபவர்கள் என அனைவருக்கும் மோர் கொடுத்து தான் பூஸ்ட் செய்வார்கள். அந்த அளவிற்கு மோர் உங்களை புத்துணர்வாக்க சிறந்ததாகும். இது உங்களின் டிஹைட்ரேஷனை போக்கி புத்துணர்வு பெற செய்யும். மோரை நீங்கள் காலை 10 - 11 மணியளவில் எடுத்து கொள்ளலாம்.
புதினா டீ:
பொதுவாகவே புதினா புத்துணர்ச்சி அளிக்கும். இதனால் நீங்கள் அலுவலகத்தில் சாப்பிட்ட பிறகு ஒரு மந்த நிலையை அடைவீர்கள். இந்த நேரத்தில் நீங்கள் புதினா டீயை எடுத்து கொண்டால் அது உங்களுக்கு உதவியாக இருக்கும்.
வாழைப்பழம்:
வாழைப்பழம் உங்களது உடல் உழைப்பை ஊக்கப்படுத்த உதவும். இதில் உள்ள சர்க்கரையும், பொட்டாசியமும் உங்களுக்கு அலெர்ட் கொடுக்கும். வாழைப்பழத்தை நீங்கள் மாலை ஸ்னேக்ஸாகவோ அல்லது காலை நேர ஸ்னேக்ஸாக எடுத்து கொள்வது நல்லது.
வறுத்த கடலை:
வறுத்த கடலை உங்களது பசியை போக்கும், சாப்பிட நன்றாக இருப்பதால் இது உங்களுக்கு சிறந்த ஸ்னேக்சாகவும், புத்துணர்ச்சி அளிக்கவும் செய்யும்.
பிஸ்தா:
உலர் பழ வகையை சேர்ந்த பிஸ்தா, உடலுக்கும் மனதுக்கும் ஏற்ற உணவாகும். மாலை நேரத்தில் பிஸ்தா சாப்பிடுவதன் மூலம், உங்களது சர்க்கரை லெவல் அதிகமாகும்.