HMPV Virus - "அச்சமோ பீதியோ அடையத் தேவை இல்லை" - Dr V. ராமசுப்ரமணியன் (specialist - infectious diseases) தரும் விளக்கம்.

HMPV Virus
Dr V. ராமசுப்ரமணியன்
Published on

வேகமாக பரவி வரும் HMPV Virus ஆபத்தானதா?

சென்னை CAPSTONE CLINIC, இணை நிறுவனர் Dr. வி ராமசுப்ரமணியன் அவர்கள் தரும் விளக்கம் பார்க்கலாமா?

தற்சமயம், நம் நாட்டில், HMPV எனப்படும் இந்த வைரஸ் பாதிப்புக்குள்ளானோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இது குறித்து, சென்னை நுங்கம்பாக்கத்தில் இருக்கும் CAPSTONE CLINIC க்கின் இணை நிறுவனரும், தொற்றுநோய் நிபுணருமான டாக்டர் வி. ராமசுப்பிரமணியன் அவர்களை தொடர்பு கொண்டோம்.

HMPV ஆபத்தானதா டாக்டர்?

Human metapneumo virus என்பதன் சுருக்கம்தான் HMPV. ஃப்ளூ காய்ச்சல் சளி ஜலதோஷம் உருவாக்கும் RNA வைரஸ் வகையைச் சேர்ந்ததுதான் இது.

ஏற்கனவே சுமார் 60 வருடங்களுக்கு மேல் உலகில் காணப்படும் வைரஸ்தான் இது. இருமல், சளி மற்றும் சுவாச பிரச்னைகளுடன் கூடிய வழக்கமான வைரஸ் காய்ச்சல்தான்.

யாருக்கு பாதிப்பு ஏற்படுத்தும் டாக்டர்? பாதிப்பு எவ்வாறு இருக்கும்?

சிறு குழந்தை முதல் வயதானவர் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம்.

வைரஸ் பாதிப்பு இருப்பவர்கள், தும்மினால், இருமினால், பேசினால் கூட மற்றவர்களுக்கு தொற்றிக்கொள்ளும்.

நோய் எதிர்ப்பு சக்தி குறைவானவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு உண்டு.

இருமல், தும்மல், மூக்கடைப்பு, உடம்பு வலி போல ஜலதோஷத்தின் அறிகுறிகள் இருக்கும்.

அனேகம் பேருக்கு காய்ச்சல் கூட வருவதில்லை.

5 வயதுகுட்பட்ட குழந்தைகளுக்கோ, 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கோ வரும்போது காய்ச்சல் வரலாம்.

சில வயதானவர்களுக்கு வீசிங் பிரச்னை இருந்தால், RSV என்னும் வைரஸ் தொற்று காரணமாக ஃப்ளூ ஜுரம் வந்தால் மருத்துவமனையில் அட்மிட் ஆகி சிகிக்சை தர வேண்டியிருக்கும்.

மற்றபடி அச்சமோ பீதியோ அடையத் தேவை இல்லாத வைரஸ் இது.

இதையும் படியுங்கள்:
வால்நட்டிலிருக்கும் ஆரோக்கிய நன்மைகளும் பக்க விளைவுகளும்!
HMPV Virus

இதற்கான சிகிச்சை என்ன டாக்டர் ? வராமல் எவ்வாறு பாதுகாத்துக் கொள்வது?

இதற்கு தடுப்பூசி எதுவும் தற்சமயம் இல்லை.

சாதாரண ஜலதோஷத்திற்கு எடுத்துக் கொள்வதுபோல் பாரசிட்டமால் க்ரோசின் போன்ற மாத்திரைகளே போதும்.

அடிக்கடி சோப்பு மற்றும் தண்ணீர் கொண்டு கை கழுவுதல், நெரிசலான இடங்களில் முகக்கவசம் அணிதல், நோயாளிகளுடன் நெருங்கிய தொடர்பை தவிர்த்தல் போன்ற அடிப்படை சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம் இந்த வைரஸ் தொற்றை தடுக்க முடியும்.

இருமல் தும்மல் பாதிப்பு உள்ளவர்களிடமிருந்து தள்ளி இருப்பதும், மாஸ்க் அணிவதும் நல்லது. பாதிப்பு உள்ளவர்கள், வேலைக்கு செல்வதைத் தவிர்த்தல் மூலம் மற்றவருக்கு பரவாமல் தடுக்கலாம்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com