Home remedies for puffy eyes
Home remedies for puffy eyes

வீங்கிய கண் பிரச்சனையை சரி செய்யும் வீட்டு வைத்தியங்கள்! 

Published on

நம்மில் பெரும்பாலானோர் தூக்கமின்மை, நீண்ட நேரம் ஸ்மார்ட்போன், கணினி போன்றவற்றைப் பார்ப்பது போன்ற காரணங்களால் கண்களுக்குக் கீழ் ஏற்படும் வீக்கத்தை அனுபவித்திருப்போம். இந்த வீக்கம் நம்மை சோர்வாகவும், வயதாகவும் காட்டும். இதற்கு பல காரணங்கள் இருந்தாலும், இதற்கான தீர்வுகளை வீட்டிலேயே எளிதாக செயல்படுத்த முடியும். இந்தப் பதிவில் கண்களுக்குக் கீழ் ஏற்படும் வீக்கத்தைக் குறைக்க உதவும் பல வீட்டு வைத்தியங்கள் பற்றி பார்க்கலாம். 

வீக்கம் ஏற்படுவதற்கான காரணங்கள்: 

போதுமான அளவு தூக்கம் இல்லாததால், கண்களின் கீழ் ரத்த ஓட்டம் அதிகரித்து வீக்கம் ஏற்படும். சிலருக்கு உடலில் நீர் தேங்கும் போது கண்களின் கீழும் நீர் தேங்கி வீக்கத்தை ஏற்படுத்தும். அதிகமாக உப்பு உட்கொள்வதாலும் உடலில் அதிகமாக தண்ணீர் சேர்ந்து கண் வீக்கமாகத் தெரியும். 

சிலருக்கு அலர்ஜி காரணமாக கண்கள் சிவந்து வீக்கம் அடையும். வயதாகும்போது தோல் இருக்கத்தை இழந்து கண்களின் கீழ் தொங்குவது போல வீக்கத்தை உண்டாக்கும். சிலருக்கு மரபணு ரீதியாகவே கண்களின் கீழ் வீக்கமாக இருக்கும். 

வீட்டு வைத்தியங்கள்: 

வெள்ளரிக்காயை துண்டு துண்டுகளாக வெட்டி கண்களின் மேல் வடித்து, 20 நிமிடங்கள் அப்படியே விடவும். இதில் உள்ள நீர்ச்சத்து வீக்கத்தைக் குறைக்க உதவும். பாலில் உள்ள கொழுப்பு மற்றும் அமினோ அமிலங்கள் வீக்கத்தைக் குறைக்க உதவும். பருத்தித் துணியில் சிறிதளவு பால் தொட்டு கண்களுக்கு மேல் வைத்தால், கண் வீக்கம் விரைவில் சரியாகும். 

முட்டையின் வெள்ளைக் கரு தோலை இறுக்கமாகி கண் வீக்கத்தை குறைக்க உதவும். முட்டையின் வெள்ளைக் கருவை நன்கு அடித்து கண்களுக்கு கீழ் தடவி 15 நிமிடங்கள் அப்படியே விட்டு பின்னர் கழுவவும். தேநீர் பொடியை தண்ணீரில் சேர்த்து கொதிக்க வைத்து, அவற்றைப் பயன்படுத்தி கண்களை கழுவுவதால், தேநீரில் உள்ள ஆன்ட்டி ஆக்ஸிடென்ட்கள் வீக்கத்தைக் குறைக்க உதவும். 

இதையும் படியுங்கள்:
50 வயதுக்கு மேல் கண் பிரச்சனையா? இதோ சில டிப்ஸ்! 
Home remedies for puffy eyes

உருளைக்கிழங்கை வட்டமாக வெட்டி கண்களுக்கு மேல் வைத்தால், அதில் உள்ள என்சைம்கள் வீக்கத்தைக் குறைக்கும். இது தவிர ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய் போன்றவற்றை கண்களைச் சுற்றி தடவும்போது, அது தோலை இறுக்கமாகி விரைவாக கண் வீக்கம் குறைய உதவும். 

இந்த வழிமுறைகளைப் பின்பற்றி கண் வீக்கத்திலிருந்து நீங்கள் எளிதாக விடுபட முடியும். மேற்கண்ட வீட்டு வைத்திய முறைகள் உங்களுக்கு பலனளிக்கவில்லை என்றால், நிச்சயம் ஒரு மருத்துவரை அணுகி ஆலோசிக்க வேண்டியது அவசியம். 

logo
Kalki Online
kalkionline.com