தொண்டையிலே கீச்கீச்சா?கரகரப்பா? உடனடி நிவாரணத்துக்கு சட்டுப்புட்டு வைத்தியம்!

natural remedies
home remedies
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

ழைக்காலங்களில் ஏற்படும் பிரச்னைகளில் ஒன்று சளி, இருமல்; அதன் தொடர்ச்சியாக தொண்டை கரகரப்பு. மருந்துகள் எடுத்துக் கொண்டாலும் சட்டென நிவாரணம் கிடைக்க வீட்டிலிருந்து எடுத்துக்கொள்ள கூடிய எளிய (home remedies) வைத்தியமாக சில வழிகளைப் பார்க்கலாம்.

* கரகரப்பு, தொண்டைக் கட்டு நீங்க மா இலையை சுட்டு தேனில் வதக்கி சாப்பிட வேண்டும்.

* இஞ்சி சாறு, துளசி சாறு,தேன் மூன்றையும் சம அளவில் கலந்து குடிக்க சளி, இருமல், மற்றும் நெஞ்சில் கபம் சேருதல் குணமாகும்.

* பொடித்த பனங்கற்கண்டு, அதிமதுரப் பொடி, தேன் மூன்றையும் சூடான பாலில் கலந்து பருகினால் தொண்டைக்கு இதமாக இருக்கும்.

* நெல்லிக்காய் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டு வர தொடர் விக்கலையும் விரட்டிடலாம்.

* இஞ்சியுடன் தேன், லவங்கப்பட்டை, துளசி மூன்றையும் சேர்த்து கொதிக்க வைத்து குடித்தால் தொண்டைக் கரகரப்பு நீங்கும்.

* உப்பை வெந்நீரில் கரைத்து வாய் கொப்பளித்தால் தொண்டைக்கட்டு குணமாகும்.

* சுக்கு, மிளகு, திப்பிலியை வறுத்து பொடித்து தேனில் கலந்து சாப்பிட தொண்டை கரகரப்பு குணமாகும்.

* வெங்காயத்தை சிறு துண்டுகளாக நறுக்கி ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தேன் ஊற்றி மூடி நன்றாக ஊறும் வரை வைத்து பின் சாப்பிட்டு வந்தால் தொண்டைப் புண்கள் ஆறும்.

* சுடு தண்ணீரில் துளசியை போட்டு ஆவி பிடிக்கலாம். இதனால் சளி, தொடர் இருமல் குணமாகும்.

* மாதுளம்பழச் சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால் நாள்பட்ட வறட்டு இருமல் குணமாகும்.

இதையும் படியுங்கள்:
ஏப்பம் ஏன் வருகிறது? அடிக்கடி ஏப்பம் வருவதற்கு என்ன காரணம்?
natural remedies

* அன்னாசிப் பழச்சாறுடன் மிளகுத்தூள், தேன் கலந்து சாப்பிடலாம்.

* மாந்தளிரை நன்றாகக் காய வைத்து பொடித்து அதில் தண்ணீரை கலந்து குடிக்க தொண்டை தொடர்பான பிரச்னைகள் வராது.

* தொண்டைப் புண், எரிச்சல் நீங்க மல்லிகை இலையை நெய்யில் வறுத்து துணியில் கட்டி தொண்டைக்கு ஒத்தடம் கொடுக்கலாம்.

logo
Kalki Online
kalkionline.com