1. உங்கள் குடலில் புண் இருக்கிறதா? தினசரி முட்டைக்கோசை வேகவைத்து, வேக வைத்த அந்தத் தண்ணீரை சூப்போல தயாரித்து சாப்பிடுங்கள். குடலில் இருக்கும் புண்களை இந்த முட்டைகோஸ் தண்ணீர் குணப்படுத்திவிடும்.
2. கருத்தரித்த பெண்களுக்கு வாந்தியும், குமட்டலும் ஏற்படும். இப்படி வாந்தி குமட்டலும் வந்தால், பாலில் முட்டையின் வெள்ளை கருவையும் சிறிது சோடாவையும் கலந்து சாப்பிட வேண்டும் இப்படி சாப்பிட்டால் வாந்தியும், குமட்டலும் குறைந்து விடும்.
3. உங்கள் உடம்பில் ரத்தம் விருத்தி அடைய வேண்டுமா? வாழைப்பூ சாப்பிடுங்கள். வாழைப்பூ ரத்த விருத்திக்கு மிகவும் நல்லது. பெண்களுக்கு ஏற்படும் பல நோய்களை குணமாக்குவதில் வாழைப்பூ சிறந்தது. வாரத்தில் ஒரு நாள் வாழைப்பூவை கட்டாயம் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
4. உங்கள் உடம்பில் தேமல் இருக்கிறதா? இருந்தால் புடலங்காயை எடுத்து அதில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு அதை நன்றாக அரைத்து அதனுடன் அரப்புத்தூளை கலந்து தேமல் உள்ள இடங்களில் தேய்க்க வேண்டும். கொஞ்ச நேரம் கழித்து குளிக்க வேண்டும். தேமல் போகும் வரை இந்த புடலங்காய் குளியலை விடக்கூடாது.
5. காலில் ஏதாவது குத்திய காரணத்தால் வீக்கம் ஏற்பட்டால் ஒரு வெற்றிலையில் விளக்கெண்ணையை தடவி அதை அனலில் வாட்ட வேண்டும். அதை சூட்டுடன் வீக்கத்தின் மீது வைத்துக் கட்டினால் வீக்கம் குறையும் வலி போகும்.
6. எலுமிச்சம்பழம் சாற்றையும், இஞ்சி சாற்றையும் கலந்து கொஞ்சம் தேனை கலந்து சாப்பிடுங்கள். எவ்வளவு கடுமையான பித்தமாக இருந்தாலும், அது குணமாகிவிடும். இஞ்சியும், எலுமிச்சம்பழமும், தேனும் உடலில் உள்ள பல நோய்களை குணமாக்கி வருகிற மாமருந்துகள்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)