
சீரகத்தை வறுத்துப் பொடி செய்து அதனுடன் பனங்கற்கண்டு பொடி செய்து சேர்த்து இரண்டு வேளை சாப்பிட்டு வர ஜலதோஷம், மட்டும் இருமல் குணமாகும்.
சிறிது ஓமத்தை 3 வெற்றிலையுடன் சேர்த்து நன்கு இடித்து பிழிந்து தேன் சேர்த்து கலந்து சாப்பிட வயிற்றுப் பொருமல் குணமாகும்.
பெருங்காயத்தை பொரித்து இடித்து மோரில் கலந்து குடித்தால் வயிற்று வலி சரியாகும்.
கற்பூரவல்லி சாற்றுடன் பனங்கற்கண்டு பொடி கலந்து குடித்தால் இருமல் குறையும்.
கரிசலாங்கண்ணி இலையை பாசிப்பருப்புடன் சேர்த்து கூட்டு செய்து சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும்.
மணத்தக்காளி கீரையை துவரம் பருப்புடன் கூட்டு செய்து சாப்பிட குடல் புண் ஆறும்.
துளசி சாறு கல்கண்டு சேர்த்து கஷாயமாக செய்து குடித்தால் காய்ச்சலின் போது வரும் வாந்தி நிற்கும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் கருவேப்பிலை ,இஞ்சி ,சீரகம் மூன்றையும் கலந்து கொதிக்க வைத்து ஆற வைத்து வடிகட்டி பனங்கற்கண்டு கலந்து குடிக்க அஜீரணம் சரியாகும்.
வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் போட்டு கசாயம் ஆக்கி குடித்தால் வாயு தொல்லை நீங்கும். வயிற்றுப்புண் குணமாகும்.
வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடித்தால் வயிற்றுவலி உடனடி நீங்கும்.
செம்பருத்தி இலைகளை நன்றாக தூள் செய்து தினமும் இருவேளை சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் தீரும்.
சிறு துண்டு சுக்கை தூள் செய்து ஒரு டம்ளர் நீரில் போட்டு சுண்டக்காய்ச்சி பால் சர்க்கரை சேர்த்து கஷாயமாக்கி காலை மாலை சாப்பிட்டு வந்தால் மூக்கடைப்பு ,ஜலதோஷம் நீங்கும்.
புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிதளவு உப்பும், வெண்ணெய் கலந்து குடித்தால் வயிற்று கடுப்பு குணமாகும்.
தேனுடன் சுக்குப்பொடி கலந்து உணவுக்கு முன் தினமும் மூன்று வேளை சாப்பிட்டு வந்தால் தொண்டை கட்டு சரியாகும்.
கடுக்காய் தூள் ,மஞ்சள் தூள் இரண்டையும் சேர்த்து கலந்து கால்களின் இடுக்கில் தடவி வந்தால் சேத்துப் புண்குணமாகும்.