
தினமும் காலையிலும் இரவிலும் பால் அருந்துவது பலருக்கும் வழக்கமாக இருந்து வருகிறது. பால் சுவையான பானம் மட்டுமின்றி, அதில் உள்ள புரதம், கொழுப்பு, மாவுச்சத்து போன்றவை உடலுக்குத் தேவையான பல்வேறு சத்துக்களையும் நமக்கு வழங்குகிறது. பாலை சூடாகவும், குளிர்வித்தும் பலரும் அருந்துகின்றனர். இப்படி இரு முறைகளில் பாலை அருந்துவதால் ஏற்படும் பலன்களைக் குறித்து இந்தப் பதிவில் காணலாம்.
சூடான பால்:
* சூடான பாலில் அமினோ அமிலங்கள் உள்ளன. இவை நரம்பு மண்டலத்தை ரிலாக்ஸாக வைத்திருக்க உதவுகிறது.
* சூடான பால் அருந்துவதால் தூக்கம் எளிதில் வரும்.
* சூடான பாலில் அதிகமாக உள்ள ட்ரைப்டோபான் (Tryptophan) என்னும் நொதி வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.
* உடலில் உள்ள வீக்கங்களை சூடான பால் அருந்துவது குறைக்கிறது.
* சூடான பால் சிறந்த வலி நிவாரணியாகவும் உள்ளது.
* முதியோர் சூடான பாலை இரவில் அருந்துவது நல்லது.
* சூடான பாலில் தேன் கலந்து குடிப்பது இருமல், சளியை போக்க உதவுகிறது.
* சூடான பால் உடல் எடையை குறைக்கப் பயன்படுகிறது.
* உடலின் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிக்க சூடான பால் உதவுகிறது.
* சூடான பால் தசைகளை சரிசெய்ய உதவுகிறது.
* எலும்பின் அடர்த்தியை மீட்டெடுக்க இது உதவுகிறது.
* இது இரத்த சர்க்கரை அளவை நிர்வகிக்க உதவுகிறது.
* சூடான பால் மனநிறைவை மேம்படுத்துகிறது.
குளிர்ந்த பால்:
* காலை எழுந்ததும் குளிர்விக்கப்பட்ட பால் அருந்துவது வயிற்றுப் புண்களை ஆற்ற சிறந்த மருந்தாகிறது.
* குளிர்ந்த பாலில் உள்ள டயட்டரி ஃபைபர் மலக்குடலைத் தூண்டி மலம் வெளியேற உதவுகிறது.
* சாப்பாட்டு வேளைக்கு இடையே ஏற்படும் பசியைப் போக்க குளிர்ந்த பால் உதவுகிறது.
* குளிர்ந்த பாலை கோடை காலத்தில் காலை, மாலை இருவேளையும் அருந்துவது உடல் உஷ்ணத்தைத் தணிக்க உதவும்.
* குளிர்விக்கப்பட்ட பாலில் உள்ள லேக்டோஸ் சீக்கிரம் உடலில் சென்று சேரும். இது பற்கள் மற்றும் எலும்புகள் ஆரோக்கியத்தை மேம்படுத்த உதவுகிறது.
* அமிலத்தன்மைக்கு சிறந்த நிவாரணிகளில் குளிர்ந்த பால் ஒன்றாகும்.
* குளிர்ந்த பாலிலுள்ள எலக்ட்ரோலைட் உடல் நீரிழப்புடன் போராடும்.
* நாள் முழுவதும் உங்களை நீரேற்றமாக வைத்திருக்க குளிர்ந்த பால் உதவுகிறது.
* குளிர்ந்த பால் ஒரு இயற்கையான முக சுத்தப்படுத்தியாகவும் அறியப்படுகிறது.