வியர்வை தொல்லையா? வியர்வையின் துர்நாற்றத்தைக் கட்டுப்படுத்த முடியாதா?

Sweat
Sweat
Published on

வியர்வை என்பது அனைத்து பருவக் காலத்திலும் இயற்கையாகவே நம் உடம்பிலிருந்து சுரக்கும் ஒரு விஷயம். சாதாரணமாக ஏதோ வேலைகளில் ஈடுபட்டாலோ அல்லது கோடை காலம் போன்ற நேரங்களில் அதிகமாக நம் உடலில் வியர்வை சுரக்கும். ஆனால், சிலருக்கோ அதனால் ஏற்படும் ஒரு வகையான துர்நாற்றம் ஒரு பிரச்னையாக மாறிவிடும். இது எதனால் ஏற்படுகிறது? இதை முழுமையாக தடுக்க வழி இருக்கிறதா? வாருங்கள் தெரிந்துகொள்வோம்.   

துர்நாற்றம் எதனால் ஏற்படுகிறது?

பொதுவாக வியர்வைக்கு என்று மனம் என்பது கிடையாது. நமது உடலில் உள்ள பாக்டீரியாக்கள்தான் வியர்வையில் உள்ள மூலக்கூறுகளை (Molecules) உடைத்து துர்நாற்றத்தை ஏற்படுத்துகிறது.

இதைத் தடுக்க, சென்ட்களையோ (Deodorants) அல்லது தேயிலை மர எண்ணெய் (Tea tree oil) மற்றும் விட்ச் ஹேசல் (Witch hazel) கலந்த இயற்கை வாசனை திரவியங்களைப் (Natural deodorants) பயன்படுத்தலாம்.

அதுபோல உடல் துர்நாற்றத்தில் உங்கள் உணவு முறையும் முக்கியப் பங்கு வகிக்கிறது. பூண்டு மற்றும் வெங்காயம் போன்ற சல்பர் (Sulfur) அதிகம் உள்ள உணவுகள் வியர்வை துர்நாற்றத்தை அதிகரிக்கும். அதனால் இயற்கையாகவே உணவு முறை மூலமாக உங்கள் உடல் துர்நாற்றத்தைக் கட்டுக்குள் வைத்திருக்க கீரைகள் (Leafy greens), சிட்ரஸ் பழ வகைகள் (Citrus fruits) மற்றும் முழு தானியங்கள் (Whole grains) நிறைந்த உணவைத் தேர்வு செய்து உண்ணுங்கள்.

சும்மா இருந்தாலும் வியர்வை வருகிறதா?

சிலருக்கு உடல் உழைப்பு இல்லாவிட்டாலும் வியர்வை சாதாரணமாகவே வந்துகொண்டிருக்கும். இதற்கு முதன்மை காரணம் ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (Hyperhidrosis). இது பெரும்பாலும் பரம்பரை பரம்பரையாக சிறுவயதிலிருந்தே சில மனிதர்களுக்கு வியர்வை வரும்.

இதற்கு அடுத்த இரண்டாம் நிலை ஹைப்பர்ஹைட்ரோசிஸ் (Secondary Hyperhidrosis) என்பது அடுத்தக்கட்ட காரணமான நீரிழிவு (diabetes), தைராய்டு கோளாறுகள், எடை இழப்பு, மாறுபட்ட இதயத் துடிப்பு  அல்லது பிற உடல்நலப் பிரச்னைகளால் இயற்கையாகவே அவர்களுக்கு அதிக வியர்வை ஏற்படலாம். இதை கட்டுப்படுத்த ஒரு மருத்துவ நிபுணரின் ஆலோசனை பெறுவது மிகவும் நல்லது.

இதையும் படியுங்கள்:
நெய் + கருப்பு மிளகு: ஆரோக்கியத்திற்கான இரட்டை மருந்து!
Sweat

எதிர்பாராமல் வியர்வை அதிகமாக வருகிறதா?

அதற்கு பல காரணங்கள் இருக்கலாம். உதாரணமாக, நீங்கள் உட்கொள்ளும் மருந்துகளால் ஏற்படலாம். சில சமயம் மன அழுத்தத்தால் வரலாம். அதை தடுக்க யோகா, தியானம் செய்யலாம். சில நேரங்களில் ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் வியர்வைகள் ஏற்படலாம். அதற்கான சிகிச்சை மேற்கொள்ளும்போது வியர்வை உற்பத்தியைக் கணிசமாக குறைக்கலாம்.

இன்னும் பல அரிதான சந்தர்ப்பங்களில் சிம்பதெக்டோமி (Sympathectomy) அல்லது வியர்வைச் சுரப்பியை அகற்றுதல் (Sweat gland removal) போன்ற அறுவைச் சிகிச்சைகளை மருத்துவர் அறிவுரையின் பெயரில் மேற்கொண்டு வியர்வை சுரக்கும் விதத்தைக் குறைக்கலாம்.

எனவே, வியர்வை வருவது என்பது அனைத்து உயிரினங்களுக்கும் பொதுவாக ஏற்படக்கூடிய ஒரு விஷயம். வியர்வை எதனால் சுரக்கிறது? வியர்வையினால் துர்நாற்றம் வீசுகிறதா? என்பதற்கான காரணங்களை தெரிந்துகொண்டு நம் அன்றாட வாழ்க்கையைக் கூலாக கடந்துசெல்வோம்.

இதையும் படியுங்கள்:
ஆரோக்கியாமாக இருக்க முட்டைக்கோஸை இப்படித்தான் சாப்பிடணும்!
Sweat

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com