கால்கள் காட்டிக் கொடுக்கும் கொழுப்பு!

கால்கள் கருப்பாக மாறுகிறதா? கால்கள் இருக்கமாகவும், பாரமாகவும் உள்ளதா? உடலில் கொழுப்பு அதிகரித்தால்...
Fats in blood vessel and their symptoms
Fats in blood vessel
Published on

உடல் இயக்கத்திற்கு கொழுப்புச் சத்து தேவையாக உள்ளது. கொழுப்பு லிப்போ புரோடின் மூலம் இரத்தத்திற்கு எடுத்துச் செல்லப்படுகிறது‌. கொழுப்பில் இரண்டு வகை கொழுப்புகள் உள்ளன. HDL என்ற நல்ல கொலஸ்டிரால் மற்றும் LDL என்ற கெட்ட கொலஸ்டிரால் என இருவகைப்படும்‌. நல்ல கொழுப்பு, தமனிகளில் உள்ள அதிக கொழுப்பை நீக்கக் கூடியது‌. கெட்ட கொழுப்பு தமனிகளில் அடைப்பு ஏற்படுத்தி தமனியையை தடிமனாக்கும். இதை Atherosclerosis என்பர். இது ரத்த ஓட்டத்தைத் தடுத்து மாரடைப்பு மற்றும் Peripheral artery disease ஏற்பட காரணமாகும்.

நம் உடலில் அதிக கொழுப்பு (Fats in blood vessel) உள்ளதை கால்கள் காட்டிக் கொடுக்கும். மேலும் இதன் அறிகுறிகள் பெரும்பாலும் இரவிலேயே இருக்கும்‌. கால்வலி, மரத்துப் போதல், கால், வீங்குவது, குளிர்ச்சியாக இருப்பது போன்ற வகை பிரச்னைகள் ஏற்படும்‌. இதை ஆரம்பத்திலேயே கண்டு அறிந்தால், இதய பிரச்னைகளை தடுக்க முடியும்‌. கொலஸ்டிரால் அளவை பரிசோதிப்பது, சமச்சீரான உணவு, உடற்பயிற்சி போன்றவற்றால் அதிக கொழுப்பைக் தடுக்க முடியும்.

1. கால் உணர்த்தும் அறிகுறிகள்

கெட்ட கொழுப்பு அதிகம் இருக்கும் போது உங்கள் கால்கள் இரவு நேரத்தில் இழுத்துக் கொள்ளும். இதற்குக் காரணம் தமனிகளில் கொழுப்பு சேர்ந்து குறுகுவதால், இரத்த ஓட்டம் போய்ச் சேராததுதான்‌.

தசைகளுக்கு சீரான இரத்த ஓட்டம் இருந்தால்தான் அவை நன்கு செயல்பட முடியும். இரத்த ஓட்டம் இல்லாதபோது கால் நரம்பு இழுத்துக் கொள்கிறது. இந்நிலையில் கொலஸ்டிராலை பரிசோதிக்க வேண்டும்‌. இதயப் பிரச்சனையோ அல்லது peripheral artery disease அல்லது இதயப் பிரச்னை இருப்பதை கண்டறியலாம்.

2. மரத்துப் போதல்

கெட்ட கொலஸ்டிரால் அதிகம் இருப்பதை உணர்த்தும் இன்னொரு அறிகுறி கால் மரத்துப்போதல். இது பெரும்பாலும் இரவிலேயே ஏற்படும்‌. நல்ல பிராணவாயு மற்றும் ஊட்டச் சத்துக்கள் சேராததே இதற்கு காரணமாகும். பிராணவாயு குறைபாட்டினால் மரத்துப்போவது, ஊசி குத்துவது போன்ற உணர்வுகள் ஏற்படும்‌ இதன் மூலம் கால்களுக்கு இரத்த ஓட்டம் சரியாக இல்லை என்பதை அறியமுடியும்.

சிலசமயம் அதிக கெட்ட கொழுப்பின் காரணமாக கால்கள் குளிர்ந்து காணப்படும்‌. நல்ல வெப்பமான சூழலில் கூட இப்படி ஏற்படும். காரணம்‌ இரத்த ஓட்டம் சரியின்மைதான். தமனிகள் அடைபட்டுக் போகும்போது கால் விரல்களுக்கு இரத்த ஓட்டம் சரியாக போய்ச் சேராது‌. இந்த நிலை தொடர்ந்தால், அது சரும நோய், அல்சர் போன்ற பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். கால்கள் குளிர்ச்சியாவது, இதயத்தை பாதிக்கும்.

கால்களில் வீக்கமான இடீமா நிலை ஏற்பட்டால், அதிக கொழுப்பு உள்ளது என்பது அர்த்தம். எல்டிஎல் கெட்ட கொழுப்பால் தமனிகள் அடைபட்டு சரியான இரத்த ஓட்டம் தடைபட்டால் இந்த மாதிரி வீக்கம் ஏற்படும்‌.

அதுமட்டுமல்லாமல் கால்கள் இருக்கமாகவும், பாரமாகவும் இருக்கும். இதனால் இதயம் மற்றும் சிறுநீரக பிரச்னைகள் ஏற்படலாம்.

அதிக கொலஸ்டிரால் இருப்பதை உணர்த்தும் இன்னொரு அறிகுறி கால்கள் கருப்பாக மாறுதல், மேலும் பிராணவாயு குறைபாட்டால் கால்கள் நீலநிறமாக மாறக்கூடும். மேலும் தோல் வறண்டு காணப்படுவதும் உண்டு.

3. ரெஸ்ட் லெஸ் லெக் சிண்ட்ரோம் (Restless Leg Syndrome)

காலை நகர்த்துவதே சிரமமாக இருக்கும்‌, கழுத்துவலி ஏற்படும். Restless Leg Syndrome எனப்படும் இந்நிலைமை அதிக கொழுப்பின் காரணமாக இரத்த ஓட்டம் கால்களுக்கு சேராததால் ஏற்படும்‌. இதனால் இந்த பாதிப்பு ஏற்படுபவர்களுக்கு நல்ல தூக்கம் வராது‌.

இதையும் படியுங்கள்:
அரிசியில் உள்ள 'விஷத்தை' நீக்குவது எப்படி? முன்னோர்கள் காட்டிய எளிய வழி!
Fats in blood vessel and their symptoms

இந்த பிரச்னையை தடுப்பது எப்படி?

இதய நண்பனான உணவுகளை எடுத்துக் கொள்ள வேண்டும். நார்சத்து நிறைந்த பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள், புரதங்கள் சேர்க்க வேண்டும். நடைப்பயிற்சி, நீச்சல், சைக்கிள் ஓட்டுவது போன்றவை கொலஸ்டிராலைக் கட்டுப்படுத்தும். புகைபிடித்தல், மது போன்றவற்றை விட்டுவிட வேண்டும். கால்களில் எந்த பிரச்னை ஏற்பட்டாலும் உடனே கவனிக்க வேண்டும்.

(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com