ஒரு நாளைக்கு எத்தனை வேளை அரிசி சாப்பிடலாம்?

Rice
Rice
Published on

சரியான முறையில் அரிசி சாப்பிடுவதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். இது உடலில் உள்ள கார்போஹைட்ரேட்டின் அளவை பூர்த்தி செய்கிறது. ஆனால் ஒரு நாளைக்கு எத்தனை முறை, எவ்வளவு சாதம் சாப்பிட வேண்டும் என்பது பலருக்கும் தெரியாது.

தென்னிந்தியாவில் பெரும்பாலும் மக்கள் 3 வேளையும் அரிசி உணவுகளையே உட் கொள்கின்றனர். தற்போது சந்தையில் கிடைக்கும் பாரம்பரியமற்ற பாலிஷ் அரிசிகளை 3 வேளை உட்கொள்வதால் ஆரோக்கியத்தில் ஊறு விளைவிக்கும். பொதுவாக 30 வயது வரை அரிசி 3 வேளை சாப்பிடுவது நன்மை தான். சர்க்கரை குறைவு நோயாளிகள் 3 வேளையும் அரிசி உணவு சாப்பிடலாம்.

ஆரோக்கியமாக வாழ 30 வயதுக்கு மேல் அரிசியின் பயன்பாட்டை குறைப்பது தான் உடலுக்கு நன்மை தரும். உடல் உழைப்பு குறைவாக உள்ளவர்கள் அரிசியை இரண்டு வேளையும் ,சர்க்கரை நோய் உள்ளவர்கள் ஒரு வேளையும் அரிசி உணவு சாப்பிடுவது தான் நன்மை. அரிசி சாப்பிட்டால் உடல் பருமன் அதிகரிக்கும் என்று பெரும்பாலானோர் நினைக்கிறார்கள் அதுவும் உண்மை தான்.

அரிசியில் கார்போஹைட்ரேட் அதிகமாக உள்ளது. அது அதிக சக்தியை உடலுக்கு தருகிறது. அதிக சக்தியை உடல் உழைப்பின் மூலம் எரிக்க வேண்டும். எரிக்கப்படாத சக்திகள் சேர்ந்து சர்க்கரையாக மாறுகிறது ஒரு கட்டத்தில் இது சர்க்கரை நோயாக மாறுகிறது. இந்த சர்க்கரைகள் தான் கெட்ட கொழுப்பாக மாறுகிறது.

இதையும் படியுங்கள்:
சர்க்கரை நோயாளிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி; குறைந்த கிளைசெமிக் கொண்ட அரிசி கண்டுபிடிப்பு!
Rice

அரிசி உணவை எப்படி சாப்பிடுவது?

ஒரு நாளைக்கு ஒரு முறைக்கு மேல் கூட அரிசி சாப்பிடலாம். ஆனால் அது நீங்கள் உண்ணும் அரிசியின் அளவு, அரிசி வகை மற்றும் அரிசியுடன் நீங்கள் சாப்பிடும் பொருட்கள் ஆகியவற்றைப் பொறுத்தது.

ஆரோக்கியமாக இருக்க உடல் எடையை குறைக்க, ஒரு நாளைக்கு 1 முதல் 2 வேளை அரிசி சாதம் சாப்பிடுவது நல்லது. ஏனெனில் அரிசியில் அதிக கார்போஹைட்ரேட் உள்ளது. அதனால், இதை விட அதிகமாக அரிசி சாப்பிட்டால், அது உங்கள் உடலுக்கு கூடுதல் சக்திகளை சேர்க்கிறது. வெள்ளை அரிசிக்கு பதிலாக பழுப்பு அரிசி அல்லது சிவப்பு அரிசியை சாப்பிட்டால், அதில் நார்ச்சத்து, வைட்டமின் பி, மெக்னீசியம் மற்றும் இரும்பு போன்ற தாதுக்கள் உள்ளன.

பழுப்பு அரிசி, சிவப்பு அரிசி, கருப்பு கவுனி அரிசி போன்றவை குறைந்த அளவில் சக்திகளை கொண்டுள்ளதால் இரண்டு வேளை சாப்பிடலாம். இதில் அதிக அளவு ஊட்டச்சத்துக்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது, இது இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்துகிறது மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும்.

இதையும் படியுங்கள்:
உடலுக்கு அதிக ஆரோக்கியம் தருவது அரிசி உணவுகளா? குயினோவா உணவுகளா?
Rice

உங்களுக்கு வெள்ளை அரிசி உணவு தான் பிடிக்கும் என்றால் இருவேளை ஒரு கப் அளவிற்கு மட்டும் சாதம் சாப்பிடுங்கள். இட்லி தோசை என்றால் 4 அளவுக்கு குறைவாக சாப்பிடுங்கள். இவற்றோடு வெள்ளரிக்காய் சாலட், கொண்டைக் கடலை, பட்டாணி சுண்டலையும் சேர்த்து சாப்பிடுங்கள். வயிறு நிரம்பும் வரை சாப்பிடுபவராக இருந்தால் ஒரு கப் சாதத்தோடு முழு வெள்ளரிக்காயையும், தர்பூசணி ஒரு கப் அளவிற்கும் சாப்பிடுங்கள். இவை உணவு உண்ட திருப்தியை குடுக்கும். அதே வேளையில் உடல் பருமனை உயர்த்தாமல் இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com