பல் துலக்கும் வழிமுறைகள்! இனி பற்களுக்கு எந்தப் பிரச்சனையும் வராது!

Brush
Brush
Published on

ஏனோ தானோ என்று பல் துலக்காமல், கவனத்தோடு பல் துலக்கினாலே மருத்துவரிடம் செல்ல வேண்டிய அவசியமே ஏற்படாது.

பொதுவாக ஒரு நாளைக்கு இரண்டு முறை பல் துலக்கினாலே பல் சுத்தமாக மாறிவிடும் என்று கூறுவார்கள். அதேபோல் ஒருமுறை இரண்டு நிமிடங்களுக்கு பற்களை சுத்தம் செய்தல் வேண்டும். ஆனால், அதுமட்டும் போதாது, ஈறுகள், பற்கள் என அனைத்திலும் நன்றாக சுத்தம் செய்தல் வேண்டும். அப்போதுதான், பற்களுக்கு இடையில் மற்றும் நாக்கில் உள்ள பிளேக் மற்றும் பாக்டீரியாக்கள் அகற்றப்படுகின்றன. மேலும் ஈறு நோய் மற்றும் பல் சிதைவைத் தடுக்கும்.

இங்கு பலருக்கும் பல் துலக்க தெரியாது. ஆகையால், இனிமேலாவது சரியாக பல் துலக்குங்கள்.

1.  முதலில் தண்ணீரில் சிறிது நேரம் பிரஷை ஊற வைக்க வேண்டும். அப்போதுதான் பிரஷ் சுத்தமாகும். பின்னர் புளோராய்டு உள்ள பேஸ்ட்டை பயன்படுத்த வேண்டும்.

2.  சுமார் 15 வினாடிகள், பிரஷை வைத்து முன் பற்களில் மேலும் கீழுமாகவும், வட்டமாகவும் மெதுவாக தேய்க்கவும்.

3.  இப்போது நன்றாக வாயைத் திறந்து, கீழ்ப் பற்களை இருபுறமும் 15 விநாடிகள் தேய்க்கவும். பின் பற்களின் மேல் பகுதியை 15 விநாடிகள் தேய்க்கவும். பின்னர் பற்களின் பக்கவாட்டு பகுதியை 15 விநாடிகள் தேய்க்கவும். பற்களை அழுத்த வேண்டாம்.

4.  பின் பற்களின் பின்புறம் 30 விநாடிகள் தேய்க்கவும். அப்படி செய்யும்போது ஈறுகளுக்கு சேதம் ஏற்படாதவாறு மெதுவாக தேய்க்கவும்.

5.  பிறகு நாக்கை சுத்தம் செய்ய வேண்டும். நாக்கில் பாக்டீரியா அல்லது பிளேக் கூட வளரலாம். எனவே பல் துலக்கும் போதெல்லாம் நாக்கை சுத்தம் செய்ய வேண்டும்.

6.  அனைத்திற்கும் இறுதியாக, மீதமுள்ள பேஸ்ட், உமிழ்நீர், வாயில் உள்ள தண்ணீர் அனைத்தையும் துப்ப வேண்டும். பின் குளிர்ந்த நீரில் வாயை நன்கு கொப்பளிக்கவும்.

இதையும் படியுங்கள்:
இலையுதிர் காலத்தில் ஏற்படும் சரும நோய்களும் தீர்வுகளும்!
Brush

கவனத்தில் கொள்க:

  • 3 அல்லது 4 மாதங்களுக்கு ஒருமுறை பிரஷை மாற்ற வேண்டும்.

  • புளோராயுடு பேஸ்ட் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

  • மென்மையான டூத் பிரஷை வாங்குதல் அவசியம்.

  • ஒரு நாளைக்கு இரண்டு முறையும், ஒவ்வொரு முறையும் 2 நிமிடங்களுக்கு பல் துலக்க வேண்டும்.

  • இந்த வழிமுறைகளைப் பின்பற்றினாலே, பல் எப்போதும் சுத்தமாக இருக்கும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com