நாம் பல் துலக்க பயன்படுத்தும் பற்பசைக்கு பல்வேறு பயன்கள் உண்டு. அதைத் தெரிந்து வைத்துக் கொள்வது நமது அன்றாட வாழ்க்கைக்கு மிகவும் பயன்படும்.
1. வீட்டிலிருக்கும் முகம் பார்க்கும் நிலைக்கண்ணாடியை கறைகள் அகன்று பளிச்சென்று ஆக்க சிறிது பற்பசையைத் தடவித் துடைத்தால் போதும்.
2. குழந்தைகள் வீட்டுச் சுவற்றில் கிறுக்கி வைத்தால் அதைப் பற்பசை தடவி அழிக்கலாம்.
3. மரத்தாலான பொருட்களின் மீது கீறல்கள் இருக்கிறதா? கவலை வேண்டாம். சிறிது பற்பசையைத் தடவித் தேய்த்தால் கீறல்கள் மறைந்து விடுவதோடு பொருளும் பளிச்சென்று ஆகிவிடும்.
4. எந்தப் பொருட்களிலாவது லிப்ஸ்டிக் கறை ஏற்பட்டு விட்டால் சங்கடப்பட வேண்டாம். கறைகள் ஏற்பட்ட இடத்தில் பற்பசை தடவி விட்டுப் பாருங்கள். கறைகள் எங்கே என்று கேட்பீர்கள்.
5. மங்கலாகி விட்ட கல்நகைகள் மீது பற்பசையை பயன்படுத்தினால் அவை பளபளக்கும்.
6. சுவற்றில் ஆணியை பிடுங்கிய இடத்தில் உள்ள ஓட்டையை பற்பசையை பயன்படுத்தி அடைக்கலாம்.
7. பற்பசையை சூடான நீரில் கரைத்து நீங்கள் பயன்படுத்தும் சாக்ஸை அலசினால் சாக்ஸ் பளிச்சென்று ஆகிவிடும்.
8. கொசு கடித்த இடத்தில் பற்பசையைத் தடவினால் வலி குறைந்து விடும்.
9. வீட்டில் விரித்திருக்கும் கார்ப்பெட்டில் உள்ள கறைகளை பற்பசையை பயன்படுத்தி அகற்றலாம்.
10 கார், டூவீலர் போன்றவற்றின் ஹெட்லைட் மீது பற்பசையை பயன்படுத்தித் துடைத்தால் அவை மின்னும்.
11. காலியாண பற்பசை டியூப்களை இரண்டாக கத்தரித்து தண்ணீரில் ஊற வைத்தப்பிறகு, அந்தத் தண்ணீரில் கண்ணாடி ஜன்னல்கள், ஸ்கூட்டர், சைக்கிள் போன்றவற்றை துடைக்க, அவை கறை நீங்கியும், பளபளப்பாகவும் இருக்கும்.