3 நாட்களில் கல்லீரலை சுத்தம் செய்யும் வழிமுறைகள்! 

How to cleanse the liver in 3 days!
How to cleanse the liver in 3 days!
Published on

நம் உடலின் மிகப் பெரிய உறுப்பான கல்லீரல் செரிமானம், நச்சு நீக்கம், புரத உற்பத்தி போன்ற பல முக்கியமான செயல்களை செய்கிறது. நவீன வாழ்க்கை முறை, சுற்றுச்சூழல் மாசுபாடு, தவறான உணவுப் பழக்கம் போன்ற காரணிகளால் கல்லீரல் பாதிக்கப்படலாம். பாதிக்கப்பட்ட கல்லீரலை சுத்தம் செய்தல் என்பது அதன் செயல்திறனை மேம்படுத்தி, நச்சுக்களை நீக்க உதவும் ஒரு செயல்முறையாகும். இந்தப் பதிவில் மூன்று நாட்களில் உங்கள் கல்லீரலை சுத்தம் செய்ய உதவும் ஒரு எளிய திட்டத்தைப் பற்றி பார்க்கலாம். 

நாள் 1: 

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் எலுமிச்சை சாறு கலந்து வெதுவெதுப்பான நீர் குடிக்கவும். பின்னர் காலை உணவாக ஓட்ஸ், பழங்கள் மற்றும் நட்ஸ் சாப்பிடுங்கள். 

மதிய உணவுக்கு காய்கறிகள், பருப்பு மற்றும் தயிர் சாப்பிடவும். இரவு உணவாக காய்கறி சூப் மற்றும் வேக வைத்த காய்கறிகளை சாப்பிடுங்கள். தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் தண்ணீரில் மஞ்சள்தூள் கலந்து குடிக்கவும். 

நாள் 2: 

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் பீட்ரூட் மற்றும் கேரட் ஜூஸ் குடிக்கவும். காலை உணவாக முட்டை, பழங்கள் மற்றும் முழுதானிய ரொட்டி சாப்பிடுங்கள். 

மதிய உணவுக்கு மீன், காய்கறிகள் மற்றும் சாலட் சாப்பிடவும். இரவு உணவாக காய்கறிகள், பருப்பு மற்றும் தயிர் சாப்பிட வேண்டும். தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் இஞ்சி தண்ணீர் குடிக்கவும். 

நாள் 3: 

காலையில் வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் ஆப்பிள் சைடர் வினிகர் கலந்த வெதுவெதுப்பான நீர் குடிக்கவும். காலை உணவாக பழங்கள், கீரைகள், தயிர் சேர்த்து ஸ்மூத்தி தயாரித்து குடிக்கவும். 

மதியத்திற்கு காய்கறி சூப் மற்றும் வேக வைத்த காய்கறிகள் சாப்பிடவும். இரவில் காய்கறி ஃப்ரைட் ரைஸ் மற்றும் தயிர் சாப்பிடுவது நல்லது. தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் சீமை சாமந்தி சேர்த்த தண்ணீர் குடிக்கவும். 

இதையும் படியுங்கள்:
கல்லீரல் பிரச்சினை இருப்பவர்களுக்கு உதவும் அஸ்வகந்தா!
How to cleanse the liver in 3 days!

இவற்றை முயற்சிக்கும்போது பதப்படுத்தப்பட்ட உணவுகள், சர்க்கரை அதிகம் உள்ள உணவுகள், வெள்ளை ரொட்டி, அரிசி, மதுபானங்கள், புகைப்பிடித்தல் போன்றவற்றை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் கட்டாயம் குடிக்க வேண்டும். இத்துடன், வழக்கமான உடற்பயிற்சி செய்வது மிகவும் முக்கியம். 

தினசரி நன்கு தூங்கி போதுமான ஓய்வு எடுக்க வேண்டும். குறைந்தது ஒவ்வொரு இரவும் 7-8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். மன அழுத்தத்தை குறைக்க யோகா, மூச்சுப் பயிற்சி போன்றவற்றை முயற்சி செய்யவும். இத்தகைய விஷயங்களை நீங்கள் முறையாக கடைப்பிடித்து வந்தால், மூன்று நாட்களில் உங்களுடைய கல்லீரலில் உள்ள அத்தனை கெட்ட விஷயங்களும் வெளியேறிவிடும். இதை முயற்சிப்பதற்கு முன்பு தகுந்த மருத்துவரிடம் ஆலோசித்து, உங்கள் சந்தேகத்தைத் தீர்த்துக் கொள்வது நல்லது. 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com