பி 12 குறைபாடு காலப் போக்கில் சிக்கல்கள் ஏற்படுத்திவிடும். பெரும்பாலான மக்கள் பி12 குறைபாட்டை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. பி 13 குறைபாடு இருக்கும் போது தென்படும் அறிகுறிகள் பொதுவானவை என்பதால் மக்கள் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை. ரத்த பரிசோதனை இல்லாமல் பி12 குறைபாட்டைக் கைகள் மூலம் தெரிந்து கொள்ள முடியும்.
கைகள் மற்றும் விரல்களில் உணர்வின்மை
கைகள் மற்றும் விரல்கள் மரத்துப் போவது பி12 குறைபாட்டின் அறிகுறியாக இருக்கலாம். வைட்டமின் பி12 குறைபாடுகளைக் போக்க இட்டிலி , சீலா, காளான், முட்டை ,பால், தயிர் ஆகியவற்றை உங்கள் உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.
நடுங்கும் கைகள்
கைகள் நடுங்குவது அல்லது கைகளில் பதற்றம் அதிகரிப்பது பதட்டம் மற்றும் மனச்சோர்வை ஏற்படுத்தும். கைகள் நடுங்கும் பிரச்னையிலிருந்து விடுபட தூங்குவதற்கு முன் அஸ்வகந்தா டீ அருந்துங்கள்.
குளிர்ந்த கைகள்
உங்கள் கைகள் எப்போதும் குளிர்ச்சியாக இருந்தால் இது இரும்புச் சத்தின் குறைபாட்டால் இருக்கலாம். இரும்புச் சத்து குறைபாட்டை நீக்க பேரீச்சம் பழத்தை உட்கொள்ளலாம். இது தவிர உங்கள் உணவில் வைட்டமின் சி சத்து சேர்த்துக். கொள்ளுங்கள்.
விரல்களின் மூட்டுக்களில் வீக்கம்
விரல்களின் மூட்டுக்களில் வீக்கம் ஏற்படுவது கீல்வாதத்தின் அறிகுறிகளாக இருக்கலாம். விரல் மூட்டுக்களில் வீக்கத்தைக் புறக்கணிக்காதீர்கள். மருத்துவரை அணுகவும். உணவில் கருப்பு எள் சேர்த்துக் கொள்ளுங்கள்.
வைட்டமின் பி12 குறைபாட்டை சரி செய்வதற்கான வழி முறைகள்
மாமிச உணவுகளான இறைச்சி, மீன், கோழிமுட்டை போன்றவை பி12 நிறைந்தவை. பால், தயிர், பண்ணை சீஸ் போன்ற பால் பொருட்கள் பி 12 சத்து நிறைந்தவை.
தானியங்களில், சோயா பால் மற்றும் பிற வலுப்படுத்துப் பட்ட உணவுகளில் பி 12 உள்ளது.
கடுமையான குறைபாடு இருந்தால் மருத்துவர் பரிந்துரைப்படி பி12 ஊசிகள் போடலாம்.