‘ஆயில் புல்லிங்’ செய்வது எப்படி? எந்த எண்ணெய் கொண்டு செய்யலாம்?

How to do 'oil pulling'? Can it be done with which oil?
How to do 'oil pulling'? Can it be done with which oil?https://www.dentistchannel.online

நாம் அனைவரும் உணவை உட்கொள்வதும் வாய்வழிதான். நமது உடலின் செரிமானம் தொடங்குவதும் வாயில் சுரக்கும் உமிழ்நீரின் துணையுடன்தான். எனவே, நம்முடைய வாய் சுகாதாரத்தைக் கவனமாகப் பராமரிப்பது, நமது பற்கள் மற்றும் ஈறுகளுக்கு நாம் செய்யக்கூடிய மிக முக்கியமான நன்மைகளில் ஒன்று என்றால் அது மிகையாகாது.

நமது வாய் சுகாதாரத்தை கவனமாகப் பராமரித்து மேம்படுத்துவதன் மூலம் 30க்கு‌ம் மே‌ற்ப‌ட்ட கடுமையான நோய்களின் ஆபத்து காரணிகளை அழித்து, நமது ஒட்டுமொத்த உடலின் ஆரோக்கியத்தையும் சீராக்க முடியும் என்று அறிவியல் கூறுகிறது.

அன்றாடம் காலையில் எழுந்ததும் பல் துலக்குவது பற்களின் பராமரிப்புக்கு மட்டுமே! ஆனால், ‘ஆயில் புல்லிங்’ எனும் எண்ணெய் கொப்பளிப்பு செய்வது பற்கள், ஈறுகள், மொத்த வாய்ப்பகுதி அனைத்தையும் சுத்தமாக்கி, அதன் காரணமாக, முழு உடல் ஆரோக்கியத்தைப் பேணிக் காக்கும்.

ஆயில் புல்லிங் செய்வதால் ஏற்படும் நன்மைகள்: நமது வாய்ப்பகுதியில் உடலுக்கு நன்மை பயக்கும் நல்ல பாக்டீரியாக்களும் உண்டு, தீமைகளை விளைவிக்கும் தீய பாக்டீரியாக்களும் உண்டு. ஆயில் புல்லிங் செய்வதால் உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடிய கிருமிகள் எல்லாம் நீங்கள் உமிழும் நீர்மத்தில் முழுமையாக வெளியேற்றப்படுகின்றன. நம் ஒட்டுமொத்த உடலை சுத்திகரிக்கச் (Detox) செய்ய இது பெரிதும் உதவுவதாக ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும், ‘ஆயில் புல்லிங்’ செய்வதால், பற்கள், ஈறுகள் உறுதியாகும். பல் கூச்சம் சரியாகும். ஈறுகளில் ஏற்படும் இரத்தக்கசிவை சரிசெய்து ஈறுகள் பலம் பெறும். பற்கள் சிதைவு, பல் சொத்தை, பற்காரைகளை அகற்ற உதவுகிறது. இதனால் வாய் துர்நாற்றம் முற்றிலும் நீங்குகிறது.

சுவாசப்பாதையின் சுகாதாரம் சீராகி புதிய சுவாசத்தை ஊக்குவிக்கிறது. நீரிழிவு நோய், இதய நோய் போன்ற கடுமையான நோய்களின் ஆபத்து காரணிகளை இவ்வாறு வாய் சுகாதாரத்தை மேம்படுத்துவதன் மூலம் கணிசமாக குறைக்க முடியும் என அறிவியல்பூர்வமாக நிறுவப்பட்டுள்ளது. உடலில் உள்ள நச்சுக்கள் வெளியேறி, உடல் சூடு தணியும். சருமம் பொலிவு பெற்று முக அழகைக் கூட்டும். ஒற்றை தலைவலி, சைனஸ் மற்றும் ஆஸ்துமா பிரச்னைகளும் குறையும். உடலின் ஆற்றல் அதிகரித்து, நாள் முழுவதும் நன்கு சுறுசுறுப்புடன் இருக்கும். நன்றாகப் பசி எடுக்கும். செரிமான பிரச்னைகள் வராது. அமைதியான நல்ல உறக்கம் கிடைக்கும்.   தைராய்டு பிரச்னையை கட்டுப்பாட்டில் வைக்கலாம். வயதானவர்களுக்கு மூட்டுகளில் ஏற்படும் வீக்கம் மற்றும் வலிகளைக்கூட இது குணப்படுத்தும்.

எப்படி செய்வது ஆயில் புல்லிங்?: காலையில் எழுந்தவுடன், எதுவும் சாப்பிடாமல் வெறும் வயிற்றில் எண்ணெய் கொப்பளிப்பு செய்வது நல்லது. அவ்வாறு செய்யும்போது பலன்கள் அதிகரிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

10 மி.லி. எண்ணெயை வாய்க்குள் ஊற்றி, உள்பகுதியில் அனைத்து பக்கமும் சுழலச்செய்து நாக்கை இட வலமாகச் சுழற்றி எல்லாத் திசைகளிலும் எண்ணெய் ஊடுருவிச் செல்லும்படி கொப்பளிக்க வேண்டும். பற்களின் இடைவெளிகளில் எண்ணெய் செல்வது உணரப்பட வேண்டும்.

சில நிமிடங்களில் எண்ணெய் அதன் பிசுபிசுப்புத்தன்மையை இழந்து, வெண்ணிறத்தில் நீர்த்துவிடும். இந்த நிலையை அடைந்தபின் முழுமையாகத் துப்பிவிட்டு தண்ணீர் கொண்டு வாயை கொப்பளிக்க வேண்டும். அதன் பிறகு பிரஷ் கொண்டு பல் துலக்குவது நல்லது.

இதையும் படியுங்கள்:
உலர் திராட்சையும், தண்ணீரும்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!
How to do 'oil pulling'? Can it be done with which oil?

எந்த எண்ணெய் நல்லது?: ஆயுர்வேதம் பரிந்துரை செய்யும் தரமான நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய் இரண்டையுமே பயன்படுத்தலாம். இந்த எண்ணெய்களில் பாக்டீரியாக்களை அழிக்கக்கூடிய தன்மைகள் உள்ளன. முடிந்த அளவு, செக்கில் ஆட்டிய எண்ணெயை வாங்கிப் பயன்படுத்துவது இன்னும் நல்லது.

தினமும் காலையில் எழுந்ததும் பல் துலக்குவதை எப்படி வழக்கமாக்கிக்கொண்டோமோ, அதேபோல எண்ணெய் கொப்பளித்தலையும் பழக்கமாக்கிப் பின்பற்றுவோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com