உலர் திராட்சையும், தண்ணீரும்.. இத்தனை நாள் இது தெரியாம போச்சே!

Soaked Dry Grapes.
Soaked Dry Grapes.

உலர் திராட்சைகள் நூறு ஆண்டுகளுக்கும் மேலாக மக்களால் உட்கொள்ளப்படும் பிரபலமான உணவாகும். குறிப்பாக இவற்றைத் தண்ணீரில் ஊற வைப்பதால் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் மேம்பட்டு, நமது ஒட்டு மொத்த ஆரோக்கியத்திற்கும் பல நன்மைகளை அளிக்கிறது. சரி வாருங்கள் இந்தப் பதிவில், உலர் திராட்சைகளை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றித் தெரிந்து கொள்ளலாம்.  

நல்ல செரிமானம்: உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைப்பதால், அவற்றின் நீர்ச்சத்து அதிகரித்து, எளிதில் ஜீரணமாகிறது. ஊற வைக்கும் செயல்முறை திராட்சையை மென்மையாக்கி செரிமான அமைப்பின் சிரமத்தைக் குறைக்கிறது. மேலும் திராட்சையில் இருக்கும் இயற்கை சர்க்கரைகள் அவற்றை ஊற வைத்த பிறகு கரையக்கூடியதாக மாறி, செரிமானத்திற்கு உதவி செய்கிறது. 

ஊட்டச்சத்து உறிஞ்சுதல்: உலர் திராட்சியை ஊற வைப்பதால் அவற்றின் ஊட்டச்சத்துக்கள் எளிதில் வெளியேற உதவுகிறது. இதனால் நமது உடல் அவற்றை உறிஞ்சிக் கொள்ளும் செயல்முறை எளிதாகிறது. இப்படி ஊற வைப்பதால் திராட்சையில் நொதிகள் செயல்படுத்தப்பட்டு, சிக்கலான மூலக்கூறுகளை உடைக்கிறது. இதனால் அத்தியாவசிய விட்டமின்கள் தாதுக்களை உடல் பிரித்தெடுப்பது எளிதாகும். 

அதிக ஆக்சிஜனேற்றம்: உலர் திராட்சையில் பாலிஃபீனால்கள் போன்ற ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்துள்ளன. இது ஃப்ரீ ரேட்டிகள்கல் ஏற்படும் ஆக்சிஜனேற்ற சேதத்திலிருந்து, நமது செல்களைப் பாதுகாக்க உதவுகிறது. உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைப்பதால், அவற்றின் ஆக்ஸிஜனேற்ற உள்ளடக்கம் அதிகரிக்கும். இதன் மூலமாக வீக்கத்தை குறைப்பதற்கும், இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும், எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கும் உலர் திராட்சைகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. 

எடை மேலாண்மை: ஊற வைத்த உலர் திராட்சையை உணவில் சேர்த்துக் கொள்வதால் எடையை கட்டுப்படுத்த உதவும். இவற்றில் இயற்கையாகவே கலோரிகள் மற்றும் கொழுப்பு குறைவாக இருப்பதால், நமக்கு திருப்திகரமான உணர்வைக் கொடுத்து அதிகப்படியான உணவுகள் எடுத்துக் கொள்வதை தடுக்கிறது. ஊற வைத்த உலர் திராட்சைகளில் இருக்கும் நார்ச்சத்து, குடல் இயக்கத்தை மேம்படுத்துகிறது. மேலும் இதில் உள்ள இயற்கையான இனிப்பு, பசியைக் கட்டுப்படுத்தி உடல் எடையைக் குறைக்க உதவுகிறது. 

இதையும் படியுங்கள்:
இதய நோயாளிகள் கவனத்தில் கொள்ள வேண்டிய ஒன்பது விஷயங்கள்!
Soaked Dry Grapes.

இதய ஆரோக்கியம்: தினசரி ஊற வைத்த உலர் திராட்சையை உட்கொள்வதால், இதய ஆரோக்கியம் மேம்படும். இவற்றில் நிறைந்து காணப்படும் ஆன்ட்டி ஆக்சிடென்ட்கள் மற்றும் பாலிஃபீனால்கள், இதய நோய்க்கு பங்களிக்கும் கெட்ட கொழுப்பைக் குறைக்கிறது. மேலும் உலர் திராட்சையில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. 

இப்படி பல ஆரோக்கிய நன்மைகள் உலர் திராட்சையை தண்ணீரில் ஊற வைத்து சாப்பிடுவதால் நமக்குக் கிடைக்கிறது. எனவே தினசரி 10 உலர் திராட்சைகளை நீங்கள் இப்படி சாப்பிட்டு வருவதன் மூலமாக, உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க முடியும். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com