நவீன கால வாழ்க்கைமுறை நமக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி நமது ஆற்றல் மட்டத்தை குறைக்கிறது. இதனால் சோர்வு மற்றும் மந்தநிலை ஏற்படுகிறது. ஆனால், முற்றிலும் இயற்கையான முறையில் நமது ஆற்றலை அதிகரிக்க பல வழிகள் உள்ளன. இந்தப் பதிவில் உங்களது ஆற்றலை அதிகரித்து ஒவ்வொரு நாளும் புத்துணர்ச்சி மற்றும் செயல்திறனுடன் இருக்க சில எளிய உதவிக் குறிப்புகளைப் பார்ப்போம்.
வழக்கமான உடற்பயிற்சி: தினமும் 30 நிமிடங்கள் நடைப்பயிற்சி, ஓட்டப்பயிற்சி, சைக்கிள் ஓட்டுதல் போன்ற ஏதேனும் ஒரு வகையான உடற்பயிற்சி செய்வது ஆற்றலை அதிகரிக்கவும், மன அழுத்தத்தை குறைக்கவும் உதவும்.
ஆரோக்கியமான உணவு: பழங்கள், காய்கறிகள், முழு தானியங்கள் மற்றும் லீன் புரதங்கள் நிறைந்த சமச்சீரான உணவை உண்ணுங்கள். சர்க்கரை, பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் அதிக அளவு கொழுப்பு நிறைந்த உணவுகளைத் தவிர்க்கவும்.
போதுமான தூக்கம்: ஒவ்வொரு இரவும் 7-8 மணி நேரம் கட்டாயம் தூங்க வேண்டும். போதுமான அளவு தூங்கினாலே உடல் மற்றும் மனது எப்போதும் புத்துணர்ச்சியுடன் இருக்கும்.
நீர்ச்சத்து: தினசரி 8 முதல் 10 டம்ளர் தண்ணீர் குடிப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் பெரும்பாலான நேரம் சோர்வாக இருப்பதற்கு நீச்சத்து குறைபாடு காரணமாக இருக்கலாம். எனவே போதிய அளவு நீர் அருந்தி நீரேற்றத்துடன் இருங்கள்.
நேர்மறையாக இருங்கள்: எல்லா விஷயங்களையும் நேர்மறையாக பார்க்க கற்றுக் கொள்ளுங்கள். உங்களிடம் இல்லாததை நினைத்து வருத்தப்படுவதற்கு பதிலாக உங்களிடம் இருக்கும் விஷயங்களுக்கு நன்றி உணர்வுடன் இருக்கவும். நேர்மறையான மனநிலை உங்களது ஆற்றலை இயற்கையாகவே அதிகரிக்கும்.
மன அழுத்தத்தை குறைத்தல்: மன அழுத்தத்தை குறைப்பதற்கு யோகா தியானம் அல்லது ஆந்த சுவாசப் பயிற்சிகள் போன்ற மன அழுத்தத்தைக் குறைக்கும் நுட்பங்களைப் பயிற்சி செய்யவும். மேலும், உங்களுக்கு பிடித்தமான செயல்களை செய்வதற்கு நேரம் ஒதுக்குங்கள். புத்தகம் படித்தல் பாடல்கள் கேட்பது அல்லது நண்பர்களுடன் நேரம் செலவிடுவது போன்றவை உங்களை புத்துணர்ச்சி பெற உதவும்.
வெளிச்சத்தில் வெளிப்படுங்கள்: பகல் நேரத்தில் வெளிச்சத்தில் வெளிப்படுவது மிகவும் முக்கியம். குறிப்பாக காலை நேரத்தில். இது உங்கள் உடல் இயற்கையாக தூக்கத்திலிருந்து விழிக்கும் சுழற்சியை ஒழுங்குபடுத்த உதவும். சூரிய ஒளியிலிருந்து கிடைக்கும் விட்டமின் டி உங்களது உடலை சுறுசுறுப்பாக இயங்கச் செய்யும்.
மேலே குறிப்பிட்ட விஷயங்களை முறையாகக் கடைபிடித்தால் தினசரி நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கலாம். இது உங்களது ஆற்றலை இயற்கையாகவே அதிகரிக்கச் செய்யும். இதற்காக வேறு எந்த சப்ளிமெண்ட்டும் நீங்கள் எடுக்க வேண்டிய அவசியமில்லை.