மூளை ஆரோக்கியத்திற்குத் தேவையான முதன்மை உணவு!

Healthy Brain
Healthy Brain

ம் உடலின் மொத்த உறுப்புகளின் செயல்பாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்து பிரமாதமாக இயக்கிக்கொண்டிருக்கும் உறுப்பு நமது மூளை. ஹார்வார்டில் பயிற்சி பெற்ற மனோதத்துவ மற்றும் ஊட்டச்சத்து நிபுணரான உமா நாயுடு, இருபது ஆண்டுகள் 'பிரைன் ஃபுட்ஸ்' (Brain Foods) மற்றும் மன ஆரோக்கியத்தில் நம் உணவுகள் எவ்வாறெல்லாம் ஆதிக்கம் செலுத்த வல்லவை என்ற தலைப்பில் பாடத்தைப் படித்துத் தேர்ந்த பின் மூளையின் ஆரோக்கியம் குறையாமல் பாதுகாக்கக்கூடிய நம்பர் ஒன் உணவு எது என்பதைப் பகிர்ந்துள்ளார்.

வயது கூடும்போது அறிவாற்றல் திறன் குறைய ஆரம்பிக்கும். அறிவாற்றல் திறன் குறைந்துவிடாமல் பாதுகாக்க சில வகை உணவுகளால் முடியும் என்று படிப்பறிவு கற்பித்துள்ளது. அதன்படி, மறுக்க இயலாத  மூன்று வகை ‘நியூரோ ப்ரொடெக்டிவ்’ (Neuroprotective) உணவுகளென ஆன்டி ஆக்ஸிடன்ட்கள், B வைட்டமின்கள் மற்றும் பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்கள் (PUFAs) ஆகியவற்றை நிபுணர்கள் குறிப்பிட்டுள்ளதாக உமா நாயுடு விவரிக்கிறார்.

பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலங்களில் இரண்டு வகை உண்டு. அவை ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 கொழுப்பு அமிலங்கள். அவற்றில் மூளையின் ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்துக்களை அளிப்பதில் முதலிடத்தில் நிற்பது ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் என்கிறார் உமா நாயுடு.

சப்ளிமென்ட்கள் மூலம் இச்சத்தைப் பெற முடியும் என்றாலும், உணவுகள் மூலம் பெறுவதே சத்துக்கள் நல்ல முறையில் உறிஞ்சப்படுவதற்கும் நன்மைகளை அடைவதற்கும் சிறந்த வழி என உமா கூறுகிறார்.

நேரடியாக கடல், ஏரி மற்றும் நதிகளிலிருந்து பிடிக்கப்படும் அன்ச்சோவீஸ் (Anchovies), சர்டைன்ஸ் மற்றும் சால்மன் மீன்களில் ஒமேகா 3 உள்ளன. வேர்ல்ட் ஹெல்த் ஆர்கனைசேஷன் (World Health Organisation) நியதிப்படி ஒவ்வொரு வளர்ந்த மனிதருக்கும் குறைந்தபட்சம் 250லிருந்து 500 மில்லி கிராம் வரை (ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 இரண்டும் சேர்ந்து)  கொழுப்பு அமிலங்கள் ஒவ்வொரு நாளுக்கும் தேவைப்படுகிறது.

இதையும் படியுங்கள்:
இதயத்தை பலப்படுத்தும் அருகுலா கீரை!
Healthy Brain

குறிப்பிட்டு சொல்லும்போது நேரடியாக கடல், ஏரி, நதிகளிலிருந்து பிடிக்கப்படும் சாக்கியே சால்மனில் மூளையின் ஆரோக்கியத்திற்குத் தேவையான ஒமேகா 3 மற்றும் ஒமேகா 6 ஆகிய இரண்டு வகை கொழுப்பு அமிலங்களும் நிறைந்துள்ளன என்கிறார் உமா நாயுடு.

தாவர உணவு வகைகளில் சியா, எள், ஃபிளாக்ஸ்  விதைகள் மற்றும் வால் நட்டில் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நிறைய உள்ளன. சுமார் 28 கிராம் சியா விதைகளில் ஒருவருக்கு ஒரு நாளைக்குத் தேவையான ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கிடைத்துவிடுவதாக உமா கூறுகிறார். சியா விதைகளில் நார்ச்சத்து மிக அதிகம் உள்ளது. அது ஜீரண மண்டல உறுப்புகளில் வளரும் நல்ல பாக்டீரியாக்களின் வளர்ச்சிக்கு உதவும்; ஜீரண மண்டல உறுப்புகளுக்கும் மூளைக்கும் இடையே உள்ள தொடர்பை உகந்ததாக மாற்றும்; நல்ல மன நிலையை உருவாக்கக்கூடிய நியூரோ ட்ரான்ஸ்மிட்டர்களின் உற்பத்திக்கும் உதவும்.

ஒமேகா 3 கொழுப்பு அமிலம் நிறைந்த உணவுகளை நாமும் அடிக்கடி உட்கொண்டு அறிவாற்றல், நினைவாற்றல் குறையாமல் நிறைவோடு வாழ்வோம்!

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com