சுறு சுறு துறு துறு மூளைக்கான 8 மந்திரங்கள்!

Brain sharp
Brain sharp
Published on

எந்த வயதினராக இருந்தாலும் சிறப்பான முடிவெடுக்கவும், மகிழ்ச்சியுடன் புதிய விஷயங்களை கற்கவும் மூளையை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம். அந்த வகையில் எப்பொழுதும் மூளையை சுறுசுறுப்பாக வைக்க உதவும் 8 விஷயங்கள் குறித்து இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

1. ஆர்வத்துடன் இருங்கள்.

தொடர்ந்து கற்றுக்கொண்டு இருங்கள். சதை போன்ற மூளைக்கு எவ்வளவுக்கவ்வளவு சவால் விடுகிறோமோ அவ்வளவுக்கவ்வளவு வலுவாகும். ஆகவே, தினந்தோறும் அல்லது வாரத்திற்கு ஒரு முறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை அல்லது வருடத்திற்கு ஒரு முறையாவது புதிய விஷயங்களை தெரிந்து கொள்வதில் ஆர்வம் காட்டுங்கள். வாழ்நாள் முழுவதும் கற்பது நமது நரம்பியலை புத்துணர்வுடன் வைப்பதோடு மூளையை ஷார்ப்பாக வைத்துக் கொள்ளும்.

2. உடல் ரீதியாக நகர்ந்துகொண்டே இருங்கள்.

மூளையை பாதுகாக்க தினமும் வழக்கமான உடற்பயிற்சிகளான நடப்பது, நடனமாடுவது ,யோகா செய்வது ஆகியவற்றை 30 நிமிடங்கள் செய்ய வேண்டும். இது மூளையை பாதுகாக்கும் சிறந்த வழியாகும் . இது ரத்த ஓட்டத்தை சீராக வைப்பதோடு, மூளை மற்றும் அதன் நினைவாற்றல் மற்றும் சிந்திக்கும் திறனை மேம்படுத்துகிறது.

3. வெளிப்படையாக பேசவேண்டும்.

மூளை ஆரோக்கியத்தை அதிகரிக்க மற்றவர்களுடன் உண்மையான உரையாடல்களுக்கு நேரம் செலவிடுவது சமூகத்துடன் தொடர்பில் இருப்பது மிகவும் அவசியமாகும். நண்பருடன் உண்மையாக உரையாடுவது மூளையின் உறுப்புகளுக்கு பயிற்சியாக இருந்து மூளையை சுறுசுறுப்பாக்கும்.

4. உங்கள் மூளைக்கு தீனிப் போடுங்கள்.

மூளைக்கும் உடலைப் போல நல்ல உணவு வேண்டும் என்பதால் அதிக கீரைகள், பெரிகள், நட்ஸ்கள், விதைகள், முழு தானியங்கள் மற்றும் ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட்கள் அதிகம் உள்ள வால்நட்கள் அல்லது ஆளி விதைகள் ஆகியவற்றை உட்கொள்ள வேண்டும். மேலும் நீர்ச் சத்து குறைபாடு கவனத்தை பாதிக்கும் என்பதால் உடலை நீர்ச்சத்தோடு வைத்துக்கொள்ள வேண்டும்.

5. போதிய உறக்கம்.

உறக்கம் மூளையை சரி செய்து தகவல்களை சேமிக்கிறது என்பதால் வழக்கமாக உறங்கும் நேரத்தில் உறங்கி விழிப்பதோடு எட்டு மணி நேர தூக்கத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். உறக்கம் மூளையை சுறுசுறுப்பாக வைத்திருக்கும் முக்கியமான விஷயங்களில் ஒன்றாகும்.

6. உங்கள் மூளைக்கு பயிற்சி கொடுங்கள்.

மூளைக்கு வேலை கொடுக்கும் விளையாட்டுகளான, பசில்கள், கிராஸ்வேர்டுகள், சுடோக்குகள், செஸ் அல்லது நினைவாற்றல் விளையாட்டுக்கள் மூலம் பயிற்சி கொடுங்கள். இது உங்கள் மூளையை சுறுசுறுப்பாக வைக்கும்.

7. மனஅழுத்தத்தை முறையாகக் கையாளுங்கள்.

மனதின் சுறுசுறுப்பை நாள்பட்ட மன அழுத்தம் பாதிக்கும் என்பதால் ஆழ்ந்த மூச்சுப்பயிற்சி, தியானம், இயற்கையுடன் நேரம் செலவிடுவது அல்லது எழுதுவது என ஏதேனும் ஒன்றை செய்யவேண்டும். இதனால் மனம் அமைதி அடைவதோடு மூளையை சுறுசுறுப்பாக வைக்கும்.

8. குறிக்கோளுடன் வாழுங்கள்.

ஒவ்வொரு நாளும் எழுந்திருக்கும்போது, உங்களை ஒன்று விழிக்கச் செய்யவேண்டும். அது ஒரு சிறிய இலக்காக இருக்கலாம் அல்லது உங்களுக்கு பிடித்த ப்ராஜெக்ட்டாக இருக்கலாம் அல்லது ஒருவருக்கு உதவுவதாக இருக்கலாம். அது உங்களின் மூளை ஆரோக்கியத்தை பாதுகாக்கும். எந்த உணவையும் விட இது உங்கள் மூளையின் ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது.

மேற்கூறிய எட்டு வழிமுறைகளையும் கையாள, மூளை எப்போதும் சுறுசுறுப்பாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

இதையும் படியுங்கள்:
சம்பாதிக்கத் தொடங்கியாச்சா ஃபிரெண்ட்ஸ்? அப்போ ஸ்மார்ட்டா சேமிக்கணுமே!
Brain sharp

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com