
சில பெண்களுக்கு முகத்தில் அதிகமாக முடி வளர்வது, மீசை முடிகள் முளைப்பது போன்ற பிரச்னைகள் இருக்கும். இதனால் அவர்கள் மிகவும் சங்கடத்திற்கு ஆளாக நேரிடும். பெண்களுக்கு ஏன் முகத்தில் முடி முளைக்கிறது? இதற்கான தீர்வு என்னவென்பதை பற்றி இந்தப் பதிவில் காண்போம்.
ஆண்களுக்கு அவர்களின் ஹார்மோன் காரணமாக மீசை, தாடி இருப்பது சகஜம். இதுவே பெண்களுக்கு இப்படி இருப்பதற்கு பெயர், Hirsutism என்று கூறுவார்கள். பெரும்பாலான பெண்களுக்கு PCOD பிரச்னை, நீர்க்கட்டி, Irregular periods, சினைமுட்டையின் உற்பத்தி சரிவர இல்லாமல் சிகிச்சை பெறுவார்கள். இது எல்லாமே PCOD யின் அறிகுறியாகும்.
இன்சுலின் எதிர்ப்புத்தன்மையினால் ரத்த அழுத்தம், சர்க்கரை வியாதி, கொழுப்பு போன்ற பிரச்னைகளில் ஒன்றாக PCOD பிரச்னையும் வருகிறது. இன்சுலின் எதிர்ப்புத்தன்மை என்னும் ஹார்மோன் Imbalance பெண்களின் ஓவரியை பாதிக்கும் போது பெண்கள் ஹார்மோனான Esterogen, Progesterone அதிகரிக்காமல் இந்த கோளாறின் விளைவாக ஆண்களின் ஹார்மோனான Androgen, Testosterone ஆகியவை ரத்தத்தில் அதிகரிக்கும். இதனால், இந்த பிரச்னை உள்ள பெண்களுக்கு ஆண்களைப் போலவே முகத்தில் மீசை, தாடி வந்துவிடும். இது பார்ப்பதற்கு பெண்களுக்கு சற்று சங்கடத்தை ஏற்படுத்தும். இதற்கு பெயர்தான் Hirsutism ஆகும்.
இந்த தேவையற்ற முடிகளை முகத்திலிருந்து நீக்குவதற்காக பெண்கள் பியூட்டி பார்லர் செல்வது, மாத்திரைகள் பயன்படுத்துவது என்று பணத்தை செலவழிக்கின்றனர். இதை சரிசெய்வதற்கான சிறந்த வழி Proper dietஐ கடைப்பிடிப்பதாகும். அதிலும் குறைந்த கார்போஹைடரேட் உள்ள உணவுமுறையை கடைப்பிடிப்பதாகும்.
உடல் எடையை குறைத்தால் PCOD சற்று குறையலாம். ஆனால், மாவு சத்து இல்லாத உணவுமுறையை கடைப்பிடிக்கும்போது இன்சுலின் எதிர்ப்புத்தன்மை குறையும். PCOD பிரச்னைகள் உள்ளவர்கள் தங்கள் உடலில் உள்ள இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை கட்டுப் படுத்துவதே முக்கியமாகும். இவ்வாறு சரியான உணவுமுறையை கடைப்பிடிக்கும்போது PCOD, Hirsutism விரைவில் குறைந்து குணமாகும். எனவே, இந்த பிரச்னைகள் உள்ளவர்கள் Keto, Paleo, LCHF போன்ற மாவுசத்து இல்லாத உணவுமுறையை கடைப்பிடிப்பது சிறந்ததாகும்.