சமையலில் சோடா உப்பு பயன்படுத்தலாமா?

Soda salt in cooking
Soda salt in cooking
Published on

ணவகங்களில் செய்யப்படும் உணவுகள் மிகவும் மிருதுவாக இருக்க சோடா உப்பு பயன்படுத்தப்படுகிறது. இதைத் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் நலக்குறைவு ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. இதில் எந்த அளவிற்கு உண்மையிருக்கிறது என்பதைப் பற்றி இந்தப் பதிவில் காண்போம்.

சோடா உப்பு என்பது ஆங்கிலத்தில் Baking soda என்று அழைக்கப்படுகிறது. இதிலிருக்கும் Sodium bicarbonate காரத்தன்மையுடைய உப்பாகும். இதை மாவில் கலந்து பயன்படுத்தும்போது அதிலிருந்து கார்பன் டை ஆக்ஸைட் உருவாகிறது. இதுவே மாவு மிருதுவாகவும், பஞ்சுப்போலவும் இருக்கக் காரணமாகும்.

சோடா உப்பு சாப்பிட்டால் வயிறு புண்ணாகிவிடும் என்று சொல்வது தவறாகும். உண்மையிலேயே Sodium bicarbonate வயிற்றில் உள்ள புண்களால் ஏற்படும் எரிச்சலை குறைக்க உதவுகிறது. வயிற்றில் புண்கள் இருக்கும் சமயத்தில் அமிலத்தன்மை அதிகமாக இருக்கும்.

அதைக் குறைக்க Baking sodaவை தண்ணீரில் சிறிது கலந்து குடித்தால், வயிற்றில் உள்ள எரிச்சல் குணமாகும். அது மட்டுமில்லாமல் அசிடிட்டி பிரச்னைகளை போக்க சோடியம் பைகார்பனேட் பயன்படுத்தப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, சோடா உப்பால் அசிடிட்டி, அல்சர் அதிகமாகிவிடும் என்று சொல்வது தவறாகும். அதை குறைப்பதற்கு சோடா உப்பு உதவும் என்று சொல்லலாம்.

மருத்துவத்திலும் சோடியம் பைகார்பனேட் நிறைய இடங்களில் பயன்படுத்தப்படுகிறது. கிட்னி செயலிழப்பு பிரச்னை, அதிக பொட்டாசியம் உள்ளவர்கள், Acidosis பிரச்னை ஆகியவற்றிற்கு சிகிச்சையாக இதைப் பயன்படுத்துகிறார்கள். அது மட்டுமில்லாமல், இது கிருமிநாசினியாகவும் செயல்படுகிறது.

மவுத் வாஷ் போன்றவற்றில் சோடா உப்பு பயன்படுத்தப்படுகிறது. இது கிருமிகளை அழிப்பதோடு மட்டுமில்லாமல், பற்களையும் வெண்மையாக்குகிறது. விளையாட்டு வீரர்கள் குடிக்கும் Energy drinkல் சிறிது சோடியம் பைகார்பனேட் கலந்திருப்பார்கள். இது அவர்களுடைய எனர்ஜியை அதிகப்படுத்துவதாக சொல்லப்படுகிறது. சோடா உப்பில் இவ்வளவு நன்மைகள் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
பேப்பர் கப்பில் டீ, காபி குடிப்பது ஆபத்தா?
Soda salt in cooking

சோடா உப்பை தீவிர இருதய செயலிழப்பு உள்ளவர்கள், உப்பை வெளியேற்ற முடியாமல் இருக்கும் சிறுநீர் பிரச்னை உள்ளவர்கள், அதிக அளவு இரத்த அழுத்தம் உள்ளவர்கள் பயன்படுத்தக் கூடாது. இதில் உள்ள சோடியத்தால் இதுபோன்ற பிரச்னை உள்ளவர்களுக்கு இரத்த அழுத்தம் சற்று உயரலாம், உடலில் நீர் கோர்த்துக் கொள்ளலாம் என்பதற்காக இவர்கள் உணவில் அதிகளவில் சோடா உப்பு சேர்த்துக் கொள்ளக்கூடாது. அதைத் தவிர, பெரும்பாலான மக்கள் சோடா உப்பு எடுத்துக்கொள்வதால் எந்த பாதிப்பும் கிடையாது. எனவே, சோடா உப்பை தாராளமாக சமையலில் பயன்படுத்தலாம். இதனால் எந்த உடல் நலக்குறைவும் ஏற்படாது என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com