தொல்லை தரும் கொசுக்களில் இருந்து பாதுகாத்துக் கொள்வது எப்படி?

(ஏப்ரல் 25, உலக மலேரியா தினம்)
Malaria mosquito
mosquitohttps://tamil.oneindia.com
Published on

ங்கிங்கெனாதபடி எங்கும் நிறைந்திருக்கும் ஒரு உயிரினம் தான் கொசு. அளவில் மிகச்சிறியதாக இருந்தாலும் அது தரும் தொல்லைகளுக்கும் துன்பங்களுக்கும் அளவில்லை. மலேரியா கொசுக்களால் பரவும் மிகவும் ஆபத்தான நோய். ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 25ம் தேதி உலக மலேரியா தினம் கொண்டாடப்படுகிறது. 2024ம் ஆண்டு உலக மலேரியா தினத்தின் கருப்பொருள். ‘அதிக சமத்துவமான உலகத்திற்காக மலேரியாவுக்கு எதிரான போராட்டத்தை விரைவுபடுத்துங்கள்’ என்பதாகும்.

மலேரியா என்பது பிளாஸ்மோடியம் ஒட்டுண்ணிகளால் ஏற்படும் ஒரு நோய். அனோபிலிஸ் என்ற பெண் கொசு மனிதர்களைக் கடித்து ஒட்டுண்ணிகளை பரப்புகிறது. இந்தக் கொசு கடித்த பத்து நாட்களுக்குள் மனிதர்களுக்கு காய்ச்சல், தலைவலி மற்றும் சளி ஆகியவை தோன்றும். மலேரியா காய்ச்சல் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவாது. ஆனால், காய்ச்சல் கொண்ட ஒருவரை இந்த கொசு கடித்து மீண்டும் மற்றொருவரை கடித்தால் மலேரியா பரவும். பாதிக்கப்பட்ட கொசுக்கள் கடிப்பதன் மூலம் இந்த ஒட்டுண்ணி மனிதர்களுக்குப் பரவுகிறது.

மலேரியாவின் அறிகுறிகள்: காய்ச்சல், குளிர், அசௌகரியமான உணர்வு, தலைவலி, குமட்டல் மற்றும் வாந்தி வயிற்றுப்போக்கு, வயிற்று வலி, தசை மூட்டு வலி, சோர்வு, விரைவான சுவாசம், விரைவான இதயத்துடிப்பு மற்றும் இருமல் போன்றவை இதன் அறிகுறிகள் ஆகும்.

மலேரியா உண்டாக்கும் பாதிப்புகள்: நுரையீரலில் சுவாச பிரச்னைகளை உண்டாக்கும். சிறுநீரகம் அல்லது கல்லீரலை சேதப்படுத்தும். மண்ணீரலையும் சிதைக்கலாம். இது உயிருக்கு ஆபத்தாக முடியும். இரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை குறைப்பதால் இரத்தசோகையை உண்டாக்கும்.

மலேரியாவிலிருந்து பாதுகாக்க எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன?

1. வீட்டில் ஜன்னல் திரைகள் மற்றும் கதவுகளுக்கு இடையே உள்ள இடைவெளியை ஒட்டவும். அந்த இடைவெளிகளில் இருந்து கொசுக்கள் எளிதாக வீட்டிற்குள் நுழைந்து விடும். எனவே ஜன்னல்களுக்கு கம்பி வலைகளை பயன்படுத்தவும்.

2. மாலை நேரத்தில் கை கால்களில் கொசு விரட்டும் கிரீம்களை தடவிக் கொள்ளவும். கொசுவலை போர்த்தி தூங்கலாம். கொசு விரட்டியை பயன்படுத்தலாம். குழந்தைகளுக்கு கைவரை நீண்ட சட்டைகளையும் பான்டுகளையும் அணிவிக்கலாம். குழந்தைகள் விளையாடும் பூங்காக்கள், பள்ளி விளையாட்டு மைதானம் அல்லது நீச்சல் குளம் போன்ற திறந்த வெளிகளில் கொசுக்கள் அதிகமாக இருக்கும். அதனால் எப்போதும் அவர்களுடைய உடலில் கொசு விரட்டும் ஜெல் தடவி பாதுகாப்பாக வைக்கலாம்.

3. அடர் நிறங்கள் கொண்ட ஆடைகள் எப்போதும் கொசுக்களை கவரும். எனவே அவற்றைத் தவிர்த்து விட்டு வெள்ளை இளம் சிவப்பு மற்றும் பச்சை நிறங்களில் ஆடை அணிந்தால் கொசுத்தொல்லை கொஞ்சம் குறையும்.

4. வீட்டை சுற்றி இருக்கும் தோட்டத்தில் உள்ள செடி கொடிகளில் கொசுக்கள் எளிதில் இனப்பெருக்கம் செய்யும். எனவே தோட்டத்தில் உள்ள புதர்கள் மற்றும் களைகளை வெட்டி ஒழுங்குபடுத்தவும். தேங்கி நிற்கும் தண்ணீரை அகற்றவும். அதில்தான் கொசுக்கள் முட்டையிட்டு பெருகுகின்றன.

5. வீடுகளிலும் வீடுகளைச் சுற்றிலும் தண்ணீர் தேங்கி நின்றால் அதை அகற்ற வேண்டும். வீட்டிலிருக்கும் பூந்தொட்டிகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

இதையும் படியுங்கள்:
உங்கள் உடலைப் பற்றி உங்களுக்குகே தெரியாத 20 உண்மைகள்!
Malaria mosquito

இயற்கை முறையில் கொசுவை விரட்டும் வழிகள்:

1. எலுமிச்சை பழத்தை இரண்டாக நறுக்கி அதில் கிராம்புகளை சொருகி ஒவ்வொரு அறையிலும் வைத்துவிட்டால் கொசு அண்டாது.

2. அறையை மூடிவிட்டு ஒரு கற்பூரத்தை கொளுத்தி எரிய விட வேண்டும். அந்த வாசனைக்கு கொசுக்கள் வராது.

3. சில பூண்டு பற்களை நசுக்கி தண்ணீரில் போட்டு கொதிக்க வைக்கவும். அந்த கலவையை ஒரு ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீடு முழுவதும் தெளிக்கவும். பூண்டு வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது.

4. வீட்டில் துளசி செடி வளர்ப்பது நல்லது. இது ஒரு இயற்கையான கொசு விரட்டி. லார்வாக்களை கொல்லவும் அதே நேரத்தில் கொசுக்களை தடுக்கவும் உதவுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com