கான்டாக்ட் லென்ஸை பாதுகாப்பாகப் பயன்படுத்துவது எப்படி?

How to use contact lenses safely? Let's find out!
How to use contact lenses safely? Let's find out!Image Credits: Calgary Family Eye Doctors
Published on

ண்ணாடி அணிவதை விட, கான்டாக்ட் லென்ஸ் அணிவது பல மடங்கு சுலபமாகவும், சிரமமில்லாமலும் இருக்கும். எனினும், கான்டாக்ட் லென்ஸை மிகவும் பாதுகாப்பாக அணிய வேண்டியது அவசியமாகும். அதைப் பற்றி தெளிவாக இந்தப் பதிவில் காண்போம்.

1. கான்டாக்ட் லென்ஸை கண்களில் போட்டுக்கொண்டே தூங்கக் கூடாது. அவ்வாறு செய்யும்போது கண்களில் நோய் தொற்று, கருவிழியில் பாதிப்பு, எரிச்சல் போன்றவை ஏற்படும். கண்களை மூடி தூங்கும்போது குறைந்த அளவில் கண்களுக்கு ஆக்ஸிஜன் கிடைப்பதால், நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.

2. கான்டாக்ட் லென்ஸ் அணிந்து  கொண்டு குளிக்கக் கூடாது. ஆறு, கடல், குளம், நீச்சல் குளம் போன்ற தண்ணீரில் acanthamoeba என்னும் பாக்டீரியா உள்ளது. இது கண்களில் நோய் தொற்றை ஏற்படுத்தும். எனவே, தண்ணீரில் இருக்கும்போது கான்டாக்ட் லென்ஸை அணிவதைத் தவிர்க்கவும்.

3. பல் துலக்குவதற்கு பயன்படுத்தும் பிரஷ்ஷை எப்படி நாம் சில மாதங்களுக்கு ஒரு முறை மாற்றிவிடுகிறோமோ. அது போலத்தான் கான்டாக்ட் லென்ஸும். கான்டாக்ட் லென்ஸ் கேஸை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை மாற்ற வேண்டியது மிகவும் அவசியமாகும்.

4. கான்டாக்ட் லென்ஸ் Solutionஐ ஒரு முறை பயன்படுத்திவிட்டு திரும்பவும் அதையே பயன்படுத்துவது மிகவும் தவறாகும். இது கண்களில் நோய் தொற்றை ஏற்படுத்தக்கூடும். ஒவ்வொரு முறை கான்டாக்ட் லென்ஸை சேமித்து வைக்கும்போதும் புது கான்டாக்ட் லென்ஸ் Solutionஐ பயன்படுத்துவது சிறந்தது.

5. கான்டாக்ட் லென்ஸ் அணிந்திருக்கும்போது கண்களில் தேவையில்லாத எரிச்சல் ஏற்பட்டால் கான்டாக்ட் லென்ஸை கழட்டிவிட்டு நல்ல கண் மருத்துவரை பார்ப்பது சிறந்தது. இல்லையென்றால் நோய் தொற்று, கண்கள் சிவந்து போதல், கண்களில் வலி, எரிச்சல் போன்றவை உருவாகக்கூடும்.

6. கான்டாக்ட் லென்ஸை தினமும் அணியலாம். இருப்பினும், ஒரு நாளைக்கு 14 முதல் 16 மணி நேரம் அணிவதே சிறந்தது. தினமும் அணியக்கூடிய கான்டாக்ட் லென்ஸை சுத்தமாக பார்த்துக்கொள்வது முக்கியமாகும்.

இதையும் படியுங்கள்:
மழைக்கால சருமப் பிரச்னைகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள 6 எளிய வழிமுறைகள்!
How to use contact lenses safely? Let's find out!

7. அதிக தூசு படியக்கூடிய வேலையில் இருப்பவர்கள், விமானத்தில் வேலை பார்ப்பவர்கள், இரசாயன சம்பந்தமான வேலையில் இருப்பவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணிவதை தவிர்ப்பது நல்லது. குழந்தைகள் மற்றும் முதியவர்கள் கான்டாக்ட் லென்ஸ் அணிவதைத் தவிர்க்கலாம்.

8. கண்ணாடியுடன் ஒப்பிடும்போது கான்டாக்ட் லென்ஸ் விலை அதிகமாகும். சீக்கிரமே தேய்ந்துப் போகக்கூடும் என்பதால் அடிக்கடி மாற்ற வேண்டிவரும். நம் கண்களில் இருக்கும் மென்மையான திசுக்களுக்கு ஏற்றவாறு இது தயாரிக்கப்படுவதால், இதன் விலையும் சற்று அதிகமாகவே இருந்தாலும் பாதுகாப்பானதாகும். கான்டாக்ட் லென்ஸை தூய்மையாகவும், சுகாதார முறையிலும் பயன்படுத்தினால் கண்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது. இந்த 8 விதிமுறைகளையும் கான்டாக்ட் லென்ஸ் பயன்படுத்துவதற்கு முன்பு நினைவில் வைத்துக் கொள்வது நல்லதாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com