மனித மூளையின் ரகசியங்கள்: 200 மில்லி செகண்டில் நடக்கும் விந்தை!

எதிர்காலத்தைக் கணிக்கும் திறன் முதல் நினைவாற்றல் வரை மூளையின் ஆச்சரியமூட்டும் உண்மைகள்.
Human brain | மனித மூளை
Human brain | மனித மூளை
Updated on

ஒருவரது முகத்தை 200 மில்லி செகண்டிற்குள் அடையாளம் கண்டு கொள்ளவும். 7 மில்லி செகண்டிற்குள் கண் பார்வையை சரி செய்து கொள்ளவும், 50 ஆண்டுகளுக்கு முன்பு படித்த ஒரு விஷயத்தை மறக்காமல் நினைவு கூறவும் ஒரு மனிதனால் முடிவதற்கு காரணமாக இருப்பது அவனது மூளை எனும் உறுப்பு. இது ஏறத்தாழ 14,000 மில்லியன் செல்களை கொண்ட ஒரு மென்மையான திசுக்கோளம். பல மில்லியன் கணக்கான செல்கள் ஒன்றாக இணைந்த இந்த மூளையின் எடை சுமார் ஒரு கிலோ.

மூளையின் திசுக்களில் 85 சதவீதம் இணைந்து இரு அரைக் கோள வடிவில் 'செரிப்ரம்' (Ceribrathemisphere) எனப்படும் பெருமூளையை உருவாக்குகின்றன. இது தான் மனித உணர்வுளை, நினைவாற்றலை, சிந்திக்கும் திறனை நெறிப்படுத்தும் வேலையை செய்கிறது. எஞ்சியுள்ள மூளையின் திசுக்கள் நான்கு பகுதிகளாகப் பிரிக்கப்படுகின்றன அவை.

நடு மூளையையும், முன் மூளையையும், பின் மூளையையும் இணைக்கும் இது தான் பார்வையுடன் தொடர்பு உடையது. கண்களின் 'ரெடினா' எனும் விழித்திரையில் இருந்து வரும் சமிக்ஞைகளை பெற்று காட்சியின் புலனை நமக்கு உணர்த்துகிறது. அடுத்து மூளைப் பாலம் 'போன்ஸ் வரோலி' (Pons varolli) முகுளம் மற்றும் பெருமூளையை இணைக்கும் நரம்புகள் அமைப்பு.

முகுளம் இது மூளையின் அடியில் சிறுத்து வளைந்து முதுகு தண்டுவடத்துடன் இணையும் பகுதி. வலது பெருமூளை உடலின் இடது புறத்தில் உள்ள உறுப்புகளுடன் தொடர்பு கொள்ள உதவும் பகுதி. அடுத்து சிறுமூளை இது தான் மனித உடலின் தசை இயக்கத்தை கட்டுபடுத்தி, உடலை சமநிலையில் வைக்க உதவுகிறது.

ஹைப்போதாலமஸ் (Hypothalamus) உடலில் வியக்கத்தக்க வகையில் பல்வேறு செயல்பாடுகளை செய்வது இந்த உறுப்பு தான். இது மூளையின் கீழ் தளத்தில் உள்ள நுண்ணிய உறுப்பு. உடலில் தண்ணீர் அளவு, வளர்சிதை மாற்றம், உடல் வெப்பநிலையை ஒழுங்குபடுத்துவது, பசி, தாகம், மகிழ்ச்சி, கோபம் போன்ற உணர்ச்சியும் கட்டுப்படுத்துவது இந்தப் பகுதி தான். இதுதான் சுருக்கமாக ஒரு மூளையின் அமைப்பும் அதன் பணிகளும்.

1985ம் ஆண்டு எம்.ஆர்.ஐ (மேக்னடிக் ரெசோனன்ஸ் இமேஜிங்) ஸ்கேனர் கண்டிக்கப்பட்ட பிறகு தான் மூளை ஆராய்ச்சிகள் வேகம் பிடித்தது. அதற்கு முன்பு வரை இறந்தவர்களின் மூளையை சோதனை செய்தே சில முடிவுகளை வெளியிட்டார்கள். பல விஷயங்கள் யூகங்களாக இருக்கும். இப்போதெல்லாம் ஒருவரை இருக்கையில் அமர வைத்து அவரது மூளை செயல்படுவதை அவரே பார்க்கும் வகையில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. ஸ்கேனர், மரபணு ஆய்வுகள் மூளை பற்றிய பல உண்மைகளை வெளிக் கொணர்ந்துள்ளன.

Human brain | மனித மூளை
Human brain | மனித மூளை

மனித மூளைக்கு ஒரு சிறப்புத்தன்மை இருக்கிறது. மூளை அதன் வெளிப்புறச் சூழ்நிலைகளை பயன்படுத்திக் கொண்டு தன்னை வடிவமைத்துக் கொள்கிறதாம். அதாவது பார்க்கும் பார்வை ஒளி, கேட்கும் ஒலி, நுகரும் மணம், தசைக்கட்டுப்பாடு மற்றும் காரணம் அறிதல் போன்ற தூண்டுதல் உணர்வுகளால் மூளையின் நியூரான் செல்கள் புது வடிவம் பெறுகின்றன. ஐம்புலன்களின் உணர்வுகளையும் புறச்சூழலில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஏற்றுக் கொண்டு உணர்வு மண்டலத்தில் சேர்த்து மூளை தானகவே புதிய பரிமாணத்திற்கு மாறுகிறது.

இரவு தூங்கும் போது மூளை பெரிய அளவில் வேலை செய்வதில்லை என்று தான் பலரும் நினைக்கின்றனர். ஆனால் இரவில் நாம் தூங்கும் போது தான் மூளை மிகவும் சுறுசுறுப்பாக வேலை செய்கிறது. மூளை இரவில் தூங்குவதே இல்லை. மூளையை பற்றிய மிகவும் விந்தையான உண்மை, நீங்கள் நம்புவது கூட கடினம். ஆனால், உண்மை அது தான் மனித மூளையில் வருங்காலத்தை கணிக்க முடியும் என்ற உண்மை.

நாம் தூங்கும் போது, நம் கனவில் நடக்கும் சம்பவங்கள் நிஜ வாழ்க்கையில் கூட நடக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். நமது மூளையில் இருக்கும் 'டோபமைன்' எனும் அமைப்பு. இது வரை நடக்காத சம்பவங்களைப் பற்றி உங்களுக்கு அறிகுறிகளை அளிக்கும். அதன் மூலம் வருங்காலத்தை நாம் கணிக்கலாம் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

மூளையின் அளவு ஒரே மாதிரியான அளவில் இருப்பதில்லை. பெரிய அளவு மூளையை கொண்டவர்கள் தீர்வு கான்பதிலும், வெளிப்புற நிகழ்வுகளை புரிந்து கொள்வதற்குரிய சிறந்த திறன்களை கொண்டிருப்பார்கள் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இதையும் படியுங்கள்:
மன அழுத்தத் தொப்பையா? ஹார்மோன் தொப்பையா? உங்களை பாடாய்ப்படுத்தும் வயிறு குறைய எளிய தீர்வுகள்!
Human brain | மனித மூளை

டீனேஜ் பருவத்தில் உள்ளவர்களின் மூளை முழு வளர்ச்சியடைந்தது அல்ல. அவர்களின் மூளை தொடர்ந்து வளரும் நிலையில் இருக்கிறது என்கிறார்கள். அதனால் தான் இந்த பருவத்தில் இருப்பவர்களை இரண்டாம் கெட்ட வயது என்கிறார்கள்.

நமது நினைவுகள் எல்லாம் நமது மூளையில் ரசாயன பதிவுகளாக சேமிக்கப்படுகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. எனவே நீங்கள் நினைப்பதை விட அதிகமானவற்றை கற்று நினைவில் வைத்துக் கொள்ள வசதியாகவே மூளை படைக்கப்பட்டுள்ளது. மனிதனுக்கு உள்ள சிறப்பம்சங்களில் ஒன்று, அவனது நீளமான, ஆழமான ஞாபகத்திறன்.

ஆனால் ஓர் உண்மை தெரியுமா? மனித மூளையின் செல்களில் 96 சதவீதம், ஞாபக சக்தி தொடர்பான பணிகளில் ஈடுபடுவதில்லை. மனிதன் தனக்குள்ள மொத்த நினைவாற்றல் திறனில் 4 சதவீதத்தை தான் பயன்படுத்துகிறான். உலக மக்களில் ஒரு சதவீதத்தினரே தங்களின் ஞாபகசக்தியை திறமையுடன் பயன்படுத்துகின்றனர் என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

இரவு நேரத்தில் குறிப்பாக அதிகாலை 2 - 4 மற்றும் மதியம் 12 - 2 மணி வரை நினைவாற்றல் பலவீனமாக இருக்கும் என்கிறார்கள். அந்த நேரத்தில் கணிதப் பணியை செய்வதால் பல தவறுகள் ஏற்படும் என்கிறார்கள்.

இதையும் படியுங்கள்:
சாப்பிட்டவுடன் தண்ணீர் குடிப்பவரா நீங்கள்? உடனே நிறுத்த வேண்டிய முக்கியக் காரணங்கள்!
Human brain | மனித மூளை
மருத்துவ மற்றும் பாதுகாப்பு விழிப்புணர்வு (Disclaimer): இந்த கட்டுரையில் உள்ள தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே வழங்கப்பட்டுள்ளன. இவை தொழில்முறை மருத்துவ ஆலோசனைகளுக்கு மாற்றாகாது. அவசர சிகிச்சைக்கும் மருத்துவ ஆலோசனைக்கும் தகுந்த மருத்துவரை அணுகவும்.

Reference

logo
Kalki Online
kalkionline.com